அட்சய லக்னமும், ராகு கேது பெயர்ச்சியும்

Spread the love

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்னமும், ராகு கேது பெயர்ச்சியும்.
ஒவ்வொருவரும் பயப்படக்கூடிய விஷயம் ராகு-கேது.
ஜாதகத்தில் ராகு கேது பெயர்ச்சி ஆக இருந்தாலும் சரி, எல்லாரும் ராகு கேதுக்களுக்கு பயப்பட வேண்டுமா? இல்லை.

ராகு -கேது க்கள் நல்லதும் செய்யும்.
ஒரு பிரமாண்ட யோகத்தை கொடுக்கக் கூடியதும் ராகு-கேது தான்.
ராகு கேதுக்களின் விசேஷம் என்னவென்றால் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, கொடுத்தே தீரும் அவர்களுடைய சிறப்பை தான் பார்க்கப் போகிறோம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் ராகு -கேது களின் ராஜ யோகங்கள்.
ஜெனன லக்னத்திற்கு ராகு கேது தோஷம் இருந்தால் லக்னத்தில் ராகு,
7ல் கேது அவர்கள் பிறக்கும்பொழுது குடும்பத்தில் சில பிரச்சனைகள், குழப்பங்கள் உருவாகும்.

உதாரணமாக மேஷ லக்னத்தில் ஒருவருக்கு ராகு இருந்து, 7ம் இடத்தில் கேது இருந்தால் அவர்களுக்கு 20 to 30 வயது , அட்சய லக்கனம் மிதுனம்.மிதுன லக்னத்திற்கு ராகு நல்லது செய்வாரா? பிரமாண்டமான யோகத்தை செய்வார்.
மிதுன நட்சத்திரத்தில் லக்னபுள்ளி செல்லும் பொழுது அவர்கள் திசையில் ராகு புத்தியோ, ராகு திசையோ ஏற்படுமானால் அதுதான் அவர்களுடைய வாழ்க்கையில் பொற்காலம் ஆகும்.
அந்த அளவிற்கு ராகு-கேதுக்கள் வாழ்க்கையில் உயர்வையும், உச்சத்தையும் ஏற்படுத்துவார்கள்.
அட்சய லக்கனம் துலாம் லக்னமாக இருந்து, சுவாதி நட்சத்திரத்தில் சென்று 11ம் பாவ அதிபதியாக இருந்தால்
அங்கேயேயும் பிரம்மாண்டமான யோகத்தை கொடுக்கும்.
அட்சய லக்ன பத்ததி முறையில் ராகு கேதுகள் பிரமாண்ட யோகத்தையும் கொடுக்கும்.
மீண்டும் ஒரு நல்லதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://youtu.be/TGg4VQ_4j20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *