ரேவதி நட்சத்திரம் 3ம் பாதம்:

Spread the love

ரேவதி நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் ரேவதி நட்சத்திரம் 3ம் பாதம்.

1 வருடம், 1 மாதம், 10 நாள் ரேவதி நட்சத்திரம் 3ஆம் பாதம் சுப விரயச் செலவுகளை கொடுக்கக்கூடிய காலகட்டம்.

தேவையில்லாத விரய செலவுகள் வரும்.
அதை சுப விரயச் செலவுகளாக மாற்ற வேண்டும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் யோகத்தை கொடுக்கும்.
வெளிநாடு செல்லலாம்.

நான் இருக்க இடத்தில் இருப்பதால் எனக்கு பிரமோஷன் கிடைக்குமா? கிடைக்காது.
லாபம் கிடைக்குமா? கிடைக்காது. மகிழ்ச்சி கிடைக்குமா? கிடைக்காது.

கிரகங்கள் உடைய அமைப்பு படி ஒரு வருடம் நன்றாக இருந்தால் ஒரு வருடம் நன்றாக இருக்காது.

ரேவதி நட்சத்திரம் 3ஆம் பாதம் கரடுமுரடான பாதிப்புகள்.
வீடு, வண்டி, வாகனம், சொத்து, சுகம், கணவன் மனைவி உறவுகள், மருத்துவமனை, விரய செலவுகள்,
எல்லாமே விரயமாக கூடிய காலகட்டம்.

அம்மாவுடைய உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஏன்னா? நாலாம் அதிபதி புதன் விரயமாக இருந்து இந்த காலகட்டம் பாதிப்பை ஏற்படுத்தும்.

பாதயாத்திரை செல்வது நல்லது.
பத்து, பதினைந்து நாட்கள்.

ஒவ்வொரு மனிதரும் தான் இருக்கும் இடத்தை விட்டு வாழ்க்கையில் பத்து பதினைந்து நாட்கள் ஏதாவது ஒரு இடத்தில் இருக்க வேண்டும்.
அது மகிழ்ச்சியை உண்டாக்கும்.

பாதயாத்திரை, கோவில்கள், புண்ணிய ஸ்தலங்கள் செல்லக்கூடிய காலகட்டம் ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம்.
கவனமாக இருக்க வேண்டும்.

விரயச் செலவுகளை சுபவிரயச் செலவுகளாக மாற்றிக் கொள்ளாம். கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

நன்றி வணக்கம்

https://youtu.be/poA9sAK6PH0

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *