நல்லதே செய்யுங்கள், நல்லதே நடக்கும்

Spread the love

அன்பே சிவம், அன்பே ஆனந்தம்,
அன்பே வாழ்க்கை,
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க,
“மகிழ்ச்சி” என்கின்ற இந்த ஒரு வார்த்தை எல்லோருக்கும் பிடிக்கும்.
அனைவரிடமும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்று கேட்டால் அதை ஒருமுடிவாகவே சொல்ல மாட்டார்கள்.

மகிழ் என்றால் “இன்பம்”, அந்த இன்பம் என்பது மூலாதாரத்திலிருந்து நமது உச்சந்தலை வரை சந்தோஷத்தில் திளைக்க கூடிய ஒரு நிகழ்வை மகிழ்ச்சி என்று சொல்லலாம்.
வெளியில் சிரிப்பதற்கும் ,மனதிற்குள் இருப்பதற்கும் வெவ்வேறு சூழ்நிலைகள் தான் உள்ளது.

மகிழ்ச்சி என்பது ஒரு அளவீடு,
ஆசை எப்படி இருக்கும், அந்த ஆசைக்கு தகுந்த மாதிரி தான் நம் மகிழ்ச்சி அமையும்.
கொஞ்சமாக ஆசைப்பட்டால் மகிழ்ச்சி நிறைய இருக்கும்.நிறையாக ஆசைப்பட்டால் மகிழ்ச்சி பேர் அளவாக இருக்கும்.
சிறிய வீடாக இருக்கும் அங்கே மகிழ்ச்சி நிறைய இருக்கும், பெரிய வீடாக இருக்கும் அங்கே மகிழ்ச்சி இருக்காது.
அத்தனைக்கும் ஆசைகள் தான் அளவுகோலாக அமைகிறது.

குடும்பத்தோடு ,உறவினர்களோடு, சுற்றத்தாரோடு ,நண்பர்களோடு,
சக மனிதர்களாக பேசி வாழ்ந்தாலே,பெரிய இன்பம், அதுதான் பேரின்பம்.அதுதான் மகிழ்ச்சி.

எப்ப ஒரு மனிதன் பெற்றோரிடம், மனைவியிடம்,குழந்தைகளிடம் பேசாமல் வாழ்க்கை நடத்தினால் அது மகிழ்ச்சி கிடையாது.

சக மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோமோ,சக மனிதர்களை எப்படி நடத்துகிறோமோ,அதைப் பொறுத்து தான் நமக்கு மகிழ்ச்சி அமையும்.

நம்முடைய சுற்றத்தார்கள் உறவினர்கள் குழந்தைகள் அனைவரிடமும் மகிழ்ச்சியை கொண்டாடுங்கள்.
மனம் விட்டு பேசுங்கள், மனம் விட்டு சிரிங்கள். ஒரு பத்து நிமிடம் ஒருநாளைக்கு கலகலவென்று சிரிங்கள்.உங்கள் வாழ்க்கை மாறுதா என்று பாருங்கள். யாரு என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும்,
கண்ணாடியிடம் உங்களைப் பார்த்து நீங்களே சிரியுங்கள் அந்த சிரிப்பு உங்களை மூலாதாரத்திலிருந்து பக்குவப்படுத்தும், சந்தோஷப்படுத்தும்.

அதீதமாக நம்முடைய எண்ண அலைகளை இன்னும் விரிவு செய்ய வேண்டும்.
நம்முடைய எண்ணங்கள் எளிதாக நிறைவேறும்.
வாழ்க்கையில் நீங்கள் எப்பொழுதும் ஜெயித்துக் கொண்டே இருப்பீர்கள்.

என்னிடம் ஒருவர் நீங்கள் மட்டும் எப்படி ஜெயித்துக் கொண்டே இருக்கிறீர்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார்.
என்னைப் பொறுத்த அளவில் ஒரு நாளைக்கு 10 தியானம் நிமிடம் செய்யுங்கள் அது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக அமையும்.

வாழ்க்கையில் ஜெயிக்கணும் மகிழ்ச்சி என்பது இருக்கணும் அதாவது மகிழ்ச்சி என்பது உதட்டளவில் மட்டுமில்லாமல், மனதளவிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
நல்லதே செய்யுங்கள், நல்லதே நடக்கும், உங்கள் வாழ்க்கையில் அனைவரிடமும் மகிழ்ச்சியாக பேசுங்கள்.தேவையானது செய்யுங்கள், தேவையானதை பேசுங்கள், தேவை இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் பேசாதீர்கள்.
தேவை இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் வாங்காதீர்கள், அப்படி வாங்கினால் வாழ்க்கையில் கடன்பட்டு மகிழ்ச்சி என்பதை தொலைத்து விடுவோம்.

எது தேவையானது, எது தேவையற்றது என்பது நம்முடைய மன ஆசைகளை பொறுத்தது.
நல்லதொரு நிகழ்வை அமையட்டும்.
நன்றி, வணக்கம்

https://youtu.be/JsNC7xPiyCo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *