அஸ்தம் நட்சத்திரம் 3ம் பாதம் :

Spread the love

அஸ்தம் நட்சத்திரம் 3ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் அஸ்தம் நட்சத்திரம் 3ம் பாதம்.

அட்சய லக்னம் கன்னிலக்னம்,
அஸ்தம் நட்சத்திரம் 3ம் பாதம் செல்லக்கூடிய காலகட்டத்தில்
சிம்ம லக்னம் வரும்பொழுது படிப்பு சம்மந்தப்பட்ட விஷயங்களை ஜாதகர் கேட்பார்.

கடகலக்னம் போகும் பொழுது திருமணம் சம்மந்தப்பட்ட கேள்விகளை கேட்பார்.

மிதுன லக்னமாக இருந்தால் தொழில் சம்மந்தப்பட்ட, வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட கேள்விகளை கேட்பார்.

லக்னம் ரிஷப லக்னமாக இருந்தால் குழந்தைகள் சம்மந்தப்பட்ட கேள்வி அதிகமாக இருக்கும்.

ரிஷப லக்னத்தில் இருந்து
கன்னி லக்னம் வரக்கூடிய காலகட்டம் ஜந்தாவது பாவகம் சம்மந்தப்பட்ட கேள்விதான் வரும்.
அது தான் அட்சய லக்ன பத்ததி ஜோதிடம்.

அஸ்தம் நட்சத்திரம் 3ம் பாதம்,
தொழில் சம்மந்தப்பட்டது,
ஜாதகர் சம்மந்தப்பட்டது,
வெளிநாடு சம்மந்தப்பட்டது,
வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்டது,
மகிழ்ச்சி சம்மந்தப்பட்டது,
இரண்டாம் தாரம் சம்மந்தப்பட்டது,
அண்ணன் சம்மந்தப்பட்டது,
இடம் சம்மந்தப்பட்டது,
அம்மாவுடைய ஆரோக்யம் சம்மந்தப்பட்டது,
அம்மாவுடைய சொத்து, நிலங்கள் சம்மந்தப்பட்டது,
ஜாதகர் கேட்க வந்திருப்பார்.

இது சம்மந்தப்பட்ட கேள்விகள் கண்டிப்பாக ஒரு யோகத்தை கொடுக்கும்.

ஆனால் 6, 8, 10, 12 ல் சந்திரன் இருந்தால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை கொடுக்கும்.

கஷ்டங்களையும், தேவையில்லாத பிரச்சனைகளையும் கொடுக்கும்.
தேவையில்லாத உடல் உபாதைகளை கொடுக்கும்.

கோயிலுக்கு போகனும் ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை என்றால் உங்கள் ஜாதகம் எதிர்பார்த்த அளவு யோகத்தை கொடுக்காது.

உடலில் சிறுநீர் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் மனம் பாதிக்கப்படும்.
மலம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் உடல் பாதிக்கப்படும்.

தசா புத்தி சம்மந்தப்பட்ட விஷயங்கள்
பயம், பதட்டம், இறுக்கமாக இருந்தால் ஜாதகருக்கு சிறுநீர் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
இது தான் அட்சய லக்னம் அட்சய ராசி.

அஸ்தம் நட்சத்திரம் 3ம் பாதம் மிகப்பெரிய யோகத்தையும் கொடுக்கும், பாதகத்தையும் கொடுக்கும்.

மிகப்பெரிய அளவில் வெற்றியடையக்கூடிய நட்சத்திரம் அஸ்தம் நட்சத்திரம் 3ம் பாதம்.

ஆனால் ஜெனன ஜாதகத்தில் கன்னி லக்னத்தில் 6, 8, 10, 12 ல் சந்திரன் நின்றால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திப்பார்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்

https://youtu.be/ZhN3dfProH0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *