திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம்:

Spread the love

திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் எந்த நேரம் அதிர்ஷ்டமான நேரம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதில் ஒவ்வொரு நட்சத்திர பாதம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம்.

இது பொதுவான பலன்:

திருவாதிரை 4ஆம் பாதம் வரும்பொழுது தொழில் சம்பந்தப்பட்ட கேள்விக்காக வருவார்.

வெளிநாடு செல்லவேண்டும்,
வெளியூர் போக வேண்டும்,
புதிதாக ஒரு விஷயத்தை தொடங்க வேண்டும்,
இல்லையென்றால் யாரையும் கேட்காமல் ஒரு தொழிலைத் தொடங்க கூடிய காலம் திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம்.

உங்களுடைய ஜென்ம லக்னத்தில் இருந்து திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம் அட்சய லக்னமாக சென்றால்,
அதாவது மிதுன லக்னம் திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம் சென்றால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

இரண்டு மூன்று தொழில்களில் ஈடுபட்டு இதைவிட அது சிறந்ததாக இருக்கும் என்று உங்களுடைய வாழ்க்கையில் போராடக்கூடிய நிலைமை ஏற்படும்.

குழந்தைகள் சம்பந்தபட்ட விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
வெளிநாடு சென்றாலும் தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வார்.
சரியான செயல்களைச் செய்யக்கூடிய காலகட்டம்.

சூதாட்டம் மாயமந்திரம் இந்த மாதிரி விஷயங்களில் ஈடுபட கூடாது.
அதுவும் மந்திரவாதியாக இருந்தால் திருவாதிரை 4ம் பாதம் செல்லக்கூடிய காலகட்டத்தில் உடல் உபாதைகள் பாதிக்கும்.
மந்திரவாதிகளுக்கு சித்த பிரம்மை பிடிக்கக்கூடிய காலகட்டம் திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம்.

ஒவ்வொரு நட்சத்திர பாதம் ஒரு காலக்கண்ணாடி,
நீங்கள் யார்? எப்படி கடந்து செல்கிறீர்கள்?
ஜென்ம காலத்தில் நீ பிறக்கும் பொழுது ராகு பகவான் எங்கு இருக்கிறார்?
ராகு பகவானிற்கு கோச்சார ராகு எங்கு இருக்கு?
திருவாதிரை நட்சத்திரம் நாலாம் பாதம் செல்லக்கூடிய காலகட்டத்தில் அதுதான் நடக்கும்.

திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம் ராகுவோடு சம்பந்தப்பட்டது.
5ல் இருந்தால் ஐந்தாம் வீடு பாதிக்கப்படும்.
10ல் இருந்தால் பத்தாம் வீடு பாதிக்கப்படும்.
எட்டாம் வீடு இருந்தால் ஜாதகரே அதை அனுபவிப்பார்.

உங்கள் அருகில் ஜோதிடர்கள் ஜோதிடம் பார்த்தால்
அட்சய லக்ன பத்ததி முறையில் ஜோதிடம் பார்க்க முடியுமா என்று கேளுங்கள்.
யூட்யூபில் நிறைய விஷயங்கள்
அட்சய லக்ன பத்ததி முறையில் ஜாதகங்களை எப்படி கணிப்பது என்ற வீடியோக்கள் உள்ளது.
அதை பாருங்கள்.
அப்பொழுதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை உங்களுக்கு புரியும்.

இதனுடைய சாப்ட்வேர் google Playstore ல் இலவச மென்பொருள் உள்ளது.
அதை பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்து பாருங்கள்.

உங்களுடைய பிறந்த தேதி,
பிறந்த நேரம், பிறந்த ஊர் போட்டு ஆய்வு செய்து பாருங்கள். உங்களுடைய ஜென்ம லக்னம் உங்களுடைய அட்சய லக்ன வரும்.

திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம் வந்தால் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலம்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://www.alpastrology.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *