தெய்வ வக்ஞர்

பரிகாரம் என்பது, செய்வதும், தாம் முன்னின்று
செய்வதும் விளையாட்டா
ஜோதிடர் என்பவர் இதை மனதில் கொண்டு
செயல்பட வேண்டும்.

உருவாக்கும் பிரம்மாவும்,படிஅளக்கும்
பரமனும்,துஷ்ட்டர்களை அழிக்கும் விஷ்ணுவும்
இதில் பங்கு பெறுகின்றனர்.

பிரம்மன் உருவாக்கிய ஒரு ஜாதகத்தை எடுத்து
பொருத்தம் பார்க்கும் பொழுது இந்த ஜாதகம் சரியில்லை
என்று கூறும் பொழுது பிரம்மன் படைப்பு சரியில்லை
என்று ஆகிவிடுகிறது.

பாவ புண்ணியத்திற்கு ஏற்றவாறு உயர்த்துவதும்
தாழ்த்துவதும்,கிரகங்களுடைய வேலை.
இந்த கிரகங்களின் பணிகளை இடர்பாடு செய்யவும்,
சரிசெய்யவும்,ஆண்டவன் ஒருவனால்
தான் முடியும்.

அந்த கிரகங்கள் செய்யும் பணியை
ஜோதிடர்கள் இடர்பாடு செய்தால் ஜோதிடர்களின்
6,8,12 பாவங்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

எனவே ஜோதிடர்கள் இறைபக்தியும்,கவனம்
பிசகாமலும்,பணம்மட்டுமே குறிக்கோள் இல்லாமலும்
இருக்க வேண்டும்.
அடுத்து ஜோதிடர்களின் 1,5,9,12 பாவங்கள்
வலுத்து இருந்தால் இவர் சொல்லும்
பரிகாரத்தால்,ஜோதிடர் சொல்லும் பரிகாரத்தால்
இடர்பாடு ஏற்படாது.

கவனம் அது கொள்க

மற்றவர்களுக்கும் பிரச்சனை தீர வழிவகுக்கும்

ஆக ஜோதிடர்கள் பரிகாரம் சொல்லும் போது
6,8,12 பாவங்கள் பணி செய்தாலும் 1,5,9,12 பாவங்கள்
வலுத்து பரிகாரம் சொன்னால் தெய்வம் செய்ய
வேண்டிய வேலையை வழிவகுத்து கொடுக்கும்.

அவரே தெய்வ வக்ஞர் ஆகிறார்.

ஜோதிடம் கற்றுக்கொள்வது

ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி
—————————————————
புதிதாக ஜோதிடம் கற்றுக்கொள்பவர்கள் கீழ் கண்டவாறு ஒரு படிவம் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் கீழ் கண்ட விவரங்களை தெரிந்துகொண்டு அவைகளை குறித்து வைத்துக்கொள்ளவேண்டும். குறைந்தது 100 பேர்களைப்பற்றிய தகவல்களை சேர்த்து வைத்துக்கொண்டால் அது ஜாதக ஆய்வுக்கு பெரிதும் உதவும்.
ஜாதக விவரம்
ஜாதகரின் பெயர்:
ஜாதகரின் பிறந்த தேதி:
ஜாதகரின் பிறந்த நேரம்:
ஜாதகரின் பிறந்த ஊர்:
ஜாதகரின் முக்கிய அங்க அடையாளங்கள் என்ன?
ஜாதகரின் குணம் எப்படி?
ஜாதகர் அவர் வீட்டில் எத்தனையாவது குழந்தை?
ஜாதகரின் ஆரம்பகல்வியில் பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு பணவருவாய் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு நல்ல பணவருவை வந்த காலம் எப்பொழுது?
ஜாதகருக்கு பணத்தகராரு உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு உடன்பிறப்புகள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் உடன் பிறந்தோர் எண்ணிக்கை எத்தனை?ஆண்,பெண் விவரம்.
ஜாதகருக்கு உடன் பிறந்தவர்களுடன் உறவு எப்படி?
ஜாதகருக்கு இடமாற்றம் ஏதாவது ஏற்பட்டதா?
ஜாதகர் பிறந்த இடம் விட்டு வேறு இடத்தில் குடியேறியவரா?
ஜாதகரின் தாய் எப்படி?அங்க அடையாளம் மற்றும் குணம்.
ஜாதகருக்கு தாயுடனான உறவு நிலை எப்படி?சுமூகமா? விரிசலா?
ஜாதகரின் தாய்க்கு வருமானம் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் தாய்க்கு நோய்கள் ஏதாவது உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் தாய்க்கு சொத்துக்கள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் தாய்க்கு கல்வித்தகுதி என்ன?
ஜாதகருக்கு அசையா சொத்து (நில புலங்கள்,வீடு) உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகர் சொத்து வாங்கிய காலம் எப்பொழுது?
ஜாதகருக்கு அசையும் சொத்து (வண்டி,வாகனம்) உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு சொத்து தகராரு உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் பள்ளிக்கல்வியில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் கல்லூரிக்கல்வியில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் கல்வித்தகுதி என்ன?
ஜாதகருக்கு காதல் அனுபவம் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு தெய்வ நம்பிக்கை உண்டா?(உண்டு/இல்லை)
ஜாதகருக்கு அரசியல் ஆர்வம் உண்டா?(உண்டு/இல்லை)
ஜாதகருக்கு கலை ஆர்வம் உண்டா?(உண்டு/இல்லை)
ஜாதகருக்கு குழந்தைபாக்கியம் உண்டா?(உண்டு/இல்லை)
ஜாதகருக்கு எத்தனை குழந்தைகள்? ஆண்,பெண் விவரம்.
ஜாதகருக்கு குழந்தை பிறந்த காலம் எப்பொழுது?
ஜாதகருக்கு குழந்தைகளால் நன்மை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் குழந்தைகளுக்கு நோய்கள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு குழந்தைகளுடனான உறவு நிலை எப்படி?சுமூகமா? விரிசலா?
ஜாதகருக்கு கடன் தொல்லை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு எதிரிகளால் தொல்லை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு யாரால் என்ன தொல்லை?
ஜாதகருக்கு நோய்கள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு திருமணம் ஆகிவிட்டதா? (ஆம்/இல்லை)
ஜாதகருக்கு திருமணம் நடந்த காலம் எப்பொழுது?
ஜாதகருக்கு நடந்த திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டதா? அல்லது காதல் திருமணமா?
ஜாதகரின் திருமண வாழ்க்கை எப்படி? மகிழ்ச்சியானதா?
ஜாதகரின் திருமண வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமா?
ஜாதகரின் மனைவி அல்லது கணவன் எப்படி? அங்க அடையாளம் மற்றும் குணம்.
ஜாதகரின் மனைவி அல்லது கணவனுக்கு வருமானம் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் மனைவி அல்லது கணவனுக்கு நோய்கள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் மனைவி அல்லது கணவனுக்கு சொத்துக்கள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு அவமானம் ஏதாவது ஏற்பட்டதா?
ஜாதகருக்கு விபத்து ஏதாவது ஏற்பட்டதா?
ஜாதகருக்கு பயண சுகம் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் உயர்கல்வியில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் தந்தையார் எப்படி?அங்க அடையாளம் மற்றும் குணம்.
ஜாதகருக்கு தந்தையுடனான உறவு நிலை எப்படி?சுமூகமா? விரிசலா?
ஜாதகரின் தந்தைக்கு வருமானம் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் தந்தைக்கு நோய்கள் ஏதாவது உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் தந்தைக்கு சொத்துக்கள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகரின் தந்தைக்கு என்ன தொழில்?
ஜாதகரின் தந்தைக்கு கல்வித்தகுதி என்ன?
ஜாதகரின் தந்தை பிறந்த இடம் விட்டு வேறு இடத்தில் குடியேறியவரா?
ஜாதகருக்கு சொந்த தொழிலா? அடிமைத்தொழிலா?
ஜாதகர் என்ன தொழில் செய்கிறார்?
ஜாதகர் வேலைக்கு சேர்ந்த காலம் எப்பொழுது?
ஜாதகருக்கு உத்யோக உயர்வு கிடைத்த காலங்கள் எப்பொழுது?
ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்பட்ட காலங்கள் எப்பொழுது?
ஜாதகருக்கு தொழில் பிரச்சினை ஏதாவது உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு நண்பர்கள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு நண்பர்களால் உதவிகள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகருக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கிறதா?
ஜாதகரின் விருப்பங்கள் நிறைவேறுகிறதா?
ஜாதகருக்கு அதிருப்திகள் உண்டா? (உண்டு/இல்லை)
ஜாதகர் வெளி நாடு பயணம் செய்துள்ளாரா?
ஜாதகருக்கு நன்றாக தூக்கம் வருகிறதா?
ஜாதகருக்கு எதிர்பாராத விரையங்கள் ஏற்பட்டுள்ளதா?
ஜாதகரின் வீட்டில் உள்ளவர்கள் யாராவது வெளி நாட்டில் வசிக்கிறார்களா?
ஜாதகரின் வீட்டில் யாருக்காவது விபத்து ஏற்பட்டுள்ளதா?
ஜாதகரின் வீட்டில் யாருக்காவது திருமணம் நடக்காமல் தடைபட்டுள்ளதா?
ஜாதகரின் வீட்டில் யாருக்காவது உடல் ஊனம் உள்ளதா?

https://m.facebook.com/groups/764342467017455?view=permalink&id=769393759845659

ஜாதக ஆய்வு:

ஜோதிட அன்பர்களுக்கு வணக்கம்
= = = = = = = = = = = = = = = = = = = =
29-4-2018 முதல்
கேள்வி – பதில் பகுதியில்
சேலம் சசி குமார் மகன் மகிபாலன்
ஜாதக ஆய்வு.

பிறந்த தேதி,
30-11-2007
5.36 PM . சேலம் .

நட்சத்திரம் – – -. மகம் (சிம்மம்)
திதி – – – – – – தேய்பிறை சப்தமி
யோகம் ——– ஜந்திரம்
கரணம் – – – – – – பத்திரை

ஜாதகருக்கு தற்காலம் நடப்பு
சுக்கிர திசையில் சந்திர புத்தி.

திசாநாதன் லக்கின அதிபதியாகி
மற்றொரு பாவகமான துலாமில் நிற்க்கின்றான்.

இருந்தாலும் யோகமில்லை.
காரணம் ,

சுக்கிரன் இந்த ஜாதகருக்கு அவயோக திசை.

மேலும்
புத்திநாதன சந்திரன்
| . திதி சூன்யாதிபதி,
2 வைநாசிகாதிபதி,

பலன்.
அவ யோகியான சுக்கிர திசை ஆரம்பிக்கும் பொழுது கன்னியில் சனி சஞ்சாரம் செய்த காலம் தகப்பனாருக்கு கண்டம் (or ) விபத்து ஏற்பட்டு இருக்கும்.

நடைபெற்ற காலம் ( 2013 ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை)

ஜாதகருடைய கேள்வி.
========== ========
வெளியில் ஹால்டலில் இருக்கலாமா?

தாராளமாக இருக்கலாம்.

இந்த ஜாதகருக்கு திதியினால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்யும் ஸ்தலம்

தஞ்சை அருகில் உள்ள திருகானுர் பட்டி
கரும்பீஸ்வரர்
வளர் பிறை சப்தமி திதியில்
சென்று தரிசிக்கவும்.

அவயோகி திசாநாதன் சுக்கிரன்
தன்னுடைய அவயோக பாதிப்பை குறைப்பதற்க்கு

திருபுவனை
தோதாத்ரி நாத பெருமாளை
மிருகசீரிடம், சித்திரை . அவிட்டம்
(or) செவ்வாய் கிழமையன்று தரிசனம் செய்து வாருங்கள்.

வாழ்க்கையில் வளமாள கால கட்டத்திற்க்கு சுக்கிர பகவான் உங்களை வழி நடத்துவார்.

ஜாதகர் ஜாதக ஆய்வைப் பற்றிய
கருத்தை பதியவும் .

பல நண்பர்கள் பிறந்த இடந்தை குறிப்பிடவில்லை.

பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம்,
இடம் குறிப்பிடவும்.

நன்றி
திருப்பூர் ஜோதிடர் தணிகாசலம்,
திதி, யோக, கரண ஆராய்ச்சியாளர்.

ஜோதிடம் மக்களில் வாழ்க்கையில்

எனது ஜோதிட குருமார்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொண்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன்

ஜோதிடம் மக்களில் வாழ்க்கையில் அங்கமாக உள்ளது என்பதற்கு அவர்கள் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகளே
மிக பெரிய உதாரணம்
எனக்கு தெரிந்த வகையில் கீழே எழுதுகிறேன்

1.எனக்கு லக் இல்ல (லக்னம்)
2.அவனுக்கு கிரகம்(கிரகணம்)பிடுச்சுயிருக்கு
3.உங்கள் கை”ராசி”, முக ராசி நல்ல இருக்கு
4.என் கட்டம் சரியில்ல
5.அவனுக்கு சுக்கிர திசை
6.அவருக்கு குரு உச்சம்
7.ரோஹிணி நட்சத்திரம் மாமனுக்கு ஆகாது
8.மூலம் நட்சத்திரம் மாமனார் மாமியாருக்கு
ஆகாது
9.தள்ளி நில்லுடா அபிஷ்டு(அபிஜித் நட்சத்திரம்) கழிக்கப்பட்ட நட்சத்திரம்
10.அவனுக்கு கன்னி ராசிபா அது தான் அவனை சுற்றி பெண்கள் கூட்டம்
11.கரணம் தப்பின மரணம்
12.எல்லாம் அவனை பிடிச்ச (கிரகம்)
13.வக்கிர புத்தி காரன்
14.ரெண்டு பேருக்கும் 7ம் பொருத்தம் தான்
15.உன்னாலே ஒரே 7 அரை தான்
16.சனியானே என்று திட்டுவது
17.அவர் நாக்கில் சனி
18.எல்லாம் விதி(லக்னம்)
19.யோகம் வேண்டும்
20.யோகாரன்
21.விசாகம் நட்சத்திரம் மருமகளுக்கு ஆகாது
22.மகத்தில் பிறந்தால் ஜகாத்தை ஆழ்வார்
23.அவிட்டம் நட்சத்திரம் தவிட்டிலும் தங்கம்
24.பரணியில் பிறந்தால் தரணியை ஆழ்வார்
25.சாரம், அபாச்சாரம்
26.பாவம் ,அகம்பாவம்
27.நல்ல ராசி காரர்
28.சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான் !
29.விதி போகும் வழியே மதி போகும்
30.கேட்டை கோட்டை கட்டி ஆளும்

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667

சித்திர குப்தரும் எமதர்மரும்

சித்திர குப்தரும் எமதர்மரும்
★★★★★★★★★★★★★★★
SG யின் ஜோதிட பார்வை
★★★★★★★★★★★★★

சித்திர குப்தர்
★★★★★★★★
சித்திரை மாதம் பௌர்ணமி திதி சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் சித்திர குப்தர்.
சித்திரகுப்தரின் இராசி துலாம்.

காலப்புருஷ ராசியின் ஏழாம் இராசி துலாம்.இந்த ராசியில் கர்மக்காரகன் சனிக்கு உச்ச ராசியாக அமைந்துள்ளது.
துலாம் ராசியின் உருவ அமைப்பு தராசு. ஒரு மனிதனின் கர்மா துல்லியமாக எடைப் போடப்படும் ராசியாக இருப்பதால் தான் இதில் கர்மகாரகன் சனி உச்சம் அடைகிறார்.

சித்திர குப்தரின் பணி ஒரு மனிதனின் கர்மவினை கணக்கை துல்லியமாக எழுதி வைப்பது, அதனால் தான் சித்திர குப்தர் துலாம் ராசியில் அவதரித்துள்ளார்.துலாம் இராசி என்பது தராசு. தராசில் ஒரு தட்டில் பாவமும் மறு தட்டில் புண்ணியமும் எடை போடப்படுகிறது.

நீதிமானாகிய சனியை ஆயுள்காரகன் என்றும் கர்மகாரகன் என்றும் கூறுகிறோம்.துலாமில் நீச்சம் அடையும் கிரகம் சூரியன்.சூரியனை ஆத்மகாரகன் உயிர்காரகன் என்கிறோம்.ஒரு மனிதனின் ஆயுள் முடிந்தவுடன் அம் மனிதனின் உயிர் அதாவது ஆத்மா பிரிந்து சென்றுவிடும்.
எஞ்சி இருப்பது அந்த
மனிதனின் கர்மவினையே அதனால் தான் துலாமில் சனி உச்சமடைகிறார்.

சூரியன் நீச்சம் உயிர் பிரிகிறது.சனி உச்சம் கர்மா வலுப்பெறுகிறது. உயிர் போனாலும் ஒருவரின் கர்மவினை அவரின் பாவ புண்ணியத்திற்கு தக்கவாறு மீண்டும் பிறவி எடுக்கும் என்பதை தெளிவாக உணர்த்தவே ஏழாம் இடம் என்னும் இல்லற பாவத்தில் மீண்டும் தாம்பத்தியம் துவங்குகிறது.ஆக பிறவிக்கு வித்திடும் பாவம் ஏழாம் பாவம்.ஏழாம் பாவகத்தை அஸ்தமனம் என்றும் லக்கினத்தை உதயம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எந்த இடத்தில் உயிர் பிரிகிறதோ அதே இடத்தில் உயிரை தோற்றுவிக்க ஆண் பெண் இல்லற சுகத்தை வைத்தது இறைவன் திருவிளையாடல் என்றே கூற வேண்டும்.

முடிவு என்று எங்கு உள்ளதோ அங்கேயே அதன் உதயமும் தோன்ற வித்திடுவது ஏழாம் பாவமே.இப்படிப்பட்ட சிறப்பு மிக்க துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்த சித்திர குப்தரே மானுட உலகின் பாவபுண்ணிய கணக்கை துல்லியமாக கணக்கிட்டு காட்டும் உயர்நீதி மன்ற நீதிபதியாவர்.

எமதர்மராஜர்
★★★★★★★★
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் எமதர்மர். விசாக நட்சத்திரத்தின் 1 2 3 ஆம் பாதங்கள் துலாம் ராசியிலும்,
விசாகம் 4 ஆம் பாதம் விருச்சிக ராசியிலும் உள்ளது.
காலப்புருஷ ராசியின் ஏழாம் பாவம் துலாம்.ஏழாம் பாவத்தை நாம் மாரக பாவம் என்றும், எட்டாம் பாவமான விருச்சிகம் ஆயுள் பாவம் என்று அறிவோம்.பொதுவாக விசாக நட்சத்திரம் உடைந்த நட்சத்திரங்களில் தலையற்ற நட்சத்திரமாகும்.எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். ஒருவருக்கு தலையின் செயல்பாடுகள் நின்று விட்டால் அவருக்கு ஆயுள் முடிந்துவிட்டது என்கிறோம்.

எமதர்மர் அதனால் தான் தலையற்ற நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார் என எண்ண தோன்றுகிறது.
ஆயுள் முடிந்தவர்களை தன் பாசக்கயிற்றால் இழுத்து செல்வதற்காகவே விசாக நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார்.

விருச்சிக ராசி காலப்
புருஷனுக்கு ஆயுள் பாவம். அதில் நீச்சமாகும் கிரகம் சந்திரன். சந்திரனை உடல் காரகன் என்கிறோம்.
உடல் தன் செயல்பாட்டை நிறுத்திவிட்டால் ஆயுள் பிரிந்துவிட்டது என்கிறோம்.
விருச்சிகத்தில் சந்திரன் 3 டிகிரியில் நீச்சமடைவதும், அதுவும் விசாகம் 4ம் பாதத்தில் நீச்சமடைவதும் இந்த நீச்சமான பூத உடலையும் உயிரையும் கைப்பற்ற விசாக நட்சத்திரத்தில் அவதரித்த எமதர்மராஜாவே வருவது தான் இறை தன் கடமையை செவ்வனே செய்கிறது என்பதை அற்புதமாக உணரச் செய்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி சித்திரகுப்தர் என்றால் உச்ச நீதிமன்ற நீதிபதி எமதர்மரே.
பூலோக நீதிபதிகளின் தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டாலும்
மேலோக நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து யாவரும் தப்பிக்கவே முடியாது.

சித்திரகுப்தர் உடலற்ற நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர் .
உடலை பூலோகத்தில் விட்டுவரும் மனிதர்களின் கர்மகணக்கை துல்லியமாக எழுதிவைப்பவர் உடலற்ற நட்சத்திரத்தில் அவதரித்த சித்திரகுப்தரே.

உடலற்ற நட்சத்திரமான
சித்திரையில் பிறந்த சித்திரகுப்தர் உடலின் கர்ம கணக்கையும்,
தலையற்ற நட்சத்திரமான விசாகத்தில் பிறந்த எமதர்மர் ஒரு மனிதனின் உயிர் கணக்கையும் (ஆயுளையும் ) துல்லியமாக நிர்ணயம் செய்யவல்லவர்கள்
என்பதை உணரலாம்.

உடலும் உயிரும் அற்றவர்களால் தான் உடலைப்பற்றியும் உயிரைப்பற்றியும் கணக்கிட முடியும் என்பதற்கு இதுவே சாட்சி. உடைந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முன் ஜென்மவாசனையும்,சூட்சும உலகைப்பற்றிய அறிவும் நிச்சயம் அறிந்திருப்பார்கள்.
ஆவிலோக தொடர்பு கொண்டு பேசுபவர்களும் நிச்சயம் இந்த உடலற்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக தான் இருப்பார்கள்.

நம் முன்னோர்கள் சித்திரகுப்தரையும் எமதர்மரை பற்றியும்
இந்து மதத்தில் புராண வாயிலாக கூறியுள்ளார்கள் என்றாலும் அவை ஜோதிடத்துடன் ஒப்பிட்டு வருவது ஜோதிடம் வேதத்தின் கண்ணாக செயல்புரிகிறது என்பதை தெள்ளத்தெளிவாக அறியலாம்.

நன்றி

அன்புடன்
அஸ்ட்ரோ சக்திகுரு
நாமக்கல்