பூசம் நட்சத்திரம் 1ம் பாதம்:

Spread the love

பூசம் நட்சத்திரம் 1ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு தனித்தன்மை உண்டு.
சனி பகவானுடைய நட்சத்திரத்தில் வரக்கூடிய நட்சத்திரங்கள் புதன், பூசம் நட்சத்திரம்.

பேரின்பம், சிற்றின்பம் என இரண்டு உள்ளது.
அதில் பேரின்பம் என்பதற்கான முதல் நட்சத்திரம் பூசம் நட்சத்திரம்.
நிறைய கஷ்டங்கள் வாழ்க்கையில் அடிபட்டு ஒரு பேரின்பத்தை பெறக்கூடிய நட்சத்திரம் இந்த பூசம் நட்சத்திரம்.

பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம் வரக்கூடிய நாள் எப்படி இருக்கும் எதிர்பாராத திருமண வாழ்க்கை, எதிர்பாராத சந்தோஷங்கள், எதிர்பாராமல் வாழ்க்கையில்
நடக்க கூடிய கடன், வம்பு, வழக்கு, நோய்நொடி போன்ற விஷயங்கள்.
வாழ்க்கையில் நடக்கக் கூடிய அத்தனை விஷயங்களுக்கும் அதிபதியாக வருபவர் இந்த பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.

கண்டிப்பாக கவனமாக இருந்து செயல்பட வேண்டும்.
யாராக இருப்பார் என்றால் ஜாதகரே.
இதற்கு மூலாதாரம் குடும்பம்.
பணம் என்ற விஷயத்தை நோக்கி பயணிக்க கூடிய காலம் இந்த பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.

எதிர்பாராத திடீர் திருமணங்கள். குழந்தைப்பேறு சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
சுப நிகழ்வுகள்.
எதிர்பாராத குழந்தைப்பேறு ஏற்படும் காலம் பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.

முகூர்த்தம் குறிக்கக்கூடிய நாள் மிக முக்கியம் என்று என்னால் உணர முடிந்தது.

பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்டது, வெளியூர் சம்பந்தப்பட்டது,
பதவி உயர்வு சம்பந்தப்பட்டது, இதுநாள்வரையில் படித்த படிப்பிற்கு வேலை இல்லை என்பவர்களுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும்.

டாக்டர்கள் சம்பந்தப்பட்ட படிப்பு படிக்கலாம்.
மறைபொருள் ஆய்வு சம்பந்தப்பட்ட கல்வி படிக்கலாம்.
அதற்கு சனிபகவான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் யோகத்தையும்,
தீய நிலையில் இருந்தால் அவ யோகத்தையும் கொடுக்கும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம் வரும் பொழுது கண்டிப்பாக யோகம் உண்டு.

ஒவ்வொரு மாதத்திலும் பூசம் நட்சத்திரம் வரக்கூடிய நாள் சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபடுங்கள்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வழிபடுங்கள்.
எதிர்பார்ப்பு வரும் பொழுது தான் தோற்று விடுவோம்.

1 வருடம், 1 மாதம், 10 நாள்
பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம் இயங்கும்.
சரணாகதி அடையுங்கள்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://www.amazon.in/dp/B09636FC97

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *