மீனம்

Spread the love
 jothidam.tv
பொது பலன்;
உதவும் குணத்தாலும், உழைக்கும் கரத்தாலும் உயர்ந்த நிலையை அடையும் மீனராசி அன்பர்களே!

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் அமைப்பாகும். இதுமட்டுமின்றி இந்த ஆண்டின் முற்பாதியில் உங்கள் ராசியாதிபதியான குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். புத்திரவழியிலும் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையாச் சொத்து வகையில் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப் பலன்களையும் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எதிர்பார்த்த லாபத்தினை அடைந்துவிட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெறுவீர்கள். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் நல்லது. தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஆண்டின் தொடக்கமானது. அற்புதமான பதவி உயர்வுகளையும், பாராட்டுதல்களையும் அள்ளித் தருவதாக அமையும். திறமைக்கேற்ற கௌரவமான நிலையினை அடைவீர்கள். பொருளாதார நிலையும் ஊதிய உயர்வுகளால் மேம்படும். புதிய வேலைவாய்ப்பும் எதிர்பார்த்தபடியே கிட்டும். நல்ல நிர்வாகத்திறனும் பலரை அதிகாரம் செய்யக்கூடிய ஆற்றலும் உண்டாகும். ஜூலை 5-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ருண, ரோக ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவது உங்களின் கௌரவத்துக்கு நல்லது.

உங்கள் ராசிக்கு அதிபதியான குரு இந்த ஆண்டின் முற்பாதி வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம்செய்வது நல்ல அமைப்பாகும். இதனால் தொழில், வியாபாரரீதியாக ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் வெல்லக்கூடிய ஆற்றலும் உண்டாகும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி குரு 6-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களை ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *