கேது கிரஹ தோஷ நிவாரண பரிகாரங்கள்

10428611_961728723846620_1111655373682236275_n

 

1.43 நாட்களுக்குத் தொடர்ந்து நாய்க்கு சப்பாத்தி அல்லது ரொட்டி கொடுக்கலாம்.

2.வெள்ளை அல்லது கருப்பு எள் தானமளிக்கலாம்.

3.ஒரு வெள்ளி நாணயத்தைப் பட்டு நூலில் கட்டி கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

4.பாய்,தரை விரிப்பு,போர்வை இவற்றை ஆன்மீக அல்லது புனித ஸ்தலங்களுக்கு தானமளிக்கலாம்.

5.வெள்ளி மோதிரம் அணியலாம்.

6. விநாயகர் அல்லது காலபைரவரைத் தொடர்ந்து வழிபட நல்ல பலன்களைத்  தரும்.

7.காலபைரவருக்கு வாழை இலையில் பச்சரிசி பரப்பி அளிக்கலாம்.

8.திரயோதசி திதியில் விரதம் இருக்கலாம்.

9.மாலை வேளையில் விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றலாம்.

10.பிராமணர் அல்லது பூசாரிக்கு சர்க்கரை (சீனி) தானமளிக்கலாம்.

11.காலை மாலை பெற்றோரின் காலில் விழுந்து அவர்கள் ஆசியைப் பெறலாம்.

12.சுமங்கலிப் பெண்களுக்கு எள்ளுருண்டை தானம் செய்யலாம்.

13.பச்சை நிற கர்சீப் வைத்துக் கொள்வது நல்லது.

14.ஞாயிற்றுக்கிழமை அன்று கன்னிப்பெண்களுக்கு  லசி வழங்கலாம்.

15.ஒரு ஐஸ் கட்டியை நாலு துண்டாக உடைத்து அதை ஓடும் நீரில் போட்டு விடவும்.

16.வெறும்  தரையில் படுத்து உறங்கக் கூடாது.

17.வெண்பட்டு நூலை கையில் கட்டிக்கொள்ளவும்.

18.காதில் தங்கக்  கம்மல்,கடுக்கன் அணியலாம்.

19.பஞ்சலோகத்தில் செய்யப்பட மோதிரம் அல்லது காப்பு அணியலாம்.

20.வாழைப்பழம்,கோதுமை இவற்றை ஒரு மஞ்சள் தியில் வைத்து பிராமணர் அல்லது பூசாரிக்கு தானமளிக்கலாம்.

21.மஞ்சள் சந்தனம் நெற்றில் இட்டுக் கொள்ளவும்.

 

http://www.jothidam.tv/

கே‌ள்‌வி-ப‌தி‌ல்

download

1. ராஜாதிராஜ விண்ணகரம் என்பது எக்கோவிலைக் குறிக்கும்?
2. செண்பகாரண்யம் எக்கோவிலைச் சுற்றி உள்ளது?
3. தட்சிண துவாரகை என்பது எந்தக் கோவிலைக் குறிக்கும்? (மூன்றும் ஒரே கோவில் தான்)
3. இந்தக் கோவிலின் மூலவரின் பெயர் என்ன?
4. இந்தக் கோவிலைக் கட்டியது யார்? புதுப்பித்தது யார்?

பதில்கள்
1. 2. 3. மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில்
4. பரவாசுதேவர் (ஜகதோதாரணா எனத்தொடங்கும் பாடலில் கூட வரும் ” பரம புருஷனா, பரவாசுதேவனா)
5. கட்டியது இராஜ ராஜ சோழன் (1018-1054 AD). புதுபித்தது குலொத்துங்க சோழன் (1074 – 1125 AD) மற்றும் விஜயராகவ நாயக் (1634-1675 A.D.)

நந்திபுர விண்ணகரம் என்ற தலம் தக்ஷிண ஜகன்நாதம் என்று அழைக்கப்படும். மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில் தக்ஷிண த்வாரகை என்று அழைக்கப்படும்.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

                                                       
                                             353a3a4
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:
1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்.
2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.
4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.
5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.
6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.
7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.
8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.
9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.
10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.

பித்ரு சாபம் நீங்க,பூர்வ ஜன்ம பாபங்களின் தீய விளைவுகள் தீர

ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசை அன்று அல்லது ஏதேனும் ஒரு அமாவாசை அன்று ஆரம்பம் செய்யவும்.பின் இயன்ற வரை ஞாயிறு தோறும் செய்துவர பூர்வ ஜன்ம பாபங்கள் தீரும், சுப காரியங்களில் தடை நீங்கி நினைத்த காரியங்கள் கைகூடி வரும்.ஜாதகத்தில் பித்ரு சாபம் உடையவர்கள் இதைச் செய்ய பித்ரு சாபம் நீங்கி வாழ்வில் மங்களமான நிகழ்வுகள் நடக்கத் தொடங்கும்.

காலைக்கடன்களை முடித்துக் குளித்தபின் ஈர  வஸ்திரத்துடன் சூரியனை  நோக்கி கைகூப்பி நின்று கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.

மந்திரம்: ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்| சஹசிவ சூரியாய |வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா

 
Ramanathapuram-Temple-SMR02

பஞ்சாட்சரம்

11013458_862145247182111_6925839214100243754_n

மூன்று வகை பஞ்சாட்சரம்

நமசிவய – ஸ்தூல பஞ்சாட்சரம்

சிவயநம – சூட்சும பஞ்சாட்சரம்

சிவசிவ – காரணபஞ்சாட்சரம்

நமசிவய – ஸ்தூல பஞ்சாட்சரம்

நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை

ந – நிலத்தைக் குறிக்கிறது,

ம – நீரைக் குறிக்கிறது

சி – நெருப்பைக் குறிக்கிறது

வ – காற்றைக் குறிக்கிறது,

ய – ஆகாயத்தைக்குறிக்கிறது

ந – கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது,மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி

ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது,கருப்பு நிறம், அத்திரி மகரிஷி

சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது,புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி

வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது,பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி

ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது,சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி

சிவயநம – சூட்சும பஞ்சாட்சரம்

சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.

அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”

“சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே”

திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே”

“சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால் அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே…”

சிவசிவ – காரணபஞ்சாட்சரம்

சிவ சிவ என்பது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறப் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.

“சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்

சிவ சிவ என்கிலார் தீவினையாளர்

சிவ சிவ என்றிடத் தேவருமாவர்

சிவ சிவ என்னச் சிவ கதி தானே”