திருமணம்… மற்றும்..வேலை…

Spread the love

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அட்சய லக்ன பத்ததி முறையில் எப்படி ஜாதகம் பார்ப்பது.
ஏன்னா? ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒரு தனிப்பட்ட திறமை, தனிப்பட்ட அமைப்பு உண்டு.
ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒரே நேரத்தில் பிறந்திருந்தாலும், 1 நிமிட இடைவெளி வைத்து பார்க்கும் பொழுது அட்சய லக்ன பத்ததி முறையில் பார்க்கும் பொழுது அது வெவ்வேறு பலன்களை குறிக்கும்.

அட்சய லக்ன பத்ததி முறையில் நட்சத்திரங்கள் மாறும்பொழுது மூன்று நிமிடத்திற்கு நட்சத்திர பாதங்கள் மாறும்பொழுது 45 நாள் அல்லது 90 நாள் பலன்கள் மாறுபடும்.

அப்படி பலன்கள் மாறும்பொழுது ஒவ்வொரு நட்சத்திர புள்ளிக்கும் இருக்கக்கூடிய அமைப்பு வெவ்வேறாக இருக்கும்.

405 நாள் ஒரு நட்சத்திர பாதம் இயங்கினால் அடுத்த 45 நாள் ஒரு கிரகம் இயக்கும்,
அடுத்த 5 நாள் ஒரு கிரகம் இயக்கும், அடுத்த 13 . 1/2 மணிநேரம் ஒரு கிரகம் இயக்கும்.
அடுத்த 1 .1/2 மணிநேரம் ஒரு கிரகம் இயக்கும்.
அடுத்த 10 நிமிடம் ஒரு கிரகம் இயக்கும்.
அடுத்த ஒன்றரை நிமிடங்கள் ஒரு கிரகம் இயக்கும்.

இப்படி மாறுபடும் பொழுது உறவுகள் வகையிலும், நண்பர்கள் வகையிலும் ஏற்படும் சூழ்நிலைகள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும்.
அதனால் ஜாதகத்தில் இரு நிலைகளைக் குறிக்கும்.

உதாரணமாக 45 நாள் ஒரு குழந்தைக்கு குரு இயக்கினால் அந்தக் குழந்தை படிப்பில் ஆர்வம் காட்டும்.

அதுவே 45 நாள் சுக்கிரன் இயக்கினால் ஒரு குழந்தைக்கு விளையாட்டு துறையில், விளையாட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டும்.
இரண்டும் படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் காட்டும்.
ஆனால் இரட்டையர்கள் இரு குழந்தைகளுக்கும் வெவ்வேறு துறையாக இருக்கும்.

ஒவ்வொரு இரட்டை குழந்தைகளின் ஜாதகங்களை ஆய்வு செய்யும் பொழுது ஒரு நிமிட இடைவெளியில் அட்சய லக்ன பத்ததி முறையில் பார்க்கும்பொழுது இரு குழந்தைகளுக்கும் பலன்கள் வெவ்வேறாக இருக்கும்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *