வேலை உண்டு

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு நாளும் ஒரு ஜாதகத்தில் எந்த காலகட்டம் யோகமான காலகட்டம் என்பதை பார்க்கிறோம். நம்முடைய பிறப்பு லக்னத்திற்கு நம்முடைய உடல், மனம் எவ்வாறு வளர்ச்சி பெறுகிறதோ அதே போல் நம்முடைய ஜென்ம லக்னத்தில் இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு 10 வருடத்திற்கும் லக்னத்தை மாற்றி பலன் சொல்லும்பொழுது உங்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய அத்தனை நிகழ்வுகளும் யோகத்தை கொடுக்கும். இந்த காலகட்டத்தில் இது செய்யலாம். இந்த காலகட்டத்தில் இது செய்யக்கூடாது. 108 நட்சத்திர பாதங்கள் நம்முடைய வாழ்க்கையில் கடந்து செல்லக்கூடிய யோகத்தை பெறக்கூடிய அமைப்பு நம்மிடம் உள்ளது. 1 நட்சத்திரபாதம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும். 108 நட்சத்திர பாதம் ஒரே மாதிரியாகத்தான் இருக்குமா? இருக்காது. ஒருவருடைய ஜென்ம லக்னத்தின் லக்ன புள்ளி ஒருவருக்கு மேஷ லக்னமாக ஜென்ம லக்னம் இருந்தால் அவர்கள் அஸ்வினி 1லும் பிறக்கலாம், கார்த்திகை 1 லும் பிறக்கலாம். ஆனால் இரண்டு பேருக்கும் 10 வருடம் ஏற்காது ஒருவருக்கு பத்து வருடம் இயக்கலாம். ஒருவருக்கு ஒரு மாதம் இயக்கலாம். மேஷ லக்னத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான பலன் இருக்காது. அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை அடிப்படை தெரிந்த அத்தனை பேரும் கற்றுக்கொள்ள முடியும். மேஷ லக்னம் ஜென்ம லக்னமாக இருந்து இன்றைக்கு வயது 40 அவருக்கு கடக லக்னம் செல்லும். 3 வயது குழந்தைக்கு 30 வயது மனிதருக்கும் வித்தியாசம் இருக்கும். அதுதான் ஜாதகம் அதுதான் யோகம். உங்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய அத்தனை நிகழ்வுகளும் மாறிக்கொண்டே இருக்கும். எல்லாவற்றிற்கும் காரணம் உங்களுடைய லக்ன புள்ளி. நன்றி, வணக்கம்.

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_alpastrologynumber_9786556156

https://youtu.be/T22b-yoFYXI

பங்குசந்தையில் ஈடுபடலாமா…?

அனைவருக்கும் வணக்கம், இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆராய்ச்சியாளர். பங்குச்சந்தையில் ஈடுபடலாமா? பங்குச்சந்தை என்பது ஒரு பலமான நிகழ்வு. ஏன்னா ? ஒவ்வொரு ஜாதகத்திலும் ஆச்சரியமான ஒரு கடல் அளவு இருக்கக்கூடிய நிகழ்வுகளை நாம் கையாளக்கூடிய, கடல் தண்ணியை அள்ளுவது போல் தான் இந்த பங்குச்சந்தை. இது மதி மயக்கக் கூடிய அமைப்பு. ஐந்தாம் வீடு என்பது மனம் புத்தி, ALP லக்னத்திற்கு 5ல் இருக்கக்கூடிய கிரகம் சனி, சந்திரன், ராகு தொடர்பு இருக்கக்கூடாது. இருந்தால் கண்டிப்பாக அந்த ஜாதகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். இது தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தும். பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பங்குச்சந்தையில் ஒரு மில்லி அளவில் மாறுபாடு அடைந்தாலும் கண்டுபிடிக்க முடியும். கண்டாந்திரி தோஷம் என்பது ஒரு கண்டம் விட்டு மற்றொரு கண்டம் மாறுதல். இந்தப் பகுதியில் நான் ஆய்வு செய்துள்ளேன். அதாவது இந்தியாவின் ஜாதகம் என்ன, பங்குச்சந்தை ஜாதகம் என்ன, வங்கி ஜாதகம் என்ன, தமிழ்நாடு ஜாதகம் என்ன, இந்த மாதிரி நான்கு விதமான ஜாதகங்களை ஆய்வு செய்து ஒரு நிமிடத்தில் எந்த கிரகம் ஏறும் எந்த கிரகம் இறங்கும் என்பதை கூற முடியும். இடத்திற்கு ஏற்றார்போல் அவருடைய ஜாதகமும் ,வாங்கும் இடமும் ஏற்புடையது. பங்குச்சந்தையில் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஆய்வு செய்ய முடியும். தசாபுத்தி என்பதை இப்படி பிரித்துள்ளேன். அட்சய லக்கனத்துடைய லக்கன புள்ளியை 54 பிரிவுகளாகப் பிரித்து, அதை 65 பிரிவுகளாகப் பிரிக்கும் பொழுது, 1 நிமிடம் 29 வினாடிக்கு லக்னபுள்ளி மாறிக்கொண்டே இருக்கும். 1 நிமிடம் 29 விநாடிக்கு லக்கன புள்ளி மாறும் பொழுது அதனுடைய தன்மைகளும் மாறும். ALP.Astrology என்ற மென்பொருள் goole Playstore ல் உள்ளது. அதில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். நன்றி ,வணக்கம்.

https://youtu.be/3yy4i_8cy60

அரசு வேலை உண்டு

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். இறந்தவர்களின் ஜாதகத்தை கண்டிப்பாக பார்க்க கூடாது. ஜோதிடர்கள் அனைவரும் இதை செய்கிறார்கள். அப்படி செய்யக்கூடாது. ஏன்னா? இறந்தவர்கள் கடவுளிடம் சென்று விட்டார்கள் என்று சொல்கிறோம். ஒரு நிலையை விட்டு இன்னொரு நிலையை அடையக்கூடிய ஆத்மாவிற்கு,உடலுக்கு மறுபடியும் ஜாதகம் பார்ப்பது என்பது தவறான விஷயம். இருக்கும் நபர்களுக்கு தான் நாம் ஜாதகத்தை பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். இல்லாதவர்களுக்கு நாம் ஜாதகம் பார்க்கக் கூடாது. இல்லாத விஷயத்தை தேடுவது மிக சங்கடமான சூழ்நிலையை உருவாக்கும். அதனால் இறந்தவர்களுடைய ஜாதகம் பார்த்தால் அதனுடைய பின்விளைவு எல்லோரையும் பாதிக்கும். அதனால் பார்க்க கூடாது. பார்ப்பவர்கள், கேட்பவர்கள் இரண்டு பேருக்கும் அந்த நிகழ்வு பாதிக்கும். அட்சய லக்ன பத்ததி முறையில் 2,7,8 ,10 தொடர்பு இருந்தால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நன்றி, வணக்கம்.

https://youtu.be/2DvQCdvNbXA

2021 & 2024 யோகமான காலம்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். அட்சய பாவகம்: ஒரு நட்சத்திர புள்ளி 405 நாள் இயக்கும். 405 நாள் ஒரு நட்சத்திர பாதம் மட்டும் இயங்காது. உப நட்சத்திரங்கள் அல்லது தசாபுத்திகள் என்று பிரித்து இருக்கிறோம். ஒரு நட்சத்திர பாதம் 45 நாள் இயங்கும் அந்த 45 நாள் 5 நாள் இயங்கும். 5 நாள் 13 மணி நேரம் 20 நிமிடம் இயங்கும். 13 மணி நேரம் 20 நிமிடம் 1 மணிநேரம் 30 நிமிடம் இயங்கும். 1 மணிநேரம் 30 நிமிடம் 10 நிமிடமாக இயங்கும். இப்படி தான் 12 பாவகமும் பிரித்து இருக்கிறோம். ஒவ்வொரு பாவகத்திற்கும் கிரகங்கள் மாறும்பொழுது துல்லியமாக பலன் எடுக்க முடியும். அட்சய ராசி என்பது தசாபுத்திகள் அடிப்படையில் எடுக்கிறோம். அட்சய பாவகம் என்பது ஒவ்வொரு நட்சத்திரத்தையும் 12 பாவகங்களாக பிரிக்கும் பொழுது 33 நாள் 18 மணி நேரம் தொடர்புடைய பாவகத்தை இயக்கும். அட்சய பாவகம் இன்றைக்கு எந்த பாவகத்தில் இருக்கிறதோ ஒவ்வொரு 33 நாளுக்கும் மாறிக்கொண்டு இருக்கும். நாம் நட்சத்திரங்கள் வழியாகவும் கிரகங்களை பிரித்து இருக்கிறோம். ராசியில் சந்திரன் உடைய தன்மைகளையும் பாவகமாக எடுத்து இருக்கிறோம். பாவகங்கள் வழியாக பிரிக்கும் பொழுது நட்சத்திரங்கள், கிரகங்கள், பாவகங்கள் இந்த மூன்றும் தனித்தனியாக ஒரே நேரத்தில் பார்க்கும் பொழுது இன்னும் எளிமையாக புரியும். பாவகங்களில் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நட்சத்திரங்கள் செல்லும்பொழுது மிக மிக எளிமையாக சொல்ல முடியும். நன்றி, வணக்கம்..

https://youtu.be/rYw4x-xKEAQ

2021 டிசம்பரில் குழந்தை உண்டாகும்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். அட்சய நட்சத்திரம்: அட்சய நட்சத்திரம் என்பது சுக்ர திசை என்றால் மூன்று நட்சத்திரத்தில் உங்களுடைய மனநிலை பயணிக்க கூடிய அமைப்பை ஏற்படுத்தும். இன்றைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்களை, அத்தனை மன இயல்புகளையும், எண்ண ஓட்டங்களையும், அட்சய நட்சத்திரத்திடம் தான் இருக்கும். அட்சய ராசி மேஷம், அட்சய நட்சத்திரம் பரணி நட்சத்திரம், பரணி நட்சத்திரம் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கையில் கோவில்களில் அர்ச்சனை செய்யும் பொழுது அட்சய நட்சத்திரம் என்று அர்ச்சனை செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கை மாறும். ஜென்ம நட்சத்திரங்கள் நம்முடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும். ஆனால் இன்றைய நட்சத்திரம் அட்சய நட்சத்திரம் என்பது தசாபுத்திகள் எந்த திசையில் நடக்கிறதோ அதனுடைய நட்சத்திரம் அட்சய நட்சத்திரம் என குறிப்பிட வேண்டும். இன்றைக்கு எந்த நட்சத்திரத்தில் பயணிக்கிறீர்களோ அதுதான் உங்களுடைய அட்சய நட்சத்திரம். அட்சய ராசி மேஷம், அட்சய நட்சத்திரம் பரணி நட்சத்திரம் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கை மாறும். எந்த ராசியில் பிறந்தீர்களோ அந்த ராசியில் இருந்து வரக்கூடிய தசாபுத்தி, அதிலிருந்து வரக்கூடிய நட்சத்திரம்தான் அட்சய நட்சத்திரம். சந்திரன் எங்கு இருக்கிறதோ சந்திரனிலிருந்து எந்த தசாபுத்தி நகர்கிறதோ அதுதான் அட்சயராசி. நன்றி, வணக்கம்.

https://youtu.be/nCByBO3AtFs