நம்முடைய இலக்கை சரியான நேரத்தில் அடைய

Spread the love

அனைவருக்கும் வணக்கம்.

 

ஏன் அட்சய லக்ன பத்ததி முறையை பார்க்கிறோம் என்பதை முதலில் பார்க்கலாம்.

நாம் வாழக்கூடிய இந்த கால கட்டத்தில் நாம் எதை நோக்கி பயணிக்க போகிறோம்,நாம் பயணம் செய்யக்கூடிய பாதைகள் எப்படி இருக்கும்,

நம்முடைய இலக்கை சரியான நேரத்தில் அடைய முடியுமா?

என்ற விஷயத்தை எல்லாம் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.

 

உதாரண ஜாதகம்

ஒருவருக்கு மேஷ லக்னம் அட்சய லக்னமாக இருந்தால்,அவருக்கு லக்னாதிபதி செவ்வாய் 2ம் இடத்தில் இருக்கார்.

அட்சய லக்ன பத்ததி முறையில் 10 வருடத்திற்கு ஒரு லக்னம் மாறும்.

இந்த மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் இருக்கிறார்.

இந்த 10 வருடமும் ஜாதகர் தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்து தான் அவருடைய செயல்கள் எல்லாம் இருக்கும்.

அவர் என்ன செய்தாலும் குடும்ப நபர்களை வைத்து அவருடைய செயல்கள் எல்லாமே இருக்கும்.

 

இந்த 10 வருடம் முடிந்தபின் ரிஷப ALP லக்னம் வரும். ரிஷப ALP லக்னம் வரும்பொழுது அதன் அதிபதி சுக்ரன் அங்கேயே இருப்பார்.

செவ்வாய் அதே இடத்தில் தான் இருப்பார். இப்படி இருந்தால செவ்வாய் 7ம் அதிபதியாக போவார்.இது ஒரு ஆண் ஜாதகமாக இருந்தால் ரிஷப லக்னம் ALP லக்னம் போகும்பொழுது ஜாதகரை 7ம் பாவம்தான் இயக்கும்.அதாவது மனைவி, நண்பர்கள் ,கூட்டுத் தொழில் மூலமாக ஜாதகர் இயங்குவார்.

அதுவே ரிஷப லக்ன அதிபதி செவ்வாய் அங்கே இருந்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் இவரே பார்த்துக் கொள்வார்.

இந்த 10 வருடம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் அவருடைய சிந்தனைகள், செயல்கள் , எண்ணங்கள் எல்லாமே தன்னை சார்ந்திருக்கும்.

ஜாதகர் தனக்குத்தானே முடிவெடுத்துக் கொள்ளும் அளவிற்கு வருவார்.

 

ஒவ்வொரு லக்னம் மாறும்பொழுது லக்ன அதிபதிகள் உடைய தன்மைகேற்ப உங்களுடைய குணங்கள், அதனுடைய பலன்கள் ,அதனுடைய காரகத்துவங்கள் எல்லாமே மாறும் இந்த ALP நிருபணம்.

 

அடுத்து 10 வருடம் ALP லக்னம் மிதுனமாக போகும்பொழுது ,லக்னாதிபதி புதன் 12ல் இருந்தால் அப்போ மிதுன லக்னம் வரக்கூடிய 10 வருட கால கட்டங்கள் ஜாதகருடைய எண்ணங்கள் செயல்கள் விரயத்தை நோக்கியே பயணம் செய்யும்.

விரயம் என்பது வீண் விரயமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

சுப விரயமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஏன்னா? புதன் இருக்கக்கூடிய டிகிரி பார்க்கணும், இல்லைனா எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்குனு பார்க்கணும்.

புதனுடைய தன்மை குணங்கள் சுபத்துவமாக இருக்கா என்பதை பார்க்கணும்.ஏன்னா?

புதன் லக்னத்திற்கும், 4-க்கும் அதிபதி.

பெரும்பாலும் மற்ற கிரகங்களோடு சேராமல் புதன் இருந்தால் சுப விரயங்கள் அவருக்கு அதிகமாக ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு.

மிதுனலக்னம் ALP லக்னம் வந்து லக்னாதிபதி 12ம் வீட்டில் இருந்தால் அவருக்கு சுப விரயம் ஏற்படும்.

அவருடைய எண்ணங்கள் செயல்கள் எல்லாமே சொந்தமாக வீடு வாங்கணும் ,சொந்தமாக வாகனம் வாங்கணும் என்று எண்ணத்தோடுதான் அந்த விரயத்தை யோசிப்பார்.

 

இந்த மாதிரி தான் ஒவ்வொரு பாவகம் சார்ந்தும் ஒரு லக்னஅதிபதி ,ஒரு லக்னத்தை வைத்து மட்டுமே அடுத்தடுத்த கிரகங்கள் மாறும் பொழுது அந்த கிரகத்தின் உடைய பலன்கள் ,காரகத்துவங்களும், பாவகத்துவங்களும் மாறும் என்பதுதான் அட்சய லக்ன பத்ததிமுறை.

 

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *