அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிடம்

அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிடம்

அனைவருக்கும் வணக்கம்.
அட்சயலக்ன பத்ததி ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் பற்றி பேச போகிறோம்.
ஏன்னா? மருத்துவம் என்பது நிறைய பேருக்கு தேவை படக்கூடிய ஒரு விஷயமாகவே இருக்கு.
ஏன்னா நம்ம உடம்பில் எந்த பாகத்தில் என்ன பிரச்சனை என்றாலும் நாம் ஜாதகத்தை பார்க்க ஆரம்பிக்கிறோம்.

அதனுடைய விளைவுகள் என்ன?
அது எப்படி இருக்கும்?
ஒரு அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தாலும் செய்யலாமா வேண்டாமா அப்படிங்கிற முடிவு எடுப்பதற்கு எல்லாம் இந்த ஜோதிடம் நமக்கு இன்றியமையாத ஒரு விஷயமாக இருக்கு.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் உங்க எல்லாருக்கும் தெரியும் நல்ல accurate ஆன
பலன்களை தரக்கூடியதில் ரொம்ப சிறப்பான பலன்களை தருகிறது.

இதில் மருத்துவ ஜோதிடமும் நமக்கு மிகவும் அவசியமானது,
ஆனால் இன்றைக்கு உள்ள காலகட்டங்களில் உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வதில் அதிக சிரமமான சூழ்நிலைகளை கொடுத்துட்டு இருக்கு.

என்ன உணவு முறைகளும் சரி, நம்முடைய உடல் தேவைகளை கவனித்துக் கொள்வதற்கு கால அவகாசமும் இல்லை,
அவசரமான உலகத்தில் நாம் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்காக கொஞ்சம் செலவு பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அந்த ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் எந்த கிரகங்களோடு எந்த மாதிரியான சூழ்நிலைகள் சம்பந்தப் படும் பொழுது நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் அப்படிங்கறத பல வருடங்களாக ஆய்வுகள் மேற்கொண்டு ஒவ்வொரு நோய்க்கான காரணங்கள், காரணிகள் எந்த கிரகத்தினோடு இணைவு ஏற்பட்டால் அவங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் வரும், அப்படிங்கற மாதிரியான விஷயங்களெல்லாம்
திரு பொதுவுடைமூர்த்தி ஐயா, இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கியவர்.
ஆய்வு செய்து நிறைய விஷயங்களை நமக்கு கொடுத்து இருக்காங்க.

இந்த நோய்களைப் பற்றியும்,
நோயினுடைய தன்மைகள் பற்றியும்,
அதற்கு எந்தெந்த காரகங்கள்,
எந்தெந்த கிரகங்கள்,நமக்கு அந்த நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைகிறது, அதற்கு நம் தடுப்பு முறைகள் என்னென்ன பண்ணிக்கணும்,
இந்த ஒரு விஷயம் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்தால் அது வராமல் தடுப்பதற்கும் அல்லது அது வந்தபிறகு நாம் என்னென்ன பரிகாரங்கள் செய்யணும், என்னென்ன மருத்துவங்கள் எடுத்துக் கொள்ளணும், என்பதை நாம் எளிதாக இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை என்பது ஒவ்வொருவரும் உணர்ந்து அவங்க அவங்களே பார்த்து சரி செய்துக் கொள்ளக்கூடிய ஒரு ஜோதிட முறையாக இன்றைக்கு வளர்ந்து கொண்டு இருக்கு.

ஏன்னா ? வீட்டுக்கு ஒரு ஜோதிடர். பொதுவுடை மூர்த்தி சாருடைய ரொம்ப முக்கியமான ஒரு குறிக்கோளாக இருக்கு.
அதனால் நிறைய Class எடுத்துட்டு இருக்காங்க.
இந்த ஜோதிட துறையில் இன்னும் தேடல்கள் நுணுக்கமாக ஆய்வு பண்ணிட்டு இருக்காங்க.

அதில் மருத்துவ ஜோதிடத்திற்காக தான் நிறைய நேரம் செலவு செய்றாங்க. அதனால் தான் நிறைய பேருக்கு ஜோதிடம் பார்ப்பதற்கு அவகாசம் இல்லாமல் போகிறது.

இந்த மருத்துவ ஜோதிடத்தில் என்னென்ன எல்லாம் தெரிந்து கொள்ள முடியும்.
இப்போ ஒருவருக்கு தைராய்டு வருது அந்த தைராய்டுக்கு என்னென்னவெல்லாம் பண்ண முடியும்?
அந்த காரணிகள் ஏன் கெட்டுப் போகிறது?
அந்த தைராய்டு சுரப்பிகளில் எதனால் பிரச்சனை ஏற்படுகிறது?
அது எப்படி பிரச்சனைகளை உண்டாக்குகிறது?
அதற்கு என்னென்ன கிரகங்கள் காரணமாக அமைகிறது?
அதை சரி செய்வதற்கு எந்த கிரகம் உறுதுணை செய்யும்?
நம்ம உடம்பில் எந்த கிரகத்தினுடைய தன்மைகளை எந்த சுரப்பியை அதிகப்படுத்திக்கனும், என்கிற விஷயத்தை எல்லாம் ரொம்ப நுணுக்கமாக ஆய்வு செய்து இருக்காங்க.

அதேபோல் பாராதைராய்டு எப்படி வருகிறது,
அந்தப் பாராதைராய்டு வேலை என்ன,
ஏன்னா? ஒரு நோய்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு உறுப்பை பற்றி சொல்லி ஆகணும்.
நம் உடலில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு பாகங்களுக்கும் நம்முடைய கடமை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இயந்திரம் என்பது மனித உடல் மாதிரிதான்.
நல்லா ஓடுறவரையும் தான் அதனுடைய மதிப்பு,
என்றைக்கு சிறிய பாதிப்பு ஏற்படுகிறதோ அன்றைக்கு நாம் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைய வேண்டியதாக இருக்கும்.

அந்த இயந்திரத்தில் எந்த பாகம் பழுது படப் போகிறது என்று தெரிந்தால் அதை தடுக்க வேண்டிய தடுப்பு முறைகளை நாம் எளிதாக தெரிந்துகொண்டு செய்தால் அது சுலபமாக இருக்கும்.

நமக்கு என்ன பிரச்சனைகள் வரப்போகிறது, அதை எப்படி சரி செய்து கொள்ளலாம்,
நாம் தெரிந்து அதை உணர்ந்து செய்தால் நம்மை நாமே சரி செய்ய முடியும்.
அதற்கு ஒரு சுலபமான வழியாக இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் என்பது நமக்கு ரொம்ப ரொம்ப useful ஆக இருக்க போகிறது.

ஏன்னா? நம்முடைய உடல் காரணிகள் அத்தனையும் ஏதோ ஒரு கிரகங்கள் செயல்படுத்தக் கூடிய ஒரு பொறுப்பில் இருக்கு.

இந்த கிரகத்தோடு இந்த கிரக இணைவுகள் சேர்ந்தாலோ அல்லது நோய் ஸ்தானத்தின் அதிபதியோடு சம்பந்தப்பட்டாலோ நமக்கு ஆரோக்கியத்தில் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.

இதற்கு அறிவியல் சிகிச்சை வேண்டுமா, இல்லை அலோபதியில் சரி செய்ய முடியுமா,
இல்லை ஆயுர்வேதத்தினால் சரிசெய்ய முடியுமா,
இல்லை சித்தா எடுக்கணுமா, யோனி எடுக்கணுமா,
இந்த மாதிரி நிறைய மருத்துவ முறைகளில் எதைப் பின்பற்றினால் நாம் எளிதாக நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்,
ஒரு அற்புதமான ஜோதிட முறை தான் இந்த
அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிட முறை.

நோய்களைப் பற்றியும் சார் பேச போறாங்க.
அதை எந்த கிரகங்களோடு தொடர்புபடுத்தி பார்க்கணும் என்பதை சொல்ல இருக்காங்க.
தொடர்ந்து நீங்க பாருங்க, உங்களுக்கு ஏற்படக்கூடிய நோய்என்ன,
அதற்கு எந்த மாதிரி சிகிச்சை எடுக்குறீங்க ,
எந்த வருடத்தில் நோய் ஆரம்பித்தது,
எப்போ உணர்திங்க,
என்பதை பின்னோட்ட பதிவுகளாக உங்களுடைய பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த வருடம் கொடுத்து உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கு, அந்த பிரச்சனை எப்பொழுது ஆரம்பித்தது, என்பதை பதிவு செய்தால் அது எங்களுடைய மருத்துவ ஜோதிடத்திற்கு ஆய்வு ஜாதகத்துக்காக நாங்கள் எடுத்துக் கொள்வோம்.

இது எல்லோருக்கும் பயனுள்ள பகுதியாக இந்த ஜோதிட முறை இருக்கும். அதை புரிஞ்சிப்பிங்க. அதை பற்றி நிறைய வீடியோக்கள் சார் பேச இருக்காங்க. தைராய்டு சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது, ஒரு மனச்சிதைவுக்கு, மனதில் உள்ள பிரச்சனைகளுக்கு என்ன காரணம் உடல் மட்டும் காரணமா மனது மட்டும் காரணமா இதை எப்படி நாம் பிரித்துப் பார்ப்பது ,மூளை என்றால் அந்த தலைப்பகுதியில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் இருக்கு அது ஒரு மருத்துவரே ஆச்சரியப்படக் கூடிய அளவில் மூர்த்தி சாருடைய ஆய்வுகள் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்.கண்டிப்பாக பெரிய அளவில் பயன்படும் .

அட்சய லக்ன பத்ததியில் 18 Volume எழுதி வெளியிடுறாங்க.அதில் மருத்துவ ஜோதிடம் என்ற நூல் முடிவு நிலையில் இருக்கு. கண்டிப்பாக அந்த நூல் வெளி வரும்பொழுது உங்கள் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பயனுள்ள நூலாக அமையும்.
நம் முடைய உடல் கூறுகளை அங்கம் அங்கமாக பிரித்து எந்தந்த கிரகம் ஆதிக்கம் செலுத்தும், அது எந்த கிரகத்தினுடைய இணைவு இருந்தால், சேர்க்கை இருந்தால் எந்த நேரத்தில் அதன் தாக்கம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளகூடிய ஒரு அரிய பொக்கிஷமாக அட்சய லக்ன பத்ததியின் மருத்துவ ஜோதிடம் Book உங்களுக்கு சிறந்த வழிக்காட்டியாக இருக்கும்.

நன்றி

https://youtu.be/4RryvGGhenc

அரசு வேலை உண்டு

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
” அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

இறந்தவர்களின் ஜாதகத்தை கண்டிப்பாக பார்க்க கூடாது. ஜோதிடர்கள் அனைவரும் இதை செய்கிறார்கள்.
அப்படி செய்யக்கூடாது.

ஏன்னா? இறந்தவர்கள் கடவுளிடம் சென்று விட்டார்கள் என்று சொல்கிறோம்.
ஒரு நிலையை விட்டு இன்னொரு நிலையை அடையக்கூடிய ஆத்மாவிற்கு,உடலுக்கு மறுபடியும் ஜாதகம் பார்ப்பது என்பது தவறான விஷயம்.

இருக்கும் நபர்களுக்கு தான் நாம் ஜாதகத்தை பார்த்து ஆய்வு செய்ய வேண்டும்.
இல்லாதவர்களுக்கு நாம் ஜாதகம் பார்க்கக் கூடாது.

இல்லாத விஷயத்தை தேடுவது மிக சங்கடமான சூழ்நிலையை உருவாக்கும்.
அதனால் இறந்தவர்களுடைய ஜாதகம் பார்த்தால் அதனுடைய பின்விளைவு எல்லோரையும் பாதிக்கும்.
அதனால் பார்க்க கூடாது.

பார்ப்பவர்கள், கேட்பவர்கள் இரண்டு பேருக்கும் அந்த நிகழ்வு பாதிக்கும்.

அட்சய லக்ன பத்ததி முறையில் 2,7,8 ,10 தொடர்பு இருந்தால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

நன்றி, வணக்கம்

2021 டிசம்பரில் குழந்தை உண்டாகும்

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அட்சய நட்சத்திரம்:

அட்சய நட்சத்திரம் என்பது

சுக்ர திசை என்றால் மூன்று நட்சத்திரத்தில் உங்களுடைய மனநிலை பயணிக்க கூடிய அமைப்பை ஏற்படுத்தும்.

இன்றைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்களை,
அத்தனை மன இயல்புகளையும்,
எண்ண ஓட்டங்களையும், அட்சய நட்சத்திரத்திடம் தான் இருக்கும்.

அட்சய ராசி மேஷம்,
அட்சய நட்சத்திரம் பரணி நட்சத்திரம்,

பரணி நட்சத்திரம் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கையில் கோவில்களில் அர்ச்சனை செய்யும் பொழுது அட்சய நட்சத்திரம் என்று அர்ச்சனை செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கை மாறும்.

ஜென்ம நட்சத்திரங்கள் நம்முடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும்.

ஆனால் இன்றைய நட்சத்திரம் அட்சய நட்சத்திரம் என்பது தசாபுத்திகள் எந்த திசையில் நடக்கிறதோ அதனுடைய நட்சத்திரம் அட்சய நட்சத்திரம் என குறிப்பிட வேண்டும்.

இன்றைக்கு எந்த நட்சத்திரத்தில் பயணிக்கிறீர்களோ அதுதான் உங்களுடைய அட்சய நட்சத்திரம்.
அட்சய ராசி மேஷம்,
அட்சய நட்சத்திரம் பரணி நட்சத்திரம் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கை மாறும்.

எந்த ராசியில் பிறந்தீர்களோ அந்த ராசியில் இருந்து வரக்கூடிய தசாபுத்தி, அதிலிருந்து வரக்கூடிய நட்சத்திரம்தான் அட்சய நட்சத்திரம்.

சந்திரன் எங்கு இருக்கிறதோ சந்திரனிலிருந்து எந்த தசாபுத்தி நகர்கிறதோ அதுதான் அட்சயராசி.

நன்றி, வணக்கம்.

புனர்பூசம் நட்சத்திரம் 3ம் பாதம்:

புனர்பூசம் நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
” அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் மிதுன லக்னம் புனர்பூசம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்.

ஜாதகர் வரும்பொழுது ஜாதகரை பற்றிய கேள்விகள் என்னுடைய வருமானம் எப்படி இருக்கும்? என்னுடைய தொழில் எப்படி இருக்கும்?
ஜாதகரை நோக்கிய கேள்விகள், ஜாதகர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகமாக இருக்கும்.

சுயநலம் சம்பந்தப்பட்ட நட்சத்திரம் புனர்பூசம் நட்சத்திரம் 3ம் பாதம்.

வேலை சம்பந்தப்பட்ட விஷயம், வருமானம் சம்பந்தப்பட்ட விஷயம் இதை இரண்டை தவிர வேறு எதுவும் கிடையாது.

தன்னைப் பற்றிய கேள்விகள் ஜாதகருக்கு அதிகமாக இருக்கும். இதற்கான பலன் அவருடைய முயற்சிகள் மூலம் யோகமாக அமையலாம்.

கோச்சார கிரகம் பலமாக இருந்தால் இன்னும் யோகம் உண்டு.
ஜெனன காலம் மிதுன லக்னத்திற்கு
6, 8, 10 ல் நிற்காமல் வேறு இடத்தில் இருந்தால் கண்டிப்பாக யோகத்தை கொடுக்கும்.

அட்சய லக்னம் வரும் பொழுது அவருடைய கிரகம் 6, 8 , 10 ல் நின்றால் அவருடைய வாய்ப்புகள் தண்டனை கொடுக்கக் கூடிய காலம்.

வாழ்க்கையில் இதுநாள் வரைக்கும் என்ன துன்பங்கள் அடையவேண்டும் என்பதுதான் ,
6ம் வீடு ரண ருண சத்ரு ஸ்தானம்.
8ம் வீடு என்பது அதைவிட அதிகமான ஒரு விஷயம்.
10 ம் வீடு என்பது கர்மத்தை கழித்தல் என்னுடைய பூர்வபுண்ணியம் அத்தனையும் இந்த காலகட்டத்தில் கழித்து விடுவேன்.

புனர்பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம் மிக மிக கவனமாக செல்ல வேண்டிய காலம்.

இதுநாள் வரைக்கும் வாழ்க்கையில் செய்த நல்ல விஷயங்களுக்கு நல்லது கிடைக்கும்.
அத்தனை பூர்வ புண்ணியங்களுக்கு நீங்கள் நல்லது செய்திருந்தால் நல்லது நடக்கும்.
கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் என்ற விஷயம் இருக்கு.

இதுநாள் வரைக்கும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை உண்டு.

அதாவது ஆண் குழந்தைகள் பிறப்பதற்கான நட்சத்திரத்திரகாரர்கள் புனர்பூசம் நட்சத்திரம் 3ம் பாதம்.

நமது வாழ்கையில் அவ்வளவு விஷயங்கள் புதைந்துள்ளது வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் அர்த்தத்தோடு,
எல்லா செயல்பாடுகளும் ஒரு காரண காரியங்களோடு இயங்குகிறது.

புனர்பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம் நீங்கள் எப்படி வேஷம் போடுகிறீர்களோ அதற்கான பலன் அனுபவிப்பீர்கள்.

புனர்பூசம் நட்சத்திரம் 3 ம் பாதம் யோகமான காலம்.
1 வருடம், 1 மாதம், 10 நாள் புனர்பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம் இயங்கும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சனிபகவான் தண்டனை அளிப்பார். குருபகவான் வழிகாட்டுவார்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://www.amazon.in/dp/B0984V57RH

பூசம் நட்சத்திரம் 3ம் பாதம்:

பூசம் நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரப் பாதம் பூசம் நட்சத்திரம் 3ம் பாதம்.

கடக லக்னம் அட்சய லக்னமாக செல்லக்கூடிய காலகட்டத்தில் ஒரு மனிதருக்கு அந்த நேரம் யோகமா? அவயோகமா? என்பதை பார்ப்போம்.

பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம் செல்லக்கூடிய காலகட்டம் மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும்.
அதாவது எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள்,
திடீர் யோகங்கள்,
வீடு சம்பந்தப்பட்ட கேள்விக்காக வந்திருப்பார்.
வீடு கட்டலாமா? என்று கேட்டால் பழைய வீடு வாங்கலாம்.

பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம் யோகம் உண்டா? உண்டு.
ஆனால் 7 8-க்கு அதிபதியாக இருக்கிறார்.
அதனால் எதிர்பார்த்த விஷயங்கள் யோகங்கள்.

என்னுடைய வாழ்க்கையில் இது நாள் வரைக்கும் நண்பர்கள் மூலமாக,
என்னுடைய தாயின் மூலமாக, இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்து கொள்ளக் கூடிய காலம்.

பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம் எதிர்பார்த்த யோகம் உண்டு.
தொலைதூரப் பயணங்கள்,
திருமணம் சம்பந்தப்பட்ட உறவுகள்,
வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
சனி புதன் சம்பந்தப்படும் பொழுது technical சம்பந்தப்பட்ட விஷயங்களால் எதிர்பார்த்த யோகம் உண்டு.

ஏதோ ஒரு பூசம் நட்சத்திரத்தில் சனிபகவான் ஆயில்யம், ரேவதி, கேட்டையில் நின்றால் அந்தக் காலகட்டத்தில் தான் அவர் வெளிநாடு செல்லலாமா என்ற கேள்வி கேட்க வந்திருப்பார்.

அந்த நட்சத்திர அதிபதியும்,
அந்த பாவக அதிபதியும் இணைத்தால் அவர் என்ன கேள்விக்காக
வந்திருப்பார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம்
வதை படுவார்.
8ம் இடம் என்றால் மறை பொருள் சார்ந்த பிரச்சனைகள்.
பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம் வீட்டு மேல் கடன் வாங்குவார்.

பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம் நவாம்சத்தில் துலாம் லக்னத்தை செயல்படுத்தும்.
இதனால் இந்த காலகட்டம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
வீடு, அம்மா, உடல்நலம், ஆரோக்கியம் மனைவி,மனைவி உடல்நலம் ஆரோக்கியம்.

மறைபொருள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மறைந்துவிடும்.
இதில் கவனமாக இருக்க வேண்டும்.
தாத்தா பாட்டி சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

யோகமான நட்சத்திரம் ஆனால் வதைப்படுத்தி பிறகு மகிழ்ச்சியை அளிக்கும்.
பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://www.amazon.in/dp/B0984V57RH