உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம்:

Spread the love

உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

அதிர்ஷ்டம் எப்பொழுது வரும் என்பதை அறிவதுதான் அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை என்பது நம்முடைய உடல் எப்படி வளர்கிறதோ,
நம்முடைய மனம் எப்படி வளர்கிறதோ
அதனால் வாழ்க்கையில் நடக்கக்கூடிய அத்தனை நிகழ்வுகளுக்கும் என்னுடைய மனம் அந்தந்த நிலைகளுக்கு ஏற்ப அதாவது 20 வயதில் சைக்கிள் கிடைத்தால் சந்தோசம், 40 வயதில் எனக்கு கார் கிடைத்தால் சந்தோஷம் இப்படி என்னுடைய மனம் அதை நம்புகிறது என்னுடைய உடல் அதை விரும்புகிறது.

அதனால் உடலும் மனமும் மாறும் பொழுது ஏன் லக்னம் மாறக்கூடாது? ஏன் ராசி மாறக்கூடாது?
இதைத்தான் அட்சய ராசி என்று நான் சொல்கிறேன்.

கடக ராசியில் பிறக்கக்கூடிய நண்பர் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறப்பார்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தால் தசை புதன் தசையாக இருக்கும்,
அப்புறம் கேது தசை, சுக்ர தசை அடுத்து சூரிய தசை இருக்கும்.

சூரிய தசை நடக்கும் பொழுது உத்திரம் நட்சத்திரம்தான் இயங்கும்.
ஜென்ம நட்சத்திரம் ஆயில்யம்.
ஆனால் அட்சய நட்சத்திரம் உத்திரம்.

நீங்கள் வெற்றி பெற உங்களுடைய அட்சய நட்சத்திரம் என்னவென்று தெரியனும்.

என்ன தசை நடக்கிறதோ அதன் அதிபதி நட்சத்திரம் தான் உங்களுடைய வாழ்க்கையில் அட்சய நட்சத்திரம்.

உத்திரம் நட்சத்திரம் சிம்மம் ராசி அர்ச்சனை செய்து பாருங்கள்.
உத்திரம் நட்சத்திரம் கடகம் ராசி அர்ச்சனை செய்து பாருங்கள்.
உங்களுடைய வாழ்க்கை மாறும்.

தசாபுத்தி எப்படி மாறுகிறதோ அதே போல் லக்னம் மாறும், ராசி மாறும்.

வேண்டும் என்றாலும் , வேண்டாம் என்றாலும் உடலும் , மனமும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு மனிதருடைய பிரதிபலனை கணக்கீடு செய்து கிரகங்கள் நல்லதை செய்தால் நல்லது கொடுக்கும். கெட்டது செய்தால் கெட்டது கொடுக்கும்.
இதுதான் காலத்தின் கண்ணாடி.
இதுதான் நவக்கிரகங்கள்.
நவக்கிரகங்கள் எப்பொழுதும் நகராது.

ஜெனன ஜாதகத்தில் அதே இடத்தில் இருந்து கொண்டு கோட்சார கிரகங்களை வைத்து நல்லது கெட்டது தீர்மானிப்பார்கள்.
அதுதான் உண்மை.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://youtu.be/YaK3-uYvj_8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *