ஜோதிடமும் தீர்வுகளும்

ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம்

குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு

எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏதும் பூதகண

சேஷ் டைகள் இருந்தால் நின்று விடும்.

சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி

12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு

சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும்.

21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி

வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில்

தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி

சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய,

திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு,

பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.

சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்

தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்

நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.

சிவன் கோவிலில் கால பைரவரையும்,

விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும்

வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

astrology Remedies

வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்

கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,

கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும்

நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00]

இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து,

செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து,.

நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்

தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால்,

மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில்

தீபம் ஏற்றி வழிபடுவது ரிசிகள் சொல்லிய பரிகாரம்.

கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,

மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்

வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும்

கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,

திருஷ்டி, திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

மன அமைதி

மனசு சஞ்சலப்படுகிறதா …? .. ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏறி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது. இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார். ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்றுவரப் பணித்தார் நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது. சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார். தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய் ..? நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று! நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா? சுவாமி ஆமாம்! நம் மனமும் அப்படிப்பட்டதுதான் .. மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம்., அது அமைதியாகிவிடும். அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும். அது நடக்கும். அது எளிதானது. மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல.