கட்டளை எங்கிருந்து வருகிறது

அனைவருக்கும் வணக்கம்

இன்றைய பதிவு ஒரு ஜாதகத்தில் முக்கியமாக லக்கினத்தை வைத்து ஜாதகரை பற்றியும் ராசியை வைத்து ஒருவருடைய நடைமுறை எண்ணங்களையும் பார்க்கலாம். ராசிக்கும் இலக்கணத்திற்கும் உள்ள தொடர்பு அவர்களுடைய வாழ்வியல் இடர்பாடுகளை எடுத்து குறிக்கும் உதாரணமாக மேஷ லக்னம் தனுசு ராசி என்று வைத்துக் கொள்ளுங்கள் ஒன்று மற்றும் ஒன்பதாம் பாவங்கள் இயக்குகிறது இந்த பிறவி அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து சுகங்களையும் ஆனால் ஆனால் சூரியன் என்ற ஆத்ம கிரகம் இரண்டு தொடர்பு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் சூரியன் சந்திரன் லக்னம் இம்மூன்று இருக்கும் தொடர்பு முதல் பாவகம், ஐந்தாம் பாவகம், 9ம் பாவகம், தொடர்புகொள்ளுதல் தொடர்பு கொள்கிறது நல்லது 1 4 7 10 ஆம் பாவத்தில் தொடர்பு வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும், அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த பிறவியில் அந்த ஜாதகர் கிடைக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக எல்லா வளமும் கிடைக்கும் ஆனால் லக்னத்திற்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இருக்கக்கூடிய பாவங்கள் பாவகத்திற்கு 3 6 8 12 இருந்தால் அந்த ஜாதகர் எந்த தசா புத்தியில் கண்டிப்பாக கஷ்டப்படுவார்கள் மேலும் அவர்கள் வாழ்வியல் முறை தெரியாமல் உடலுக்கு மனசுக்கு அல்லது சுற்றுப்புற சூழ்நிலை யோடு ஒத்துப்போகாமல் தனித்து நின்று தனக்குத்தானே தண்டனை கொடுத்து கொள்வார்கள் கேட்டால் நான் அப்படித்தான் நான் இருப்பேன் என்னை ஒருபோதும் மாற்ற முடியாது என் விதி இப்படித்தான் தெரிந்தும் கஷ்டப்படுவார்கள் நல்லது காலத்தின் விதியை உணராமல் கஷ்டப்படுவார்கள் வாழ்வியல் உண்மை என்பது உங்களுக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமானால் அது நல்லதா கெட்டதா என்று ஆய்வு செய்யும் போது உங்கள் மனம் என்ன முடிவு செய்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வீர்கள் இதை நீங்கள் விதி என நினைத்துக் கொள்ளலாம் ஆனாலும் காலத்தின் விதி உங்களை இதுபோன்று நினைக்கலாம் இதற்கு அடிப்படையாக ஒவ்வொருவரும் அவருடைய மனதை ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் அவர்கள் கட்டளை எங்கிருந்து வருகிறது என்பதை யோசித்துக் கூறுங்கள்.

தொடரும்

அன்புடன்

சி.பொதுவுடை மூர்த்தி உளவியல் ஆராய்ச்சியாளர், ஆழ்மன ஆராய்ச்சியாளர்.

ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?

ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?
————————————————————
1. ஜோதிட ஆலோசனை பெற விரும்புபவர்கள் ஜோதிடரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவதே சால சிறந்தது. உங்களுக்கு நேரமில்லை, நேரில் சந்திக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைக்கும்வரை உங்கள் வாழ்க்கையில் தடைகள் தொடரும்.
2. ஜோதிட ஆலோசனை பெறும்போது தன் சொந்த சோகக் கதைகளை மூச்சு விடாமல் சொல்லி ஜோதிடர் தன் பணியை செய்யவிடாமல் செய்து, ஜோதிடர் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது பெரும் தவறு. உங்களுக்கு உரிய ஆலோசனை அப்பொழுது கிடைக்காது. நவக்கிரகங்கள் உங்களுக்கு நல்வழி காட்ட மாட்டார்கள்.
3. ஜோதிடரை கீழே உட்கார வைத்து விட்டு , நீங்கள் உயரத்தில் உட்கார்ந்து கொண்டு , காலாட்டிக்கொண்டு அதிகார தோரணையில் பலன் கேட்டால் உங்களுக்கு நீங்களே குழி தோண்டிக்கொள்கிறீர்கள் என்று பொருள். இது நவ கிரகங்களையே அவமதிக்கும் செயல்.
4. ஜோதிட ஆலோசனையின் போது நக்கல், நையாண்டியாக பேசுவது அல்லது மிரட்டுவதுபோல் பேசுவது எல்லாம் ஜோதிடரின் மூலம் நவகிரக சாபத்தை பெறுவதற்கு வழி வகுக்கும். நல்ல மனமும் ,குணமும் உள்ள ஜோதிடர்களிம் இவ்வாறு நடந்துகொள்பவர்களுக்கு நிச்சயம் இது நடக்கும்.
5. ஜோதிட ஆலோசனை கேட்பவர் மௌனமாக அமைதியாக இருந்து ஜோதிடர் சொல்வதை மட்டும் கேட்கவேண்டும். அலட்சிய மன போக்கை தவிர்க்க வேண்டும். ஜோதிடர் ஏதாவது கெடு பலன் சொன்னால் பரிகாரம் ஏதாவது உண்டா என கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். சண்டைக்குப்போகக்கூடாது. வாக்கு வாதத்தில் ஈடுபடக்கூடாது.
6. ஜோதிடர் சொன்ன ஆலோசனையில் திருப்தியில்லையென்றால் அல்லது பிடிக்கவில்லையென்றால் அமைதியாக திரும்பி வந்துவிடவேண்டும்.
7. ஒரு ஜோதிடர் சொன்ன விசயங்களை இன்னொரு ஜோதிடரிடம் சொல்லக்கூடாது. ஜோதிடர்களை ஒப்பிட்டு பேசக்கூடாது. இது ஜோதிடருக்குள் வெறுப்புணர்ச்சியை தூண்டும். இதனால் உங்களுக்கு உரிய ஆலோசனையை அவர் வழங்க மாட்டார்.
8. ஜோதிடரிடம் சென்று எனக்கும் ஜோதிடம் தெரியும் , சும்மா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என பார்க்க வந்தேன் என்று சொல்லக்கூடாது. இப்படி சொல்வதால், ஜோதிடருக்கு உங்கள் மீது வெறுப்பு உணர்ச்சி தோன்றி எதையும் சரியாக பார்க்க மாட்டார். நவ கிரகங்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.
9. தேவை இருந்தால் மட்டும் ஜோதிட ஆலோசனை பெறுங்கள். பொழுது போக்கிற்காக ஜோதிடரை பார்க்காதீர்கள். இது வம்பை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.
10. ஜோதிடர்களுக்கு தட்சிணை வழங்குவது என்பது நீங்கள் அவர்களின் நேரத்தை எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. ஜோதிடர்களை பிச்சைக்காரர்களாக கருதாதீர்கள்.
11. வா வா என கூவி அழைக்கும் ஜோதிடர்களை தவிர்த்து, சத்தமில்லாமல் செயல்படும் நல்ல ஜோதிடர்களை தேடிப்போய் ஆலோசனை பெறுங்கள். குறிப்பாக உங்களுக்கு தெரிந்த நபர்கள் பரிந்துரை செய்யும் ஜோதிடர்களைப்போய் பாருங்கள்.
12. ஜோதிட ஆலோசனைப் பெறும்போது சொந்தக்காரர்களையோ அல்லது நெருங்கிய நண்பர்களையோ உடன் அழைத்து செல்லாதீர்கள்.

https://www.facebook.com/100000003671108/posts/2244207202256047/

மென்பொருள்களில் (Softwares) கிரகங்களின்

மென்பொருள்களில் (Softwares) கிரகங்களின்
————————————————————————
ஸ்புடங்கள், நிலைகள் மாறுபடுவது ஏன்?
———————————————————————–
நேற்று Astro Rajasekaran எழுப்பிய கேள்விக்கு விடையாகவே இந்தப் பதிவை இடுகிறேன். எதிர்வரும் ஆகஸ்ட் 22 மற்றும் 24ம் தேதிகளில் புதன் குரு, செவ்வாய் சனி ஆகியோரது இணைவுகள் (Conjunction) ஏற்படுகின்றன. அதுபற்றிய அவரது பதிவில் அவரது மென்பொருள் குறிப்பிட்டிருக்கும் நேரத்திற்கும் நமது சபரி பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்கும் வித்தியாசம் வந்தது. இது எதனால்? மென்பொருட்கள் தவறான தகவல்களைத் தருகின்றனவா? என்ற அவரது கேள்விக்கு (கேள்வி அவருடையது என்றாலும் பதில் அனைவருக்கும் பயன்படும் என்பதால்) சில விளக்கங்களை இங்கே எனது டைம்லைனிலேயே தருகிறேன்.

மென்பொருட்களை உருவாக்கும்போது கீழ்க்கண்ட காரணிகள் அதன் துல்லியத்தை நிர்ணயிக்கின்றன. 1. எபிமெரிஸ் (Ephemeris Factor) 2. நேர வித்யாசம் (Time Factor)
3. இடமத்தியக் கொள்கை(Centric Factor)

1.எபிமெரிஸ் :
———————-
எபிமெரிஸ் என்பது கிரக நிலைகளைக் கணிப்பதற்கு பயன்படுவதாகும். இதில் பல அடிப்படை வகைகள் உள்ளன. Julian 1900, Bessalian 1950, Julian 2000 போன்றவை அவற்றில் குறிப்பிடத் தக்கவையாகும். இதில் அந்த மென்பொருள் எதை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்படுகிறதோ அதற்கேற்றபடி ஸ்புடங்கள், கிரக நிலைகள் மாறுபடும். இவை ஒவ்வொன்றிற்கும் சில திருத்தங்கள் உண்டு. அதை செய்யாமல் விடுவதால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.

2. நேர வித்யாசம் :
—————————–
நேர நிர்ணயத்தைப் பொருத்தவரை யுனிவர்சல் டைம், டெரஸ்டிரியல் டைனமிக் டைம், எபிமெரிஸ் டைம் முதலிய பல நேர நிர்ணயங்கள் உள்ளன. அவற்றிற்கென்று சில திருத்தங்களும் உண்டு. அதனைச் சரியாகத் தேர்ந்தெடுக்காததாலும் தவறுகள் ஏற்படுகின்றன.

3. இடமத்தியக்கொள்கை :
——————————————
எந்த இடத்தை மத்தியமாகக் கொண்டு ஸ்புடங்களைக் கணிக்க வேண்டும் என்பதில் சில கொள்கை முறைகள் உள்ளன. பௌமத்தியக் கொள்கை, பூமத்தியக் கொள்கை, குறிப்பிட்ட இடமத்தியக் கொள்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கொள்கையைப் பொருத்தும் ஸ்புடங்கள் மாறுபடும்.

இங்கே நான் சில தரவுகளைக் கொடுத்திருக்கிறேன். அதில் 22-08-2016ல் புதனும் குருவும் ஒன்றாக இணையும் நேரத்திற்கும், 24-08-2016ல் செவ்வாயும் சனியும் ஒன்றாக இணையும் நேரத்திற்கும் நமது சபரி பஞ்சாங்கம் மற்றும் மென்பொருளில் கணிக்கப்பட்ட ஸ்புடத்திற்கும் இதர முறைப்படி கணிக்கப்பட்ட ஸ்புடத்திற்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் காணலாம். அதுமட்டுமின்றி அந்த நேரத்திற்கு நாசாவின் எபிமெரிசில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்புடங்களையும் கொடுத்திருக்கிறேன். நாசாவிற்கும் நமது கணிதத்திற்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்பதைப் பார்த்தாலே நமது பஞ்சாங்கம் மற்றும் மென்பொருளின் துல்லியத்தை நீங்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.

https://m.facebook.com/story.php?story_fbid=609013162581933&id=100004197633275

வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. வாழ்க்கையில் எதுவும் நகரவில்லை. எல்லாம் முடங்கி கிடக்கிறது என நினைப்பவர்கள் தினமும் தங்கள் ஜென்ம நட்சத்திர குறியீட்டை பார்த்து வாருங்கள் வாழ்க்கை நகரத்தொடங்கிவிடும். உதாரணத்திற்கு ரோகிணி நட்சத்திர குறியீடு தேர். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தினமும் தேர் அல்லது தேர் படத்தை பார்த்து வரவேண்டும்.
#நட்சத்திர_வடிவம்

அஸ்வினி – குதிரைத்தலை
பரணி – யோனி, அடுப்பு, முக்கோணம்
கிருத்திகை – கத்தி, கற்றை, வாள், தீஜ்வாலை
ரோஹிணி – தேர், வண்டி, கோயில், ஆலமரம், ஊற்றால், சகடம்
மிருகசீரிடம் – மான் தலை, தேங்கைக்கண்
திருவாதிரை – மனித தலை, வைரம், கண்ணீர்துளி
புனர்பூசம் – வில்
பூசம் – புடலம்பூ, அம்புக்கூடு, பசுவின்மடி
ஆயில்யம் – சர்ப்பம்,அம்மி
மகம் – வீடு,பல்லக்கு,நுகம்
பூரம் – கட்டில்கால், கண்கள், அத்திமரம், சதுரம், மெத்தை
உத்திரம் – கட்டில்கால், கம்பு, குச்சி, மெத்தை
ஹஸ்தம் – கை
சித்திரை – முத்து,புலிக்கண்
ஸ்வாதி – பவளம்,தீபம்
விசாகம் – முறம்,தோரணம்,குயவன் சக்கரம்
அனுசம் – குடை, முடப்பனை, தாமரை, வில்வளசல்
கேட்டை – குடை,குண்டலம்,ஈட்டி
மூலம் – அங்குசம்,சிங்கத்தின் வால், பொற்காளம், யானையின் துதிக்கை
பூராடம் – கட்டில்கால்
உத்திராடம் – கட்டில்கால்
திருவோணம் – முழக்கோல், மூன்று பாதச்சுவடு, அம்பு
அவிட்டம் – மிருதங்கம்,உடுக்கை
சதயம் – பூங்கொத்து, மூலிகைகொத்து
பூரட்டாதி – கட்டில்கால்
உத்திரட்டாதி – கட்டில்கால்
ரேவதி – மீன், படகு.

https://m.facebook.com/story.php?story_fbid=1919836598047622&id=100000639026701

வீடு அமையும் யோகம்

வீடு (வாங்கும் / கட்டும் ) அமையும் யோகம்..∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

ஜோதிட விதி..
*****************
1.) நான்காம் பாவக அதிபதி உச்சம் ,ஆட்சி பெறுதல்.

2.) 4ம் அதிபதியை (நீசமாக இருந்தாலும் ) குரு பார்த்தல்.

3). சந்திரனும்,சுக்கிரனும் தொடர்பு கொள்வது.

4). 11ம் பாவக அதிபதி 4 மிடத்துடன் தொடர்பு கொள்வது.

5). 4ம் பாவக தெசையில்- குரு, or சுக்கிரன் or ,சந்திரன் புத்தியில்..

6). 8 -11 பாவக அதிபதி 4மிடத்தோடு தொடர்பு கொள்வது எதிர்பாராமல் வீடு அமையும்.

7) 4,7,8,11ம் பாவக அதிபதி சுக்கிரன் தொடர்பு கொள்வது மனைவி வந்த பின் வீடு அமையும்.

8). 3,4,11ம் பாவக அதிபதி செவ்வாய் தொடர்பு கொள்வது சகோதரர்களால் வீடு அமையும்

9), 4,5,8,9,11ம் பாவக அதிபதி கேது தொடர்பு இருந்தால் உயில் மூலம் சொத்து அமையும்.

10), 4,6,11ம்பாவக அதிபதி புதன் தொடர்பு கொள்வது வங்கியில் loan மூலம் வீடு அமையும்.

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

4ம் பாவக காரகங்கள் …
_______________________

1.வீடு, 2.கல்வி
3,தாய் 4,பயணம்.
5,வாகனம் , 6.நண்பர்கள் ,
7. ஆடை, 8.கிணறு,
9,திரவப்பொருள்
10.வேத சாஸ்திரம்
11, விலங்குகள்
12 , தானியம்.

*********************************************