அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில்

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இந்த மென்பொருளை இப்போ Update செய்திருக்கோம்.
Update ல் நிறைய விஷயங்கள் பதிவு செய்திருக்கோம்.
அதில் மிக முக்கியமாக நம் அட்சய லக்ன பத்ததியில் கடைசியாக ஒரு ஜாதகதில் ,பிறந்த தேதி, பிறந்த நேரம் , பிறந்த இடம் பதிவு செய்து Submit கொடுத்த உடனே அதில் horoscope எல்லா விவரங்களும் வரும்.
அதில் கடைசியாக இப்பொழுது Notes என்ற ஒரு காலத்தை உருவாக்கியிருக்கோம்.
ஏன் இதை உருவாக்கினோம்? என்றால் இந்த அட்சய லக்ன பத்ததியில் நிறைய விஷயங்கள் Time Correction செய்யும்பொழுது கடந்த காலத்தில் நடந்த ஒரு 4, 5 நிகழ்வுகள் கேட்போம்.
அதாவது Transit /event
எப்ப வீடு வாங்கினீங்க?
எப்ப வீடு இடம் விட்டு இடம் மாறுனிங்க?
எப்போ வெளிநாடு போனீங்க ?
எப்ப மருத்துவமனை போனீங்க?
கல்யாண தேதி எப்பொழுது?
கல்யாணம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் எப்ப நடந்தது ?
இல்லை குழந்தை பிறந்த தேதி என்ன ?
இந்த மாதிரி ஒரு நிகழ்வுகளை நாம் கேட்டு அதில் பதிவு செய்து வைத்துக் கொண்டால் நாம் ஒவ்வொரு ஜாதகத்தையும் மறுபடி-மறுபடி ஆய்வு செய்யும் பொழுது அது பயன்படும்.
ஏன்னா? ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனியாக எழுத முடியாது.
சாப்ட்வேரில் ஜாதகத்தை பதிவு செய்துவிட்டு அதை நோட்டில் எழுதும்பொழுது அது பயன்படாமல் இருந்தது.
அதுக்காகதான் சாப்ட்வேரில் #Notes என்ற காலத்தை கொடுத்து நீங்கள் நம்முடைய தரகுகளை அதில் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். அவர்களுடைய போன் நம்பர், அவர்களுடைய பெயர், அப்பா பெயர், அம்மா பெயர், அவர்களுடைய details கலெக்ட் பண்ணலாம்.
நாம் சின்ன சின்ன நிகழ்வுகளை எல்லாம் அதில் பதிவு பண்ணும் பொழுது அது Save ஆகும்.
நாம் எப்பொழுதெல்லாம் ஜாதகத்தை எடுத்து ஆய்வு செய்யும் பொழுது திருமண தேதி எப்படி நடந்து இருக்கு?
திருமண தேதி என்பது காதல் திருமணம் நடந்து இருக்கா?
காதல் திருமணம் இல்லையா?
இல்லை விருப்பப்பட்ட திருமணம் பிரச்சனையாகி நடந்ததா? பிரச்சனையாகி நடக்கலையா? இப்படி நிறைய நிகழ்வுகள் நாம் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளலாம்.
என்ற விஷயத்தை நாம் அட்சய லக்ன பத்ததியில் இப்போ புதுசா Update செய்து உள்ளோம்.
கண்டிப்பாக நீங்கள் update செய்யுங்கள்.
நன்றி.
வணக்கம்.

பிரமிக்கவைக்கும் பிரம்ம முகூர்த்த ஜோதிடர் | ALP ஜோதிடம் | மர்மம் |

பிரமிக்கவைக்கும் பிரம்ம முகூர்த்த ஜோதிடர் | ALP ஜோதிடம் | மர்மம் |

பிரம்ம முகூர்த்தத்தில் ONLINE CLASS எடுக்கும் புதுமையான பிரம்ம முகூர்த்த ஜோதிடர். ALP என்னும் ஜோதிடமுறை கொண்டு லக்னம் மற்றும் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் அதிசயம்.

https://www.youtube.com/watch?v=bAr6FDDcsqQ&t=301s

கர்மா என்றால் என்ன

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். கர்மா என்றால் என்ன? நம்முடைய எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு நிகழ்வு தான் காரணம் என்கிறோம். நிகழ்வுகள் எண்ணங்களாக, செயல்களாக, ஆசைகளாக, யோகங்களாக, அசுப யோகங்களாக, ஒருவருடைய வாழ்க்கையில் நடக்க கூடிய அத்தனை நிகழ்வுகளுக்கு பின் இயங்குவது தான் கர்மா. நம்முடைய வாழ்க்கையின் இயக்குனர் கடவுள். இது நமக்கு தெரியாது. நம்மை உருவாக்கியவர் தான் நம்முடைய அத்தனை செயல்களுடைய கட்டுப்பாடு. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கக் கூடிய அத்தனை செயல்களே கர்மா. செயல்கள், எண்ணங்கள் என்பதற்கு தான் கர்மா என்ற ஒரு விஷயம். எண்ணங்களும் செயல்களும் எதன் மூலமாக ஒரு மனிதனை இயக்கும் என்றால் ஆசைகள். ஒரு மனிதனுடைய ஆசைகள் மூலமாக தான் கர்மா தொடரும், ஆசைகள் இல்லை என்றால் கர்மா தொடராது. ஆசைகள் இருக்கும் வரையில் கர்மாவும் இருக்கும். கர்மா என்பது குழந்தைகள் முதல் மனிதர்கள் வரை சக மனிதர்களாக வாழும் அத்தனை பேருக்கும்,மரம் விலங்கு உலகத்தில் இருக்கும் அத்தனை உயிர்களுக்கும் கர்மா என்ற செயல் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆசைகள் தான் கர்மா, ஆசைகளை எந்த அளவிற்கு மறுக்க முடியுமோ, அந்த அளவிற்கு கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை மாறும். நன்றி, வணக்கம்.

https://youtu.be/poA9sAK6PH0

திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள்

திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒரு நிறையும் இருக்கும் ஒரு குறையும் இருக்கும். 120 வருடம் ஒருவருக்கு சந்தோஷமாகவும் அமையாது. கெட்டதாகவும் அமையாது. அதே போல் நம்முடைய அட்சய லக்னம் ஒவ்வொரு 10 வருடத்திற்கும் லக்னம் மாறும் லக்னம் நகரும். வயதுடைய லக்னத்திற்கு நம்முடைய தசா புக்தியை இணைத்து பலன் பார்க்க வேண்டும். வயதுடைய லக்னம் எப்படி கணக்கீடு செய்வது என்பது நிறைய வீடியோக்கள் யூடியூபில் உள்ளது பாருங்கள். அட்சய லக்ன பத்ததி, ALP Astrology என்று பார்த்தால் தெரியும். உங்களுடைய லக்னம் தனுசு லக்னம் என்றால் 40 வயதில் Alp லக்னம் 4 கட்டம் நகர்த்தி ஒரு கட்டத்திற்கு 10 வருடம், 40 வயதில் ALP லக்னம் : மீன லக்னம் மீன லக்னத்திற்கு தசாபுத்தி பார்த்தால் கண்டிப்பாக யோகமாக அமையும். உதாரணமாக புதன் தசை நடந்தால் வீடு வாங்குவார். புதன் தசை நடந்தால் எதிர்பாராத தீடீர் திருமணம் அமையும். 30 – 40 வயதில் புதன் தசை நடந்தால் 30 வயதில் தான் யோகம். அதுவே ஜென்ம ராசி மிதுன ராசியாக இருந்தால் பஞ்சமஸ்தானதிபதி ஆயில்யம் நட்சத்திரத்திலிருந்து புதன் தசை நடத்தினால் கண்டிப்பாக காதல் திருமணம். கல்வி என்றால் இரண்டாவது பாவகம் 40, 60 வயதாக இருந்தாலும் படிப்பு என்றால் 2வது பாவகம். ஏன்னா? லக்னம் நகரும் பொழுது அதனுடைய குடும்ப சூழ்நிலைகள் அதனுடைய படிப்பு சூழ்நிலைகள் எல்லாம் 2ம் பாவகம் தான் குறிக்கும். கண்டிப்பாக 2ம் பாவகத்தில் உள்ள கிரகங்கள் உடைய தன்மைகள் 11ம் வீட்டைப் பார்த்தால் கண்டிப்பாக யோகம் உண்டு. மேல்நிலைக்கல்வி படிப்பார்கள். சூரியன் செவ்வாய் பார்த்தால் Phd படிப்பாங்க. குரு பார்த்தால் CA ல் மேல்நிலை கல்வி படிப்பாங்க. எந்த இரண்டாம் பாவக நட்சத்திர அதிபதியோ ,இரண்டாம் பாவக லக்ன புள்ளியோ எந்த 11ம் வீட்டை பார்த்தால் கண்டிப்பாக யோகம் உண்டு. 2ம் அதிபதி 6 ல் இருந்தால் ரண ருண சத்ரு கல்வி மருந்து மாத்திரைகள் சம்பந்தப்பட்டது, டாக்டர் சம்பந்தப்பட்டது, இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்டது, இரண்டாம் பாவகம் அதிபதி 6ல் சம்பந்தப்படும் பொழுது கண்டிப்பாக ரண ருண சத்ரு கல்வி படிப்பார்கள். 2ம் அதிபதி 8 ல் இருந்தால் கண்டிப்பாக டிப்ளமோ சம்பந்தப்பட்ட படிப்பு நல்லா இருக்கும். 2ம் அதிபதி 10 ல் இருந்தால் தொழில் கல்வி நல்லா இருக்கும். இரண்டாம் வீட்டு அதிபதி 9ல் இருந்தால் அப்பா கல்வியை பெறுவார்கள். ALP க்கு இரண்டாம் வீட்டு அதிபதி 4ல் இருந்தால் அம்மா கல்வியை பெறுவார்கள். ஒவ்வொரு படிப்பும் கிரகத்துடைய கூட்டு தன்மைகள் வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். டாக்டருக்கு படிக்க வேண்டும் என்றால்? அட்சய லக்னத்திற்கு இரண்டாம் பாவக அதிபதி லக்னம், ALP க்கு 6ல் நின்றால் கண்டிப்பாக ஜாதகர் டாக்டர் படிப்பாங்க. மருந்து மாத்திரைகள் சம்பந்தப்பட்ட படிப்பு படிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் கிரகங்கள் உடைய ராசி தன்மைகள் தெரிந்திருக்க வேண்டும். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_number_9786556156

https://youtu.be/6R0XDMWQ790