ஆயில்யம் நட்சத்திரம் 4ம் பாதம்:

Spread the love

ஆயில்யம் நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் எந்த காலம் அதிர்ஷ்டமான நேரம்.

எனக்கு பிரச்சனை உள்ளது என்றால் வருடம் முழுவதும் பிரச்சனை இருக்காது.
இரண்டு நாள் இருக்கலாம்.

அதேபோல் சந்தோஷம் என்றால் 10 நாள் சந்தோஷமாக இருந்தால், அடுத்த பத்து நாள் இன்பமும் துன்பமும் கலந்து தான் இருக்கும்.
அதனால் ஜாதகருக்கு ஒரு காலகட்டத்தில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்.

ஆனால் ஒரு நட்சத்திர பாதம்
1 வருடம், 1 மாதம், 10 நாள் செல்லக்கூடிய காலகட்டத்தில் அதன் அதிபதி பலமாக இருந்தால், உதாரணமாக,
ஆயில்யம் நட்சத்திரம் அதிபதி புதன் பலமாக இருந்தால் உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

ஆனால் ஆயில்யம் நட்சத்திரத்தில் கோட்சார புதனும், ஜென்ம புதனும் லக்னாதிபதி பலமாக அமைந்தால் உங்களுடைய வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஏனென்றால் உடல் தான் முக்கியம் உங்கள் வாழ்க்கையில்,
அதனால் தான் உடலை பாதுகாக்க வேண்டும்.

தேவையில்லாத உணவு பழக்கங்கள் இருப்பதனால்தான் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.

உணவு பழக்க வழக்கங்களை நீங்கள் சரி செய்தால் உங்களுடைய லக்னம் நல்லா இருக்கும்.

பிறக்கும் போது உள்ள லக்னத்திற்கும் இன்றைக்கு உள்ள லக்னத்திற்கும் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்.

நீங்கள் இன்றைக்கு சந்தோஷமாக நிம்மதியாக சாப்பிட்டால் உங்கள் லக்னம் நன்றாக இருக்கு.

நிம்மதியாக உறங்குகிறார்கள் என்றால் உங்களுடைய அட்சய ராசி, தசாபுக்தி நன்றாக இருக்கு.

உறக்கமும் இல்லை, உணவும் சாப்பிடவில்லை என்றால் உங்களுடைய மனமும், உடலும் ரொம்ப கஷ்டத்தில் உள்ளது.

மனம் சுத்தமாக இருந்து அதே போல் உடலும் எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கை மாறும்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் ஆயில்யம் நட்சத்திரம் 4ம் பாதம்.

இன்றைக்கு எதிர்பாராத திடீர் சந்தோஷங்கள்,
வெளிநாட்டு தொடர்புகள்,
எதிர்பாராத பயணங்கள்,
எதிர்பாராத வேலைவாய்ப்புகள்,
படித்த படிப்பிற்கு திடீர் வேலை வாய்ப்புகள்,
படிக்கக்கூடிய மாணவர்களுக்கு எதிர்பாராத படிப்பு உயர்வுகள்,
வரவுகள், திடீர் திருமணங்கள்,
காதல் திருமணங்கள்,
குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு திடீர் குழந்தைப்பேறு உண்டு.

ஒவ்வொரு நட்சத்திர பாதமும் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும்.

ஒவ்வொரு ஜாதகத்திலும் ஐயமுள்ள விஷயங்களுக்கு அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை கண்டிப்பாக விளக்கம் கொடுக்கும்.

அதிகமான நபர்கள் ஜாதகம் பார்த்தால் மட்டுமே இது இன்னும் அதிக அளவில் மக்களுக்கு போய் சேரும்.

எல்லா மக்களுக்கும் நல்லதொரு தீர்வு நல்லதொரு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதுதான் அட்சய லக்ன பத்ததி உடைய தீர்வு.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://www.alpastrology.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *