மூலம் நட்சத்திரம் 4ம் பாதம்:

மூலம் நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் மூலம் நட்சத்திரம் 4ம் பாதம்.

மூலம் நட்சத்திரம் 4ம் பாதம் இதுநாள்வரையில் நல்லாபோயிட்டு இருந்த வாழ்க்கையில் சிறியதாக ஒரு தடங்கல் ஏற்படும்.

அது கடனாக இருக்கலாம்,
நோயாக இருக்கலாம்,
அவருடைய ஆப்ரேஷன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் இந்த மாதிரி கேள்விகளுக்காகதான் ஜாதகர் வருவார்.

மிக மிக கவனமாக இருக்கவேண்டும். மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கக்கூடிய காலகட்டம்.
பணம் சம்பந்தப்பட்டது,
ஜாமின் கையெழுத்து போட கூடிய இடங்கள்,
மிக கவனமாக இருக்க வேண்டும்.

பத்திரப் பதிவுகள்,
குழந்தைகள் சம்பந்தப்பட்டது,
கனவு சம்பந்தப்பட்டது,
மாந்திரீகம் சம்பந்தப்பட்டது இந்த காலகட்டங்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

நிறைய பொருள் விரயத்திற்கான வாய்ப்பு உள்ளது.
ஜாதகர் மிக கவனமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நட்சத்திர பாதமும் நம்முடைய நிலைகளுக்கு ஏற்ப தான் இயங்கும்.

மூலம் நட்சத்திரம் 4ம் பாதம் ஜாதகருக்கு கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

நன்றி, வணக்கம்.

உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம்:

உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

அதிர்ஷ்டம் எப்பொழுது வரும் என்பதை அறிவதுதான் அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை என்பது நம்முடைய உடல் எப்படி வளர்கிறதோ,
நம்முடைய மனம் எப்படி வளர்கிறதோ
அதனால் வாழ்க்கையில் நடக்கக்கூடிய அத்தனை நிகழ்வுகளுக்கும் என்னுடைய மனம் அந்தந்த நிலைகளுக்கு ஏற்ப அதாவது 20 வயதில் சைக்கிள் கிடைத்தால் சந்தோசம், 40 வயதில் எனக்கு கார் கிடைத்தால் சந்தோஷம் இப்படி என்னுடைய மனம் அதை நம்புகிறது என்னுடைய உடல் அதை விரும்புகிறது.

அதனால் உடலும் மனமும் மாறும் பொழுது ஏன் லக்னம் மாறக்கூடாது? ஏன் ராசி மாறக்கூடாது?
இதைத்தான் அட்சய ராசி என்று நான் சொல்கிறேன்.

கடக ராசியில் பிறக்கக்கூடிய நண்பர் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறப்பார்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தால் தசை புதன் தசையாக இருக்கும்,
அப்புறம் கேது தசை, சுக்ர தசை அடுத்து சூரிய தசை இருக்கும்.

சூரிய தசை நடக்கும் பொழுது உத்திரம் நட்சத்திரம்தான் இயங்கும்.
ஜென்ம நட்சத்திரம் ஆயில்யம்.
ஆனால் அட்சய நட்சத்திரம் உத்திரம்.

நீங்கள் வெற்றி பெற உங்களுடைய அட்சய நட்சத்திரம் என்னவென்று தெரியனும்.

என்ன தசை நடக்கிறதோ அதன் அதிபதி நட்சத்திரம் தான் உங்களுடைய வாழ்க்கையில் அட்சய நட்சத்திரம்.

உத்திரம் நட்சத்திரம் சிம்மம் ராசி அர்ச்சனை செய்து பாருங்கள்.
உத்திரம் நட்சத்திரம் கடகம் ராசி அர்ச்சனை செய்து பாருங்கள்.
உங்களுடைய வாழ்க்கை மாறும்.

தசாபுத்தி எப்படி மாறுகிறதோ அதே போல் லக்னம் மாறும், ராசி மாறும்.

வேண்டும் என்றாலும் , வேண்டாம் என்றாலும் உடலும் , மனமும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு மனிதருடைய பிரதிபலனை கணக்கீடு செய்து கிரகங்கள் நல்லதை செய்தால் நல்லது கொடுக்கும். கெட்டது செய்தால் கெட்டது கொடுக்கும்.
இதுதான் காலத்தின் கண்ணாடி.
இதுதான் நவக்கிரகங்கள்.
நவக்கிரகங்கள் எப்பொழுதும் நகராது.

ஜெனன ஜாதகத்தில் அதே இடத்தில் இருந்து கொண்டு கோட்சார கிரகங்களை வைத்து நல்லது கெட்டது தீர்மானிப்பார்கள்.
அதுதான் உண்மை.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://youtu.be/YaK3-uYvj_8