வேலை உண்டு

Spread the love

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு நாளும் ஒரு ஜாதகத்தில் எந்த காலகட்டம் யோகமான காலகட்டம் என்பதை பார்க்கிறோம். நம்முடைய பிறப்பு லக்னத்திற்கு நம்முடைய உடல், மனம் எவ்வாறு வளர்ச்சி பெறுகிறதோ அதே போல் நம்முடைய ஜென்ம லக்னத்தில் இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு 10 வருடத்திற்கும் லக்னத்தை மாற்றி பலன் சொல்லும்பொழுது உங்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய அத்தனை நிகழ்வுகளும் யோகத்தை கொடுக்கும். இந்த காலகட்டத்தில் இது செய்யலாம். இந்த காலகட்டத்தில் இது செய்யக்கூடாது. 108 நட்சத்திர பாதங்கள் நம்முடைய வாழ்க்கையில் கடந்து செல்லக்கூடிய யோகத்தை பெறக்கூடிய அமைப்பு நம்மிடம் உள்ளது. 1 நட்சத்திரபாதம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும். 108 நட்சத்திர பாதம் ஒரே மாதிரியாகத்தான் இருக்குமா? இருக்காது. ஒருவருடைய ஜென்ம லக்னத்தின் லக்ன புள்ளி ஒருவருக்கு மேஷ லக்னமாக ஜென்ம லக்னம் இருந்தால் அவர்கள் அஸ்வினி 1லும் பிறக்கலாம், கார்த்திகை 1 லும் பிறக்கலாம். ஆனால் இரண்டு பேருக்கும் 10 வருடம் ஏற்காது ஒருவருக்கு பத்து வருடம் இயக்கலாம். ஒருவருக்கு ஒரு மாதம் இயக்கலாம். மேஷ லக்னத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான பலன் இருக்காது. அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை அடிப்படை தெரிந்த அத்தனை பேரும் கற்றுக்கொள்ள முடியும். மேஷ லக்னம் ஜென்ம லக்னமாக இருந்து இன்றைக்கு வயது 40 அவருக்கு கடக லக்னம் செல்லும். 3 வயது குழந்தைக்கு 30 வயது மனிதருக்கும் வித்தியாசம் இருக்கும். அதுதான் ஜாதகம் அதுதான் யோகம். உங்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய அத்தனை நிகழ்வுகளும் மாறிக்கொண்டே இருக்கும். எல்லாவற்றிற்கும் காரணம் உங்களுடைய லக்ன புள்ளி. நன்றி, வணக்கம்.

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_alpastrologynumber_9786556156

https://youtu.be/T22b-yoFYXI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *