சுக்கிரன் தோஷம்

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பருவகாலத்தில் மண முடிக்க குரு பலம் வந்து விட்டதா ஜோதிடர்கலிடம் கேட்பார்கள்.

குரு பலம் என்பது திருமணம் நடத்துவதற்கு ஏற்றகாலம் என்பது உண்மையாகும்.

இதே போன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்துவதற்கு முக்கிய கிரகம் சுக்கிரன் ஆகும்.

சுக்கிரன் ஜாதகத்தில் எவ்வாறு அமைந்ததோ அதற்கு எற்றவாறு வரன் அமையும்.

சுக்கிரன் தோஷம் உள்ளவர்கள், குறிப்பாக சுக்கிரன் பெண் கிரகமாவதால் கல்யாணம் ஆகாத கன்னிப்பெண்கள் சுக்க்ர தோஷம் நிவர்த்தி பண்ண விவரமுள்ள அருகே உள்ள ஜோதிடரிடம் கேட்டுக் அதன்படி செய்யவும். பொதுவாக சுக்கிரனுடைய ஸ்தலம் திருவரங்கம் ஆகும் (ஸ்ரீரங்கம்).

அங்கு சென்று கன்னிப்பெண்கள் சுக்ர சுலோகம் சொல்வதும் வெண்ணிற வஸத்திரம் விரித்து சுலோகம் சொல்வது சிறப்பாகும் வெண்ணிறம் சுக்கிரனுக்குடையது என்பது குறிப்பிடத்தக்கது கல்யாணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு கல்யாணம் ஆகும்.

குபேர எந்திர பூஜை

குபேர எந்திர பூஜை செய்யுங்கள்!

காசு, பணம், துட்டு, மணி, ரூபாய், டாலர், யூரோ எப்படிச் சொன்னாலும் சரி… எல்லோருக்கும் அவசியம் தேவைப்படுவது இதுதான்.
செல்வம் சேர்ந்துவிட்டால் மட்டும் போதாது. அது தேயாமல் பெருக வேண்டும். தொலையாத நிதியம் அதாவது கரையாமல் சேரும் செல்வம் வேண்டும் என்றுதான் அபிராமிபட்டரே அம்மனிடம் வேண்டுகிறார்.

உங்கள் வீட்டில் செல்வம் சேரவேண்டுமா? திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் சேர்ந்து குறைவற்ற பொருட்செல்வத்தை நீங்கள் பெற வேண்டுமா?
இதோ அதற்கான எளிய பூஜை முறை உங்களுக்காகவே தரப்பட்டிருக்கிறது.
ஸ்லோகம் சொல்வது, மந்திரங்களைப் படிப்பது, சுற்றிச் சுற்றி வலம் வருவது, ஏராளமான பூஜைப் பொருட்களை வாங்குவது இப்படி எதுவும் இந்த பூஜைக்கு வேண்டாம். ஆனால் ஒரே ஒரு விஷயம் அவசியம் வேண்டும். அது உண்மையான பக்தியும், நம்பிக்கையுடனான வழிபாடும்தான். இவற்றுக்கு நீங்கள் உத்தரவாதம் தந்தால் போதும். உங்கள் வீட்டில் செல்வமகள் நிரந்த வாசம் செய்வாள் என்பது நிச்சயம்!
பூஜையைத் தொடங்குவதற்கு சில முன்னேற்பாடுகள் அவசியம். முதலாவது, நீங்கள் பூஜை செய்யப்போகும் நாளைத் தேர்ந்தெடுப்பது.
தொடர்ந்து ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் குறிப்பிட்ட தினத்தில் செய்யவேண்டிய பூஜை இது. எனவே ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் அல்லது மாதம் ஒருநாள் பௌர்ணமி தினத்தில் செய்வது சிறப்பு. உங்களுக்கு உகந்த தினத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஆண், பெண் என எவர் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். அதே சமயம் பூஜையைத் தொடர்ந்து ஒருவரே செய்வது நல்லது. இயலாத சமயத்தில் அதே குடும்பத்தின் வேறு உறுப்பினர் செய்யலாம். குடும்பத்திலுள்ள எல்லோரும் கலந்து கொள்வது மிகச் சிறப்பானது.
இரண்டாவதாகி இந்த பூஜையை செய்திட ஒருமுறைக்கு ஒன்பது காசுகள் என, ஒன்பது தடவைக்குமாகச் சேர்த்து என்பத்தொரு நாணயங்கள் அவசியம். ஒரு ரூபாய் முதல் உங்கள் வசதிக்கு ஏற்ற தொகை வரையான காசைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம் எண்பத்தொரு காசுகளும் சம மதிப்பு உடையவையாக இருக்க வேண்டும் என்பதுதான். உதாரணமாக ஒரு ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்த முடிவு செய்தால் எண்பத்தொரு ஒரு ரூபாய் நாணயங்கள் தேவை.

இதேபோல் உங்கள் வசதிக்கு ஏற்ப எண்பத்தொரு காசுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான், நீங்கள் குபேர யந்திர பூஜை செய்யத் தயாராகிவிட்டீர்கள்.
வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினம் என நீங்கள் பூஜை செய்யத் தேர்வு செய்த நாளில், அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்றுங்கள்.
அடுத்து, செய்யும் பூஜை தடைபடாமல் நடக்கவும், குறைவிலா செல்வம் குறையற்ற வழியில் சேர்ந்திடவும் மகாகணபதியை மனதாரத் துதியுங்கள்.

அந்த நாளில் நல்ல நேரத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு பலகையின் மீது முன்பக்கம் படத்தில் தரப்பட்டிருப்பது போன்று ஒரு கட்டத்தை வரைந்து, எண்களையும் எழுதுங்கள். இந்தக் கட்டத்தை குங்குமத்தால் வரைவதும், எண்களை அரிமாவால் எழுதுவதும் சிறந்தது. திருமகளைக் குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள “ஸ்ரீ’ எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம். இதுவே குபேர யந்திரக் கோலம். அடுத்து, கட்டங்களில் எழுதப்பட்டுள்ளது எழுத்துக்களுக்குப் பக்கத்தில் கட்டத்திற்கு ஒன்று வீதம் ஒன்பது நாணயங்களை வையுங்கள். எழுத்தை அழித்தோ, மறைத்தோ வைக்கக்கூடாது. எனவே யந்திரத்தை வரையும் போதே அதற்கு ஏற்றபடி வரைந்து கொள்ளுங்கள்.

நாணயம் மகாலட்சுமிக்கு அடையாளம் இப்போது குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதிகம்.
இனி, லட்சுமி குபேர் யந்திரத்தை நீங்கள் பூஜிக்க கொஞ்சம் உதிரி பூக்களை யுடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
யந்திரத்தின் முன் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஒன்றினை ஏற்றிவையுங்கள்.

“தாயே மகாலட்சுமி, மனதார உன்னை வணங்கும் எங்கள் மனையில் மங்களங்கள் யாவும் பெருக வேண்டும். மங்காத செல்வம் சேரவேண்டும். என்றென்றும் உன்னரும் நீங்காது இருக்க வேண்டும்!’ என்று மனதார வேண்டுங்கள்.

மகாலட்சுமியே போற்றி! மங்கள லட்சுமியே போற்றி! தீபலட்சுமியே போற்றி! திருமகள் தாயே போற்றி! அன்னலட்சுமியே போற்றி! கிருக லட்சுமியே போற்றி! நாரண லட்சுமியே போற்றி! நாயகி லட்சுமியே போற்றி! ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி!

என்று சொன்னவாறே சிறிய பூவை நீங்கள் வரைந்திருக்கும் குபேர யந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் போடுங்கள்.

வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி!
குலம் செழிக்கச் செய்திடுவாய் குபேரனே போற்றி!
செல்வங்கள் தந்திடுவாய் சிவன் தோழா போற்றி!
உளமாரத் துதிக்கின்றோம் உத்தமனே போற்றி போற்றி!
இந்தத் துதியைச் சொல்லி குபேரனைக் கும்பிடுங்கள்.

தூப, தீபம் காட்டுங்கள். சர்க்கரை கலந்த பால் அல்லது பால் பாயசம் நிவேதனம் செய்யுங்கள்.
அவ்வளவுதான். பூஜை செய்தாயிற்று. அன்று மாலை உங்களால் இயன்ற அளவுக்கு மங்களப் பொருள்களை பிறருக்கு வைத்துக் கொடுங்கள். வசதி குறைவாக இருப்பின் இதனை ஒன்பதாவது வார முடிவில் தந்தாலும் போதும்.
பூஜை செய்த அன்று மாலை ஏதாவதொரு பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை தரிசியுங்கள். மறுநாள், குபேர யந்திரத்தில் வைத்து பூஜித்த காசுகளை எடுத்து பத்திரப்படுத்தி வையுங்கள். ஒரு துணியை நனைத்து அதனால் குபேர யந்திரக் கோலத்தைத் துடைத்து விடுங்கள்.

அடுத்த வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாளில் முன்புபோலவே குபேர யந்திரம் வரைந்து வேறு காசுகளை வைத்து பூஜித்து, மாலையில் கோயிலுக்குச் செல்வதுவரை எல்லாவற்றையும் செய்யுங்கள்.
இப்படி ஒன்பது வெள்ளிக்கிழமைகள் அல்லது ஒன்பது பௌர்ணமிகள் பூஜை செய்து முடித்ததும், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று, சேர்ந்திருக்கும் எண்பத்தொரு காசுகளையும் எடுத்துக் கொண்டு சென்று ஏதாவது ஒரு சிவன் கோயில் உண்டியலிலோ அல்லது பெருமாள் கோயிலில் தாயார் சன்னதியில் உள்ள உண்டியலிலோ செலுத்துங்கள்.

(சிவபெருமானே குபேரனுக்கு எல்லா செல்வஙகளையும் அளித்தவர். அதோடு அவனை நண்பனாகவும் ஏற்றவர். எனவேதான் சிவாலயத்திலும் செலுத்தலாம்!)
அன்றையதினம் உங்களால் இயன்ற அளவு மங்களப் பொருட்களை பெண்களுக் வைத்துக் கொடுங்கள். அன்றைய தினம் மகாலட்சுமியே ஏதாவது ஒரு உருவில் அதனை பெற வருவாள் என்பது நம்பிக்கை. எனவே, குறைவாகக் கொடுத்தாலும் மனதாரக் கொடுங்கள்.

ஒன்பதாவது வார (மாத) பூஜை முடிந்த நாள் முதல் உங்கள் வீட்டில் நிச்சயம் செல்வவளம் சேரும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும். வருடத்துக்கு ஒருமுறை இந்த லட்சுமி குபேர யந்திர பூஜையைச் செய்யுங்கள். குறையாத செல்வதும், நிறைவான நிம்மதியான வாழ்வும் நிச்சயம் கிட்டும்.

நன்றி
Baskaran Sankar

https://m.facebook.com/story.php?story_fbid=867882623338087&id=100003490720968

எனது ஜோதிட குருமார்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொண்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன்

சூரியன் சந்திரன் ஒரு ஆன்மிக ஜோதிட பார்வை🌞🌝🌎

ஜோதிடத்தில்
சூரியன் தந்தையை குறிக்கும்
சந்திரன் தாயை குறிக்கும்

ஏன் தெரியுமா?

தந்தை என்ற கணவர் தான் கடமையை செய்ய வெளியே செல்லும் போது தனக்கு சமமான தாய் என்ற மனைவியை
பிள்ளைகளுக்கு(பூமிக்கு) துணையாக விட்டு செல்வர்

சூரியன் மறைந்து சந்திரன் ஒளிர்வது போல

அதேபோல்
சந்திரன் சுயம் ஒளிரும் தன்மை
கிடையாது,சூரியனின் ஒளியை தான் மீது வாங்கி கொண்டு அதை ஒளிர செய்கிறது.

அறிவியல்படி சந்திரனை தாய்க்கு காரகம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக பெண்களின் மாதவிடாய் சுழற்சிக்கும் சந்திரனை போல் 28 நாட்களே.

சூரியன் என்ற தந்தையின் ஒளியாகிய உயிர் அணுவை தான் உடலில் கருவாய் மாற்றும் தாய் என்ற சந்திரன்
இவர்களால் தான் நாம் இந்த உலகில் உயிர் வாழ்கிறோம்.

ஆதி காலத்தில் மனிதனுக்கு இருந்த மிகா பெரிய பிரச்சனை இருட்டு இதனால் வரும் பயம்

சூரியன் மறையும் போது வரும் இருட்டின் பயத்தை சந்திரன் உதித்து வெளிச்சம் தந்து அந்த பயத்தை போக்குவர்.

அதேபோல் ஆதித்தொட்டு சூரியன் சந்திரன் தான் நாம் முதல் தெய்வம்
“தாயும்,தந்தையும்”இதனால் இருவரும் சேர்ந்து வரும் நாளில் அம்மாவாசை திதியாக
நாம் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறோம்.

தந்தை உறுதி தன்மையுடனும்
தாய் உணர்ச்சி தன்மையுடனும் இருக்க காரணம் சூரியன் ,சந்திரனை வைத்து புரிந்துக்கொள்ளலாம்.

சூரியன் தெய்வதுதில்லை(உறுதி)
சந்திரன் தெயும் தன்மையுள்ளது(உணர்ச்சி)

வீட்டில் பிள்ளைகள் கையை வெட்டி கொண்டால் உடனே தாய் பதருவர்,
தந்தையோ காயத்தின் தன்மையை பார்த்து கொண்டு இருப்பார் ஒன்றுமில்லை சிறு காயம் தான் என்பார்.

இதுபோல் பல காரணத்தால் நாம் உறுதியாக புரிந்து கொள்ள முடியும்
“சூரியன் தந்தைக்கும் சந்திரன் தாய்க்கும்”
காரகம் என்று

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667

ஜோதிடத்தில் கால நிர்ணயம்:

ஓம் ஸ்ரீ கால காளேஸ்வரா போற்றி போற்றி!!!

ஜோதிடத்தில் கால நிர்ணயம்:

நண்பர்களுக்கு வணக்கம்:
……………………………………………………………
பொதுவாவே நாம் ஜோதிடர் இடத்தில் கேள்விகள் கேட்கும் போது அவரும் ஒரு ஆறு மதாத்தில் அல்லது மூன்று மாதத்தில் நடக்கும் என்று கூருவர்.

ஆனால் நம் பதிவின் நோக்கம் ஒரு செயல் எப்போது எந்த கால கட்டத்தில் நடக்கும் என்பதை துல்லியமாக கூறுவது தான். இந்த விஷயம் பல ஜோதிடர்களுக்கு தெரியும் இருந்தாலும் யாரும் வெளியில் சொல்லுவது இல்லை.
……………………………………………………………….

#எப்படி கணிப்பது?

ஜாதகருக்கு திருமணம் எப்போது நடக்கும்? இதை கணிக்கலாம்.

முதலில் உங்களுடைய திசை என்னவென்று பார்க்கவும்.
உதாரணம் குரு திசை என்று வைத்துகொள்வோம்.

குரு திசை 16 வருடம்.

அடுத்து அவர் ஒரு நட்ச்சத்திரத்தின் பாதத்தில் இருப்பார் அது எந்த பாதம் என்று பார்க்கவும் (ஒரு நட்சத்திரத்திட்கு நான்கு பாதங்கள்).

குரு 3ம் பாதத்தில் இருபதாக வைத்துகொள்வோம்.

இப்போது குரு திசை குரு புத்தி குரு அந்தரம் என்று வைத்துகொண்டு கணிதம் செய்வோம்
………………………………………………………………..

Step 1:

இப்போது குரு திசை 16 வருடத்தினை 4 பாதங்களுக்கு சரியாக பிரிக்கவும் பாதம் ஒன்றுக்கு 4 வருடம் வரும்.

இங்கு தான் கவனிக்கவேண்டும் முதல் இரண்டு பாதத்திற்கு 8 வருடங்கள் பெரியதாக ஒன்றும் வேலை இல்லை அடுத்து வரும் மூன்றாம் பாதம் தான் நாம் கவனிக்கவேண்டும் அதில் தான் ஒரு செயல் நடைபெரும். அதற்கு முன்பு (8 வருடங்கள்) நீங்கள் செய்த செயல் அத்தனையும் முயற்சி மட்டுமே.

சரி மூன்றாம் பாதம் என்று கணித்து விட்டோம் இப்போது அதில் நான்கு வருடங்கள் உள்ளது அப்படி எனில் நான்கு வருடத்தில் எப்போது ஒரு செயல் நடைபெறும்.
…………………………………………………………………

Step 2:

இங்கு கவனிக்கவேண்டியது ஒரு பாதித்திட்கு 3.20 degree. மூன்றாம் பாதத்தில் எந்த டிகிரி யில் குரு இருக்கிறது என்று பார்க்கவும்.

1 டிகிரியில் இருப்பதாக வைத்துகொள்வோம்.
3.20 இதை வினாடிகள் செய்தால் 3*60=180+20=200

இப்போது 4வருடங்கள் / 200 = 4*365/200= 1460நாட்கள் / 200 = 7.3 நாட்கள் 1விகலைக்கு 7.3 நாட்கள் இதை ஒரு கணித எளிமைக்கு 7 நாட்கள் என்று வைத்துகொள்வோம்.

இப்போது நம் குரு நிற்கும் பாதஅளவு 1 degree இதை விகளை ஆக்க 60 அப்படியெனில் 60*7 =420 நாட்கள் வரும். இதை வருடம் ஆக்கா 1வருடம் 55 நாட்கள் ஆக வரும். ஆக மொத்தம் 9வருடங்கள் 55 நாட்கள் எனற கால அளவில் நம் திசை நாதன் சரியாக ஒரு செயலை செய்ய ஆரம்பிப்பர்.
……………………………………………………………………………………………….
சரி அப்படிஎனில் இப்படி யாருக்கேனும் இருந்து கல்யாணம் செய்யவேண்டும் என்றால் அதுவும் 30 வயதில் குரு திசை ஆரம்பம் என்றால் இன்னும் 9 வருடம் அதாவது 39 வயதுவரை காத்துகொண்டு இருக்கவேண்டுமா?
…………………………………………………………………

Step 3:

அதுதான் இல்லை இங்கு தான் நம் கடவுள் நமக்கு புத்தி அந்தரம் என்ற அமைப்பை கொடுத்து உள்ளார்.

மேலே கணித்த படி புத்தி அந்தரம் கணிக்கவேண்டும்.

உதாரணம்:

குரு திசையில் குரு புத்தி 768 நாட்கள் இதை 4 பாதங்களுக்கு சரியாக பிரிக்கவும் பாதம் ஒன்றுக்கு 192 நாட்கள் வரும். முதல் இரண்டு 192+192=384 நாட்களை விட்டுவிடவும். மூன்றாம் 192 நாட்களை நம் குரு நிற்கும் டிகிரி யின் அளவுகளுக்கு பிரித்து கொடுக்கவும். 192/200=0.96 நாட்கள்

அப்படிஎனில் 0.96*60=57.6 நாட்கள் =58 என வைத்துகொள்வோம்.
அதாவது குரு புத்தியில் திருமணம் நடக்கும் என்று ஜோதிடர் கணிதிருந்தால் அவருக்கு 384+58=442 நாளில் இவருக்கு திருமணம் நடைபெறும் என்று சொல்லலாம். இதை வருடமாக்க 1வருடம் 77நாட்கள் ஆகும்.

அதாவது குரு திசை குரு புத்தியில் (குரு ஆரம்பித்ததில் இருந்து) 1வருடம் 77நாட்கள் என்னும் போது இவருக்கு திருமணம் ஆகும்.
…………………………………………………………………

இதை போன்று குரு அந்தரத்தில் அவருக்கு திருமணம் நடக்கும் என்று கணித்தால் அந்தரத்தை இதை போன்று கணிதம் செய்யவேண்டும். இப்படி செய்யும் போது சரியான நாள் கிழமை நேரம் வரை துல்லியமாக கணிக்கலாம்.

இதற்கு நமக்கு தேவை பிறந்த சரியான நேரம். ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் தவறாக பதிவு செய்யதால் 20 முதல் 25 நாட்கள் வித்தியாசம் வரும். அதாவது அந்த செயல் நடக்கும் காலம் சிறிது மாறுபடும்.
…………………………………………………………………

இப்படி தான் ஒரு செயலை நடக்கும் கால அளவை கணிக்கவேண்டும்.

இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் குரு திசை வருடத்தை ஒரு முழு நட்சத்திரத்தின் 13.20 degree ஆல் வகுத்து. குரு எந்த டிகிரி யில் உள்ளாரோ அந்த அளவுகள் மேல் உள்ளவாறு சரிபார்த்து கால நிர்ணயம் செய்யலாம் இதை போல் தான் புத்தி அந்தரம் சூட்சமம் பிரிக்கவேண்டும்.

இது கடினம் இல்லை இரண்டு முறை முயச்சி செய்து பார்த்தால் உங்களுக்கு எளிதாகி விடும்.

உதாரணம்: குரு திசை 16 வருடம்
குரு நிற்கும் பாத அளவு 7.40degree
கால நிர்ணயம் : 16*365/13.20=ans*7.40=நடக்கும் காலம். இது திசைக்கு

இதைபோல் புத்தி அந்தரம் சூட்சமம் கணிதம் செய்துகொள்ளுங்கள்
…………………………………………………………………
புதன் புத்தியில் திருமணம் நடக்கும் என்றால் புதன் புத்தியை இதை போல் பிரிக்கவும் அதாவது புதன் நிக்கும் பாதம் அல்லது டிகிரியை கணிதம் செய்யவும்.
……………………………………………………………….

#பின்குறிப்பு : திருமணம் நடக்கும் என்றால் தான் இந்த கணிதம். நடக்குமா? நடக்காதா? என்பதை அவரவர் ஜாதகம் பார்க்கவேண்டும்.
…………………………………………………………………

https://m.facebook.com/story.php?story_fbid=1441993622525264&id=100001439191821

கடன் தீர்க்கும்

கடன் தீர்க்கும் முறைகள் :-

1. ஒவ்வொரு மாதமும் வரும் மைத்ர முகூர்த்ததில் வாங்கிய கடனின் ஒரு சிறு பகுதியாவது செலுத்தி விடுங்கள்.

2. பணப்பெட்டியில் சிறிது உலர் திராட்சை வைத்திருங்கள்.

3. வீட்டில் ஊறுகாய் இருக்க வேண்டும். குபேரனுக்கு மிகவும் பிடித்தது ஊறுகாய் ஆகும்.

4. வீட்டின் ஈசான்ய பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

5. பணப்பெட்டியில் 9 காரட் கார்னெட் வைத்துக்கொள்ளலாம்.

6. பணப்பெட்டியில் வில்வ இலைகள், லவங்கம் வைத்துக்கொள்ளலாம்.

7. பித்ரு தர்ப்பணங்களை நிறுத்தக்கூடாது.

8. குல தெய்வ நேர்த்திக்கடன் பாக்கி வைக்கக்கூடாது.

9. காவல் தெய்வங்களுக்கும் நேர்த்திக்கடன் பாக்கி வைக்க கூடாது.

10. சப்போட்டா வளர்ப்பது நல்லது.

11. ஸ்வஸ்திக் படம் வீட்டில் வைத்திருப்பது நல்லது.

12. தினமும் கனகதாரா ஸ்தோத்ரம் படிப்பது நல்லது.

13. கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து பிரார்த்திக்கவும்.

ருண விமோசன அங்காரக மந்திரம்
———————————————————–

மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.