Spread the love

அனைவருக்கும் வணக்கம்.

இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.

நான் உங்கள் பொதுவுடை மூர்த்தி,

அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆராய்ச்சியாளர்.

 

அட்சய லக்னம் பத்ததியில் நிறைய விஷயங்கள் பார்க்கிறோம்,

2ம் பாவகம் படிப்போடு சம்பந்தப்பட்ட பாவகம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் ஒரு ஜாதகத்தில் ஜாதகரை பற்றிய கேள்விகளுக்கு அதாவது ALP லக்னம் எங்கு இருக்கோ, அந்த ALP லக்னம் தான் ஜாதகரை பற்றிய கேள்விகள்.நல்லா இருக்காரா? நல்லா இல்லையா?

 

ஜாதகருடைய படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு அந்த ALP லக்னத்திற்கு இரண்டாம் வீடு, ALP லக்னத்திற்கு இரண்டாம் வீடு பலமாக இருந்தால்,வருமானம் நல்லா இருந்தால், குடும்பம் நல்லா இருந்தால்,

படிப்பு நல்லா இருக்கும்.

அப்பா நல்லா இருந்தால், அம்மா நல்லா இருந்தால் படிப்பு நல்லா இருக்கும் அதுதான் விஷயம்.

 

2ம் நட்சத்திரம் போகக்கூடிய காலகட்டங்களில்,

உதாரணமாக மேஷ லக்னம் எடுத்துக்கலாம்,

மேஷ லக்னம் ஒருவருக்கு ALP லக்னமாக போகிறது, 17 வயதிற்கு அப்றம் மேல்நிலை கல்வி, மேஷலக்னம் ALP என்றால், 2ம் வீடு சுக்ரனுடைய வீடு, சுக்ரனுடைய நட்சத்திரங்கள் யார் யாருக்கெல்லாம் வருகிறதுதோ ,அதாவது 17 வயதில் யார் யாருக்கெல்லாம் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் ஒருவருக்கு ALP லக்னம் 17 வயதில் போனால் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பு உண்டு.

 

சூரியன் சம்பந்தப்பட்டால், கேது சம்பந்தப்பட்டால், சனி சம்பந்தப்பட்டால், செவ்வாய் சம்பந்தப்பட்டால் மருத்துவர் என்று ஒரு விஷயம் இருக்கு.

ஆனால், ஒரு ஜாதகத்திற்கு சுக்கிரன் பலப்பட்டால் மட்டுமே அவருடைய வாழ்க்கையில் மிகப் பிரம்மாண்டமான ஒரு மருத்துவராக மாற முடியும்.

இதற்கு இரண்டாவது விஷயம் கிடையாது நடக்கும்னா நடக்கும்.

 

1) பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் ஒருவருக்கு 17 வயதில் இருந்து 21 வயதிற்குள் லக்ன புள்ளி போனால் அங்கு சுக்கிரன் பலப்பட்டால் அவருக்கு யோகத்தை கொடுத்துவிடும். அவர் டாக்டர்.

இல்லை சார் சுக்கிரன் சம்பந்தப்படவில்லை,.சனி சம்பந்தப்படவில்லை,ராகு கேது சம்பந்தப்படவில்லை சூரியன் சம்பந்தப்படவில்லை செவ்வாய் சம்பந்தப்படவில்லை நான் டாக்டர்.

சரி 2ம் பாவக அதிபதி உதாரணமாக மேஷ லக்னத்திற்கு இரண்டாம் அதிபதி சுக்கிரன் 6ம் வீட்டில் இருப்பார் அதுதான் விஷயம்.

6ம் வீடு என்பது ரண அருண சத்ரு ஸ்தானம், அதாவது,

ஜாதகர் அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்டது,

ரத்தம் சம்பந்தப்பட்டது, மருத்துவம் சம்பந்தப்பட்டது, நோய் சம்பந்தப்பட்டது

இவர் இதையெல்லாம் தீர்க்கக் கூடிய நபராக அங்கு போய் மாறுவார்.

 

2) 6, 8, 10ல் 2ம் நட்சத்திரமோ, இல்லை 2ம் அதிபதியோ இருந்தால் அவர் டாக்டர்.

 

இல்லை சார் எனக்கு 6, 8, 10 ல் சம்பந்தப்படவில்லை,

எனக்கு சுக்கிரனுடைய நட்சத்திரமும் சம்பந்தப்படவில்லை,

ஆனால் நான் டாக்டர் என்று சொன்னார்கள் என்றால்,

கண்டிப்பாக இந்த ஜாதகத்தில் 4ம் வீடு 9ம் வீடுபலப்பட்டிருக்கும்.

இந்த 4, 9 பலப்பட்டால் அப்பா அம்மா டாக்டராக இருப்பாங்க,

பையனை டாக்டராக்கி விடுவார்கள்.

ஆனால் இதில் எல்லாவற்றிலும் சூரியன் சம்பந்தப்பட்டிருக்கும்,

சனி சம்பந்தப்பட்டிருக்கும், செவ்வாய் சம்பந்தப்பட்டிருக்கும்,

கேது சம்பந்தப்பட்டிருக்கும்.

இதெல்லாம் சம்பந்தப்படாமல் கண்டிப்பாக மருத்துவத்தை ஒருவரும் தொட முடியாது.

ஆனால் இந்த 4 பேரிலும் முக்கியமாக ஒருத்தர் வருவார் அவர்தான் சுக்கிரன்.

சுக்ரன்தான் பணம்.

சுக்ரன் 11ம் வீட்டில், 2ம் அதிபதி இருந்தால் வெளிநாட்டில் டாக்டருக்கு படிச்சீங்களா கேட்டா ஆமாம் என்பார்.

2ம் வீட்டு அதிபதி 9ல் இருந்தால் அப்பா டாக்டருக்கு படிக்க வைப்பார்.

 

இதுபோல் இரண்டாம் பாவக அதிபதி 9 நட்சத்திரங்களில் ஏதோ ஒரு நட்சத்திரத்தில் குரு இருந்தால், குரு சம்பந்தப்பட்ட படிப்பு.

இது டாக்டருக்கு மட்டும் இல்லை,

ALP லக்னம் என்னவோ, இதற்கு 2ம் வீடு என்னவோ,ஒன்பது நட்சத்திர பாதம் இருக்கும் கார்த்திகை 2, 3, 4 ,அடுத்து ரோகிணி 1, 2, 3, 4 அடுத்து மிருகசீரிஷம் 1, 2 இந்த ஒன்பது நட்சத்திர பாதத்தில் 17 வயதில் எதில் வேணாலும் பயணிக்கலாம்.

 

மேஷ லக்னம் ALP லக்னம், ALP லக்னத்திற்கு 2ம் வீடு படிப்பு லக்னம், திருமண லக்னம் 3ம் வீடு, வீடு வாங்கனும்னா 4ம் வீடு, குழந்தைகள் சம்பந்தப்பட்டால் 5ம் வீடு இப்படி பார்கனும்.

2ம் பாவகத்தில் இந்த ஒன்பது நட்சத்திர பாதம் இருக்கும்,உதாரணமாக சூரியன் 6ம் இடத்தில் இருந்தால்,மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பு,

சந்திரன் 6ம் இடத்தில் இருந்தால் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பு,

செவ்வாய் 6ல் இருந்தால் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பு, சுக்கிரன் வீட்டில் இருக்கக்கூடிய இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் கண்டிப்பாக மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பு இருக்கும்.

 

அதேபோல் சிம்ம லக்னம் அதற்கு 2ம் வீடு கன்னி லக்னம், எனக்கு 17 வயது நான் மருத்துவம் படிக்கலாமா? எனக்கு வாய்ப்பு இருக்கா? என்று கேட்டால்

2ம் வீடு கன்னியுடைய வீடு, அங்கு உத்திரம், ஹஸ்தம், சித்திரை நட்சத்திரம் இருக்கு இந்த காலகட்டத்தில் அந்த ஜாதகருக்கு யோகத்தை கொடுக்கும்.

 

அதேபோல் தனுசு லக்னம் 2ம் வீட்டில் உத்திராடம்,திருவோணம், அவிட்டம் நட்சத்திரம் இருக்கும். அதேபோல் செவ்வாய் உடைய ALP லக்னம் விருச்சிகம், மேஷம் இது எப்ப போனாலும் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அதிகமான வாய்ப்பு விருச்சகத்திற்கு உண்டு.

விருச்சிக ராசி, விருச்சிக லக்னம் சனிதிசை நடந்தால் இந்த ஜாதகருக்கு எதிர்பாராத யோகத்தை கொடுத்தே தீரும் மருத்துவ படிப்பு.

 

கூகுள் ப்ளே ஸ்டோரில் ALP Astrology என்ற இலவச மென்பொருள் உள்ளது அதில் பிறந்த தேதி, பிறந்த நேரம் , பிறந்த இடம் கொடுத்தால் உங்களுக்கான அட்சய லக்ன புள்ளி வரும் அதில் தெரிந்து கொள்ளலாம்.

பரணி, பூரம், பூராடம் என்னுடைய 17 வயதில் அட்சய லக்ன புள்ளி இந்த நட்சத்திரத்தில் போனால், சுக்ரன் சம்பந்தப்பட்டால் யோகத்தை கொடுக்கும்.

27 வயதில் வந்தால் வேறு ஏதாவது MD, MS படிக்கலாமா,என்று வரத்தான் வாய்ப்பு.

அதே போல் என்னுடைய 17 வயதில் ALP லக்னம் சிம்மம், தனுசு, மேஷம் வரும்பொழுது மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பு படிக்க வாய்ப்பு உண்டு .

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *