ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள்

Spread the love

ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் அதாவது பலதார திருமணங்கள் அதற்கு ஏதும் கிரக அமைப்பு இருக்கா?

 

இது ஒவ்வொரு லக்னம் ராசி வைத்து சொல்ல முடியும்.

இப்ப ALP லக்னம் தனுசு லக்னம் எடுத்தால், அதாவது குறிப்பிட்ட வயது

இந்த 20 வயதிலிருந்து 40 வயதிற்குள், இல்லை 50 வயதிற்குள் இந்த லக்னம் வரணும்.இந்த தனுசு லக்னத்திற்கு என்ன கிரகங்கள் சேரக்கூடாதுனா சுக்ரன் சேரக்கூடாது.அதேபோல் புதன், சனி சேரக்கூடாது.

இந்த மூன்று கிரகங்களும் தனுசு லக்னத்திற்கு சேர்ந்தால் மூன்றுக்கும் மேற்பட்ட தார திருமணங்கள் யோகமான அமைப்பை கொடுக்கும்.

 

அதாவது சில பேருக்கு தாலி மாற்றி கட்டுவார்கள், இல்லை இரண்டு தாலி கட்டுவார்கள் அப்படி உள்ளவர்களுக்கு இரு தார யோகமாக காமிக்கும் ஜாதகத்தில்,ஆனால் தனுசு லக்னத்திற்கு மட்டும் சுக்கிரன், புதன், சனி சேரக்கூடாது.இந்த மூன்று கிரகங்களும் தனுசு லக்னத்தில் சேர்ந்தால் ஒன்று, இரண்டு , மூன்றுக்கு மேற்பட்ட திருமண யோகங்களை, வாய்ப்புகளை கொடுக்கும்.

இதற்கு என்ன செய்வது என்றால் இந்த காலத்தில் மாங்கல்ய பலம் கம்மியாக இருக்கு அதனால் தாலி மாற்றி கட்டுங்கள் இப்படி சொல்கிறோம்.

 

இப்ப மீன லக்னத்திற்கு சனி பகவான்,புதன், சுக்ரன் பலமாக இருந்தால் இந்த ஜாதகத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட மூன்றுதார யோகம் அதில் மூன்று கிரகங்களும் ஒன்று சேர்ந்திருக்கணும். 1 வெளியில் இருந்தாலும் அந்த அமைப்பு கிடையாது.

அந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை அமைத்துக் கொடுக்கும்.

சில பேருக்கு சந்தோஷமாக அமையும்,

சில பேருக்கு இரண்டாம் தாரமே பிரச்சனையாக அமையும்.

அதில் ரொம்ப ரொம்ப கவனமாக பார்க்கணும்.

 

இதை பார்த்தாச்சுனா இதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள், மூன்றுதாரத் திருமணம் வந்து விடுமோ என்று கவலைப்பட வேண்டாம்,நிறைய ஜாதகத்தில் இருதார யோகம் இருக்கும்.அப்போ தாலியை மாத்தி கட்டுவாங்க. இல்லைன்னா ஒரு தாலியை கோயில் உண்டியலில் போடுவாங்க.

உங்க வீட்டில் உள்ள சாமி போட்டோவுக்கு பின்னாடி வையுங்கள்.

 

வீட்டில் சாமி போட்டோவில் ஒரு தாலி கயிறு மாதிரி கட்டி வையுங்கள்.

அந்த காலத்தில் வீட்டில் ஆணி மாதிரி அடித்து இருப்பார்கள், அது வீட்டு சாமி என்று சொல்வார்கள். வீட்டின் மேலண்ட பக்கத்தில் ஒரு ஆணி அடித்து, மஞ்சள் தடவி அதில் ஓம் என்று எழுதி இருப்பாங்க, மூன்று பொட்டு வைச்சிருப்பாங்க.அதான் வீட்டு சாமி என்று சொல்லுவாங்க.

அந்த வீட்டு சாமியில் ஒரு ஆணி மாதிரி அடித்து அதில் மஞ்சள் கயிற்றில் தாலியை கட்டி வச்சிருப்பாங்க.

அது மாதிரி கூட வைத்துக் கொள்ளலாம்.

இருதார யோகமாக இருந்தால் ஒரு தாலியை கழட்டிட்டு அடுத்த தாலி மாற்றலாம்.இன்னொரு தாலி புதிதாக மாத்தனும்.

அப்படி இல்லைன்னா மஞ்சள் மட்டும் கட்டி போட்டுக்கலாம்.

சில பேர் குண்டு மட்டும் போட்டு தாலி போடாமல் இருக்கலாம்.

இந்த மாதிரி அமைப்பு கொஞ்சம் கவனமாக பார்த்துக்கனும்.

 

இந்த மாதிரி அமைப்பு வரும் பொழுது எல்லாருடைய ஜாதகத்திலும் 30 -42 வயதில் வந்தால் அதில் கவனமாக இருந்து பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

அந்த காலகட்டத்தில் கண்டிப்பாக பெருமாள் கோவிலில் போய்ட்டு, பூரட்டாதி நட்சத்திரம் வரும் பொழுது பெருமாள் கோவிலில் போயிட்டு வழிபாடு செய்து 35 வயதானாலும் 40வயதானாலும் அந்த மாதிரி நேரத்தில் தாலி பிரித்து கோர்த்து கட்டிக்கொள்ளலாம்.

 

திருவோணம் நட்சத்திரத்தில் இந்த மாதிரி தாலி பிரித்து கட்டினால் இந்த தோஷம் நிவர்த்தி ஆகும் என்பதுதான் இந்த அமைப்புகுள்ள விஷயம்.

 

மாங்கல்யம் மாத்தி கட்டணும்னு சொல்றீங்க?அவங்க போட்டு இருக்க மாங்கல்யத்தைள் கயட்டுன அப்புறம் புது மாங்கல்யம் போட்டுக்கணுமா?

 

திருமாங்கல்யத்தை கழட்டி வீட்டில் வைத்துவிட்டு புதுசா 8 கிராம் மேல் போகாமல் , 7 கிராம் கம்மியாகமல் திருமாங்கல்யம் ஒருத்தர் போட்டாங்கனா 7 முக்கால் அதாவது ஏழு கிராம் மேல இருந்தா சரியா இருக்கும்

7 கிராம் 750 மிலி.

7 கிராம் க்கு மேல் 8 கிராம்குள் இருந்தால் தான் முழுமையான திருமணம் அமையும் என்ற அமைப்பு இருக்கு.

முதல் கல்யாணம் எப்படி நடந்ததோ அதுபோல்தான் இரண்டாவது கல்யாணம் நடக்கணும்.குறைந்தது 5 பேர் கூப்பிட்டு பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து மாலைமாற்றி அந்த திருமாங்கல்யம் தானம் பன்னி திருமாங்கல்யம் எடுத்து கட்டுனாதான் அது 2ம் தாரமாக கணக்கில் எடுத்துப்பாங்க.

 

முதல் திருமணம் எப்படி நடக்குதோ,அதுவே இரண்டாம் தாரமாக பண்ண நினைத்தால் அதே பெண் அதே ஆணாக இருப்பார்,மாங்கல்யம் மட்டும் மாறும்.

முதல் திருமணத்திற்கு எப்படி மணமேடை அமைத்தீர்களோ அதே போல் அமைத்து, அக்னி வளர்த்து யாகம் வளர்த்து அந்த யாக குண்டத்தை சுற்றி திருமணம் நடக்கணும் என்பது ஐதீகம்.ஒரே நாளில் இரண்டு முகூர்த்தங்கள் பண்ண முடியாது. குறைந்தது அந்த திருமணம் நடந்து 15 வது நாள் தாலி பிரித்து கட்டும் பொழுது கட்டிக்கலாம். அப்படி இல்லை 5 வருஷம், 10 வருஷம், 20 வருஷம் ஆகி போச்சு இப்ப பிரச்சனை இருக்கு கணவன் மனைவிக்குள்,கணவனால் பிரச்சனை என்றால் நேராக பிள்ளையார் கோவிலில் கணபதி ஹோமம் பண்ணி, நவகிரக பூஜை பண்ணி,அதன் பிறகு வரக்கூடிய நிகழ்வுகள் எல்லாமே புதிதாக வரணும் புதிதாக மணமேடை அமைத்து ,மணமேடையில் அந்த காலத்தில் சமுக்காலம் விரித்து தான் உட்காரனும். மணமேடை அப்ப கிடையாது ஜாமக்காலம் விரித்து,அதில் உட்கார வைத்து திருமாங்கலம் தானம் பண்ணனும் அப்படி தான் கல்யாணம் பண்ணனும்.

புதிதாக ஒரு கல்யாணம் பண்ற மாதிரி அந்த நிகழ்வு நடக்கணும்.

 

நிறையபேருக்கு ஒரு நம்பிக்கை மாங்கல்யத்தை கழட்டினால் கணவருக்கு ஏதாவது ஆபத்து வரும் என்று பயப்படுறாங்க, அந்த மாதிரி உள்ளவங்களுக்கு என்ன சொல்லலாம்?

 

கணவன் மனைவிக்குள் ஒரு பிரச்சனை வந்ததும் தான் அடுத்த நிகழ்வு பற்றி பேசுகிறார்கள்.இப்ப ஜாதகம் பார்க்கும் பொழுது சும்மா என் ஜாதகத்தை பாருங்கனு சொல்ல மாட்டாங்க. கணவனுக்கு பிரச்சனையோ, மனைவிக்கு பிரச்சனையோ, இல்லை சில பேருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

அப்படி உடல் ஆரோக்யம் பாதிக்கும்பொழுது திருமாங்கல்யத்தை கழட்டிவீட்டில் வைச்சிட்டு புது திருமாங்கல் கட்டிக் கொள்ளலாம். இதை புரிய வைத்தால் கண்டிப்பாக புரிஞ்சிப்பாங்க. கண்டிபாக பல தார திருமணங்களை இப்படி ஒரு அமைப்பாக மாற்றி, பலதார திருமணமாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த நிகழ்வுகளில் இருந்து தப்பிக்கலாம்.

 

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *