நான் பாசக்காரன். பாசத்தை பற்றி இன்று உங்களுடன் பேச வந்துள்ளேன்

Spread the love

அன்பே சிவம் ,அன்பே ஆனந்தம், அன்பே வாழ்க்கை,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

நான் பாசக்காரன். பாசத்தை பற்றி இன்று உங்களுடன் பேச வந்துள்ளேன்,

பாசம் என்பது உயிருள்ள பொருள்கள்மீது மட்டுமில்லை, உயிரற்ற பொருட்களின் மீதும் பாசம் வைக்கணும். அதை தான் கூறுகிறேன்.

பொருட்களை இது உயிருள்ளது உயிரற்றது என பிரிக்க வேண்டாம் எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள்.கண்டிப்பாக வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.

இது உயிரற்றது ,உயிர் உள்ளது என்று ஒவ்வொரு பொருட்களை நாம் சொல்கிறோம். ஆனால் அதில் ஒவ்வொன்றுக்கும் உயிர் உண்டு.

வாழ்க்கையில் நாம் எப்படி இயங்குகிறோமோ அதேபோல்தான் வாகனங்களும் இயங்குகிறது.

நான் ஒவ்வொரு தடவையும் வெளியில் செல்லும் பொழுது வீட்டை தொட்டு வணங்கி விட்டு தான் செல்வேன். அது எனக்கு வீடு கையசைத்து போய்ட்டு வா என்று கூறுவது போல் இருக்கும்.

தேவையான பொருள், தேவையற்ற பொருள் என்ற விஷயத்தை விட நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தனை பொருட்களுக்கும் ஒருமுறை நன்றி சொல்லுங்கள்.

நீங்கள் நன்றி சொல்லும் பொழுது ஒரு பாசம், ஒரு இணைவு உங்களை அடுத்த கட்ட பரிணாமத்திற்கு அழைத்து செல்லும்.

உங்கள் பேனா உங்கள் சட்டைப்பையில் இருப்பதற்கு நன்றி சொல்லுங்கள். அதன்பிறகு நீங்கள் போடும் ஒவ்வொரு கையெழுத்தும், வெற்றி பயணத்திற்கான கையெழுத்தாகும்.

நான் ஒவ்வொரு நாளும் காலையில் விழித்தவுடனும், தூங்க செல்வதற்கு முன்னும் பஞ்சபூதங்களுக்கு நன்றி சொல்வேன். கடவுளுக்கும் நன்றி சொல்வேன்.

பஞ்சபூதம் ஆன இந்த உடல் எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பது என்னுடைய ஆனந்தமான வார்த்தை.

நீங்கள் ஆனந்தமாக வாழ வேண்டுமென்றால் முதலில் நன்றி சொல்லுங்கள்,

கை தட்டுங்கள்,சந்தோஷமான ஒரு நிகழ்வை கொடுக்கும் .உங்கள் வாழ்க்கை மாறும்.

உணவு சாப்பிடும் பொழுது இந்த உணவை தொட்டு நன்றி சொல்லுங்கள். அந்த உணவு உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு சக்தியாக அமையும்.உடலுக்கு மருந்தாக சென்று உடலும் மனமும் சந்தோஷமாக இருக்கும்.

வாழ்க்கையில் எல்லா பொருட்களின் மீதும் அன்பு செலுத்துங்கள். இது வேண்டும், இது வேண்டாம் என நினைக்க வேண்டாம்.உங்களுடைய தேவையான பொருளுக்கு ஒவ்வொரு முறையும் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை கண்டிப்பாக மாறும்.

ஒரு நாள் 10 பொருட்களுக்கு நன்றி சொல்லுங்கள். அடுத்த நாட்கள் 20 பொருள்கள் உங்கள் கண்ணில் படும்.

தொலைத்தொடர்பு கோபுரங்கள் அதற்கு ஒரு நன்றி சொல்லுங்கள்.அதன் பிறகு உங்களுக்கு போன் வந்தால், அந்த இணைப்பு துண்டிக்கப் படாமல் வரும்.

இது என்னால் உணர முடிந்த ஒரு விஷயம்.

எல்லா பொருட்களின் மீதும் அன்பு செலுத்துங்கள்.

ஆனந்தமாக வாழ்வதற்கு எல்லா பொருட்களும் துணையாக இருக்கும்.

நல்லதொரு நிகழ்வே அமையட்டும் நன்றி, வணக்கம்.

கட்டுரை தொடர்பான நிகழ்வில் https://alpastrology.com/blog/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/cRpv-GzlSPI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *