சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம் :

Spread the love

சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடை மூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம்.

ஜாதகர் வந்தால்
வருமானம் சம்மந்தப்பட்ட,
குடும்பம் சம்மந்தப்பட்ட,
திடீர் திருமணங்கள் சம்மந்தப்பட்ட,
என் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கு என்ற கேள்விகளை கேட்க வந்திருப்பார்.

என் வாழ்க்கையில் உடல்ரீதியான பிரச்சனை,
மனத்திற்கு ஒப்பான காயங்கள் இருக்கு, விபத்துகள் நடந்துள்ளது,
வண்டி வாகனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளது,
இப்படி நிறைய கேள்விகளை கேட்பார்.

ஏன்னா? துலாம் லக்னத்திற்கு 2,7க்கு உடைய மராகாதிபதி செவ்வாய் வரக்கூடிய காலகட்டத்தில் ஜாதகர் மிக மிக கவனமாக ஜாதகத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

ஜென்ம லக்னத்திலிருந் ALP லக்னம் துலாம் லக்னம்.
ஜாதகருக்கு சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம் மிகப்பெரிய யோகத்தையும் கொடுக்கும்.
அதே போல் பெரிய பாதிப்புகளையும் தரும்.

அவருடைய வாழ்க்கையில் இவ்வுளவு நாள் திருமணம் நடக்கவில்லை என்றால் திருமணம் உண்டு.
குழந்தைபேறு உண்டு.
எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு.

சித்திரை 3, 4 ம் பாதம் துலாம் லக்னம் சென்றால் வைத்தீஸ்வரர் கோவில்க்கு சென்று முத்துகுமார சுவாமி தரிசனம் செய்வது மிகச் சிறப்பு.

ஒவ்வொரு லக்னமும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் போது அவர்களுக்கு யோகம் உண்டு.

சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம் செல்லக்கூடியவர்கள் வைத்தீஸ்வரர் கோவில்க்கு ஒரு நாள் இரவு அங்கு தங்கிட்டு வந்தால் அவருடைய
நோய் நொடி, பிணி எல்லாம் நீங்கும்.

கடன் அடையவில்லை என்பவர்கள் கண்டிப்பாக வைத்தீஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

தையல்நாயகி தரிசனம் செய்வது கண்டிப்பாக யோகத்தை கொடுக்கும்.

வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படுத்துவார் முருகப்பெருமான்.

27 நட்சத்திரக்காரர்களும் முருகப்பெருமானை வணங்குவது சிறப்பு.

சித்திரை நட்சத்திரம் விரும்பக்கூடிய இடம் வைத்தீஸ்வரர் கோவில்,
பழனி மலை முருகன் கோவில்.

சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம் இடம் வாங்க கூடிய யோகம் உண்டு.
ஆனால் பிரச்சனைகளும் இருக்கும்.

உங்களுடைய தனிப்பட்ட ஜாதகத்தை ஆய்வு செய்ய இந்த வீடியோவின் பின்னோட்ட பதிவில் பதிவு செய்யுங்கள்.

மீண்டும் ஒரு இனிய தொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்

https://youtu.be/Z2WEq_PUxDs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *