திருவாதிரை நட்சத்திரம் 3ம் பாதம்:

Spread the love

திருவாதிரை நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம் 3ம் பாதம்.

ஒவ்வொரு நாளும் ஒரு நட்சத்திர பாதம் 1வருடம்,1 மாதம், 10 நாள் கடந்து செல்லும்.

திருவாதிரை நட்சத்திரம் 3ஆம் பாதம் வந்தால் தன்னுடைய பூர்வபுண்ணியம் சம்பந்தப்பட்டது.
தன்னுடைய முன்னோர்கள் சம்பந்தப்பட்டது.
குலதெய்வம் சம்பந்தப்பட்டது.
குழந்தைகள் சம்பந்தப்பட்டது. தோல்நோய் சம்பந்தப்பட்டது.
அலர்ஜி சம்பந்தப்பட்டது.
மந்திரம் தந்திரம் சம்பந்தப்பட்டது.
இந்த பிரச்சனைகளுக்கு தான் ஜாதகர் வருவார்.

ராகு உடைய நட்சத்திரம் திருவாதிரை, சுவாதி,சதயம் செல்லக்கூடிய காலகட்டங்களில் ஜாதகர் வந்தால் இது சம்பந்தப்பட்ட கேள்விகளை அதிகமாக வைத்திருப்பார்.

வெளிநாடு செல்லலாமா? செல்லலாம்.
ஆனால் தன்னுடைய இன்ப துன்பங்கள், சந்தோஷங்கள், மகிழ்ச்சிகள், வருமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,
குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மட்டும் அதிகமாக இருக்கும்.
மற்றபடி ஜாதகர் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை கடந்து செல்லும் காலம் இந்த 1 வருடம், 1 மாதம், 10 நாள்.

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலம்.

பூர்வ புண்ணியம் சம்பந்தப்பட்ட முன்னோர்களுடைய பெயரை காப்பாற்றுவது இந்த திருவாதிரை நட்சத்திரம் 3ம் பாதம்.

இதுநாள் வரையில் குழந்தைகள் இல்லையா? குழந்தைகள் உண்டு.
திருமணம் நடக்குமா? நடக்கும்.
பெண் வீட்டில் இருந்து வருவார்கள்.

தாத்தா பாட்டி பார்த்த, அம்மா பார்த்த, திருமண பொருத்தம் ஆண், பெண் இருவருக்கும் பார்க்கவேண்டாம்.

கோவிலில் பூக்கட்டி பார்க்கக்கூடிய திருமணங்களுக்கு ஜாதகம் பார்க்கக் கூடாது என்பதுதான் விதி.
திருவாதிரை நட்சத்திரம் மூன்றாம் பாதம் இதை செய்யலாம்.

ராகு கேது நட்சத்திரம் வரும் பொழுது பெண்ணிற்கோ ஆணிற்கோ, சந்திரனிலோ, லக்னத்திலோ
ராகு கேது சம்பந்தப்படும்.
இதுதான் அட்சய லக்ன பத்ததி.

google Playstore ல் Alp Astrology app உள்ளது.
அதை பதிவிறக்கம் செய்து பாருங்கள். இலவச மென்பொருள்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://www.youtube.com/channel/UCDDgx1ug0tzbJUMKSHJJf4A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *