விதி எப்படி செயல்படுகிறது - கர்ம வினை - ALP Astrology

விதி எப்படி செயல்படுகிறது? கர்ம வினையும் தலையெழுத்தும் – ALP விளக்கம்

இங்கே விதி என்பது என்ன? எப்படி அறியப்படுகிறது? அவரவர் ஜாதகத்தைப் பொறுத்தே அவரவர் தலையெழுத்து அமைகிறது. இதைத்தான் நாம் விதி என்று சொல்கிறோம். விதியை மாற்றவே முடியாதா, அல்லது மாற்ற முடியுமா? மாற்ற முடியாதது எது, மாற்ற முடிவது எது என்பதை நாம் புரிந்துகொள்ளும் வகையில், அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய டாக்டர் சி. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் ஒரு காணொளியில் கூறியதை விளக்கமாக இக்கட்டுரையில் காண்போம்.

கட்டுரை சுருக்கம்: அறிமுகம் – அட்சய லக்ன பத்ததி (ALP) ஜோதிட முறை – விதி மாறிக்கொண்டே இருக்கும் – விதிக்கு பிராயச்சித்தம் கிடைக்குமா? – எல்லாம் என் தலையெழுத்தா? – முன் ஜென்ம விதியை அனுபவிக்க வேண்டுமா? – நான் எப்போதோ செய்ததை அனுபவிக்கிறேனா? – கடந்த காலத்தில் உள்ள விதி என் கையில் உள்ளதா? – விதி எப்படி செயல்படுகிறது? – முடிவுரை.

அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட முறை

அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட முறை என்பது வளரும் லக்னத்தை அடிப்படையாகக் கொண்டு பலன் எடுக்கும் ஒரு எளிய ஜோதிட முறை.

டாக்டர் சி. பொதுவுடைமூர்த்தி விதி பற்றி விளக்கம் - ALP Astrology
டாக்டர் சி. பொதுவுடைமூர்த்தி – அட்சய லக்ன பத்ததி (ALP) ஜோதிட முறையை உருவாக்கியவர்

விதி மாறிக்கொண்டே இருக்கும்

  • விதி என்பது ஒவ்வொருவருடைய ஜாதகத்தைப் பொறுத்து அமையும்.
  • விதி ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கும்.
  • நான் போன ஜென்மத்தில் செய்த வினை அல்லது விதியை அனுபவித்தே தீர வேண்டும்; இதனை மாற்றவே முடியாது.

விதிக்கு பிராயச்சித்தம் கிடைக்குமா?

  • ஒருவர் ஏதோ ஒரு வகையில், ஒரு நிகழ்வால் இந்த ஜென்மத்தில் ஒரு பிரச்சனையை அனுபவிக்கிறார். அதனை அனுபவித்துதான் தீர்க்க வேண்டும். இதனை மாற்றவே முடியாது.
  • இதனை மாற்றுவதற்கான வழிகளுக்கு, பிராயச்சித்தம் நிறைய தேட வேண்டியது இருக்கும்.

எல்லாம் என் தலையெழுத்தா?

  • இந்த ஜென்மத்தில், இந்தக் காலத்தில் ஒருவரை அருவருப்பாகப் பேசியிருக்கலாம், வாழ்த்தியிருக்கலாம், சண்டை போட்டிருக்கலாம், கொண்டாடியிருக்கலாம்.
  • இதனை நீங்கள் புரிந்துகொண்டால் மாற்றிக்கொள்ளலாம்.
  • இதனைப் புரிந்துகொள்ளாதவர்கள், “எல்லாம் எனக்குத் தலையில் எழுதி வைத்த என் தலைவிதி” என்பர்.

முன் ஜென்ம விதியை அனுபவிக்க வேண்டுமா?

  • ஒருவர் தான் பேசிய வார்த்தைகளைப் புரிந்துகொண்டால் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் முன் ஜென்மத்தில் இருக்கக்கூடிய விதியை நான் அனுபவிக்க வேண்டும்.

நான் எப்போதோ செய்ததை அனுபவிக்கிறேனா?

  • யதார்த்தமாக ஒரு இடத்திற்கு ஒருவர் பைக்கில் போகிறார். அவருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செலவாகிறது. ஒரு லட்சமோ, இரண்டு லட்சமோ அல்லது ஆறு லட்சமோ செலவாகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நாம் இதனை முன் ஜென்ம ஏதோ ஒரு கர்ம வினையின் செயல்பாடு, அதனால் இவர் அனுபவிக்கிறார் என்று சொல்கிறோம். இது ஒரு வகை.
  • இவர் யதார்த்தமாகப் போனார். எங்கேயோ ஒரு பாறை உருண்டு வந்தது அல்லது ஒரு நாய் வந்தது. இதனால் அவருக்குக் கை கால் அடிபட்டது. அதற்கு ஆறு லட்சம் ரூபாய் செலவு செய்கிறார். இது நியாயமானது.

கடந்த காலத்தில் உள்ள விதி என் கையில் உள்ளதா?

  • கடந்த காலத்தில் உள்ள விதியைப் புரிந்துகொண்டால் அது உங்கள் கையில்.
  • இன்னொரு நிகழ்வில், ஒருவர் மருத்துவமனைக்காக ஒரு லட்சமோ, இரண்டு லட்சமோ, மூன்று லட்சமோ செலவு செய்கிறார். இவருக்கு என்னவென்றே தெரியாது. இவர் வீம்புக்காக ஒருவரோடு பைக் ரேஸில் போட்டி போடுகிறார். இவர் இந்த ஜென்மத்தில் யாரிடமோ கடன் வாங்கிக்கொண்டு ஏமாற்றியிருப்பார்; கடன் வாங்கிவிட்டுத் திருப்பிக் கொடுத்திருக்க மாட்டார். அது போட்டி மனப்பான்மையை உருவாக்கிக்கொண்டு, “வா, நீயா நானா” என்று இரண்டு பேர் பைக்கில் ரேஸ் போகிறார்கள். போகிறவர்கள் தெரியாமல் பள்ளத்தில் விட்டு இரண்டு பேரும் கீழே விழுகிறார்கள். இரண்டு பேரில் ஒருவருக்கு அடிபடுகிறது. அந்தக் காலகட்டத்தில் அவர் இந்த ஜென்மத்தில் செய்த வினையை அனுபவிக்கிறார்.
  • “இவரோடு போட்டி போடாதே, தேவையில்லாத விஷயத்தைச் செய்யாதே” என்று ஒருவர் சொல்லியிருப்பார். அவர் சொன்னதைக் கேட்டிருக்கலாமே! ஆனால் அவர் சொன்னதைக் காது கொடுத்துக்கூடக் கேட்க மாட்டார்.

விதி எப்படி செயல்படுகிறது?

இன்னொரு நிகழ்வில், ஒருவர் பைக்கில் மெதுவாகச் சென்றார். 100 அல்லது 110-ல் போகவில்லை. “40 கிலோமீட்டர் வேகத்தில்தான் போனேன், ஆனாலும் அடிபட்டது” என்று சிலர் சொல்வார்கள். சில பேர் 110-ல் போய் அடிபட்டிருப்பார்கள். “110-ல் போகாதே” என்று ஒருவர் சொன்னார்; ஆனால் பைக்கில் சென்றவர் கேட்கவில்லை. அவருக்கு அடிபட்டது.

விதி – காணொளி விளக்கம்

விதி எப்படி செயல்படுகிறது என்பது பற்றி டாக்டர் சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள் விளக்கும் ALP ASTROLOGY காணொளியைக் கீழே காணலாம்.

விதி எப்படி செயல்படுகிறது? – டாக்டர் சி. பொதுவுடைமூர்த்தி, அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட முறையை உருவாக்கியவர்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. விதி என்பது மாறிக்கொண்டே இருக்குமா? ஆம். விதி ஒவ்வொருவரின் ஜாதகத்தைப் பொறுத்து அமைகிறது; ஒவ்வொரு காலகட்டத்திலும் அது மாறிக்கொண்டே இருக்கும்.

2. விதிக்கு பிராயச்சித்தம் கிடைக்குமா? ஒரு நிகழ்வால் இந்த ஜென்மத்தில் வரும் பிரச்சனையை அனுபவித்துதான் தீர்க்க வேண்டும். அதனை மாற்றுவதற்கான வழிகளுக்கு பிராயச்சித்தம் நிறைய தேட வேண்டியிருக்கும்.

3. எல்லாம் என் தலையெழுத்தா? இல்லை. இந்த ஜென்மத்தில் நாம் பேசியதையும் செய்ததையும் புரிந்துகொண்டால் மாற்றிக்கொள்ளலாம். புரிந்துகொள்ளாதவர்களே எல்லாவற்றையும் தலைவிதி என்கிறார்கள்.

4. முன் ஜென்ம விதியை அனுபவிக்க வேண்டுமா? ஆம். முன் ஜென்மத்தில் செய்த வினையை அனுபவித்தே தீர வேண்டும்; அதனை மாற்ற முடியாது.

5. நான் எப்போதோ செய்ததை அனுபவிக்கிறேனா? காரணமே இல்லாமல் யதார்த்தமாக நடக்கும் விபத்து போன்றவை முன் ஜென்ம கர்ம வினையின் செயல்பாடாகப் பார்க்கப்படுகின்றன.

6. கடந்த காலத்தில் உள்ள விதி என் கையில் உள்ளதா? கடந்த காலத்தில் உள்ள விதியைப் புரிந்துகொண்டால் அது உங்கள் கையில். நம் வீம்பு, போட்டி மனப்பான்மை போன்ற செயல்களால் வரும் விளைவுகளை, மற்றவர் சொல்லும் அறிவுரையைக் கேட்டுத் தவிர்க்க முடியும்.

7. விதி எப்படி செயல்படுகிறது? முன் ஜென்ம வினை, இந்த ஜென்ம வினை என இரண்டு வழிகளில் விதி செயல்படுகிறது. இந்த ஜென்மச் செயல்களால் வருவதை எச்சரிக்கையைக் கேட்டு நடப்பதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

8. தலைவிதி என்பது என்ன? அவரவர் ஜாதகத்தைப் பொறுத்து அமையும் தலையெழுத்தையே நாம் விதி அல்லது தலைவிதி என்று சொல்கிறோம்.

முடிவுரை: உங்கள் கையில் இருக்கக்கூடிய விதிகள்

உங்கள் கையில் கொண்டாட வேண்டிய ஒரு விஷயத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இது எல்லாமே கர்ம வினைப்படிதான் நடக்கிறது. இது நடக்கட்டும். ஆனாலும் யாராவது ஒருவர் உங்களுக்கு வந்து சொல்வார்கள். நீங்கள் தயவுசெய்து காது கொடுத்து ஒரு முறை கேளுங்கள். உங்கள் விதி உங்கள் கையில்தான் இருக்கிறது; இது யார் கையிலும் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.

உங்கள் ஜாதகத்தை ALP முறையில் புரிந்துகொள்ள ALP பயிற்சிகள் மற்றும் சென்னை ஜோதிட பயிற்சி பக்கங்களைப் பாருங்கள்.

மேலும் அறிய: Karma in Hinduism

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *