நான் பாசக்காரன். பாசத்தை பற்றி இன்று உங்களுடன் பேச வந்துள்ளேன்

அன்பே சிவம் ,அன்பே ஆனந்தம், அன்பே வாழ்க்கை,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

நான் பாசக்காரன். பாசத்தை பற்றி இன்று உங்களுடன் பேச வந்துள்ளேன்,

பாசம் என்பது உயிருள்ள பொருள்கள்மீது மட்டுமில்லை, உயிரற்ற பொருட்களின் மீதும் பாசம் வைக்கணும். அதை தான் கூறுகிறேன்.

பொருட்களை இது உயிருள்ளது உயிரற்றது என பிரிக்க வேண்டாம் எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள்.கண்டிப்பாக வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.

இது உயிரற்றது ,உயிர் உள்ளது என்று ஒவ்வொரு பொருட்களை நாம் சொல்கிறோம். ஆனால் அதில் ஒவ்வொன்றுக்கும் உயிர் உண்டு.

வாழ்க்கையில் நாம் எப்படி இயங்குகிறோமோ அதேபோல்தான் வாகனங்களும் இயங்குகிறது.

நான் ஒவ்வொரு தடவையும் வெளியில் செல்லும் பொழுது வீட்டை தொட்டு வணங்கி விட்டு தான் செல்வேன். அது எனக்கு வீடு கையசைத்து போய்ட்டு வா என்று கூறுவது போல் இருக்கும்.

தேவையான பொருள், தேவையற்ற பொருள் என்ற விஷயத்தை விட நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தனை பொருட்களுக்கும் ஒருமுறை நன்றி சொல்லுங்கள்.

நீங்கள் நன்றி சொல்லும் பொழுது ஒரு பாசம், ஒரு இணைவு உங்களை அடுத்த கட்ட பரிணாமத்திற்கு அழைத்து செல்லும்.

உங்கள் பேனா உங்கள் சட்டைப்பையில் இருப்பதற்கு நன்றி சொல்லுங்கள். அதன்பிறகு நீங்கள் போடும் ஒவ்வொரு கையெழுத்தும், வெற்றி பயணத்திற்கான கையெழுத்தாகும்.

நான் ஒவ்வொரு நாளும் காலையில் விழித்தவுடனும், தூங்க செல்வதற்கு முன்னும் பஞ்சபூதங்களுக்கு நன்றி சொல்வேன். கடவுளுக்கும் நன்றி சொல்வேன்.

பஞ்சபூதம் ஆன இந்த உடல் எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பது என்னுடைய ஆனந்தமான வார்த்தை.

நீங்கள் ஆனந்தமாக வாழ வேண்டுமென்றால் முதலில் நன்றி சொல்லுங்கள்,

கை தட்டுங்கள்,சந்தோஷமான ஒரு நிகழ்வை கொடுக்கும் .உங்கள் வாழ்க்கை மாறும்.

உணவு சாப்பிடும் பொழுது இந்த உணவை தொட்டு நன்றி சொல்லுங்கள். அந்த உணவு உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு சக்தியாக அமையும்.உடலுக்கு மருந்தாக சென்று உடலும் மனமும் சந்தோஷமாக இருக்கும்.

வாழ்க்கையில் எல்லா பொருட்களின் மீதும் அன்பு செலுத்துங்கள். இது வேண்டும், இது வேண்டாம் என நினைக்க வேண்டாம்.உங்களுடைய தேவையான பொருளுக்கு ஒவ்வொரு முறையும் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை கண்டிப்பாக மாறும்.

ஒரு நாள் 10 பொருட்களுக்கு நன்றி சொல்லுங்கள். அடுத்த நாட்கள் 20 பொருள்கள் உங்கள் கண்ணில் படும்.

தொலைத்தொடர்பு கோபுரங்கள் அதற்கு ஒரு நன்றி சொல்லுங்கள்.அதன் பிறகு உங்களுக்கு போன் வந்தால், அந்த இணைப்பு துண்டிக்கப் படாமல் வரும்.

இது என்னால் உணர முடிந்த ஒரு விஷயம்.

எல்லா பொருட்களின் மீதும் அன்பு செலுத்துங்கள்.

ஆனந்தமாக வாழ்வதற்கு எல்லா பொருட்களும் துணையாக இருக்கும்.

நல்லதொரு நிகழ்வே அமையட்டும் நன்றி, வணக்கம்.

கட்டுரை தொடர்பான நிகழ்வில் https://alpastrology.com/blog/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/cRpv-GzlSPI

அட்சய லக்னமும், ராகு கேது பெயர்ச்சியும்

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்னமும், ராகு கேது பெயர்ச்சியும்.
ஒவ்வொருவரும் பயப்படக்கூடிய விஷயம் ராகு-கேது.
ஜாதகத்தில் ராகு கேது பெயர்ச்சி ஆக இருந்தாலும் சரி, எல்லாரும் ராகு கேதுக்களுக்கு பயப்பட வேண்டுமா? இல்லை.

ராகு -கேது க்கள் நல்லதும் செய்யும்.
ஒரு பிரமாண்ட யோகத்தை கொடுக்கக் கூடியதும் ராகு-கேது தான்.
ராகு கேதுக்களின் விசேஷம் என்னவென்றால் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, கொடுத்தே தீரும் அவர்களுடைய சிறப்பை தான் பார்க்கப் போகிறோம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் ராகு -கேது களின் ராஜ யோகங்கள்.
ஜெனன லக்னத்திற்கு ராகு கேது தோஷம் இருந்தால் லக்னத்தில் ராகு,
7ல் கேது அவர்கள் பிறக்கும்பொழுது குடும்பத்தில் சில பிரச்சனைகள், குழப்பங்கள் உருவாகும்.

உதாரணமாக மேஷ லக்னத்தில் ஒருவருக்கு ராகு இருந்து, 7ம் இடத்தில் கேது இருந்தால் அவர்களுக்கு 20 to 30 வயது , அட்சய லக்கனம் மிதுனம்.மிதுன லக்னத்திற்கு ராகு நல்லது செய்வாரா? பிரமாண்டமான யோகத்தை செய்வார்.
மிதுன நட்சத்திரத்தில் லக்னபுள்ளி செல்லும் பொழுது அவர்கள் திசையில் ராகு புத்தியோ, ராகு திசையோ ஏற்படுமானால் அதுதான் அவர்களுடைய வாழ்க்கையில் பொற்காலம் ஆகும்.
அந்த அளவிற்கு ராகு-கேதுக்கள் வாழ்க்கையில் உயர்வையும், உச்சத்தையும் ஏற்படுத்துவார்கள்.
அட்சய லக்கனம் துலாம் லக்னமாக இருந்து, சுவாதி நட்சத்திரத்தில் சென்று 11ம் பாவ அதிபதியாக இருந்தால்
அங்கேயேயும் பிரம்மாண்டமான யோகத்தை கொடுக்கும்.
அட்சய லக்ன பத்ததி முறையில் ராகு கேதுகள் பிரமாண்ட யோகத்தையும் கொடுக்கும்.
மீண்டும் ஒரு நல்லதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://youtu.be/TGg4VQ_4j20

ஜாதகர் ஜெயில்க்கு போயிருக்காரு. என்ன காரணம்னு கேட்டாரு.

அனைவருக்கும் வணக்கம்,

இந்த நாள் இனிய நாள். வாழ்வில் எல்லோரும் எல்லா வரமும் பெறவேண்டும்.

அட்சய லக்ன பத்ததியில்நிறைய ஜோதிடர்கள்,ஜோதிட ஆய்வாளர்கள் நம்முடன் பயணித்திருக்கிறார்கள். ஜாதகருடைய லக்கனம் துலாம் லக்கனம், ALPலக்கனம் அவிட்ட நட்சத்திரம் இரண்டாம் பாதம்.

ஒரு நல்ல நிலையில் உள்ள ஜாதக ஆய்வாளர் ஒருதேதியை கொடுத்து 4.5.2017ஜாதகர் ஜெயில்க்கு போயிருக்காரு. என்ன காரணம்னு கேட்டாரு.

அவருடைய லக்கனம் துலாம் லக்கனம் ,ALP மகரம். மகரத்தில் திருவோணம் மூன்றாம் பாதம் 6ம் வீட்டை குறிக்கும்.திருவோணம் 1 திருவோணம் 2 திருவோணம் 3 மிதுனத்தை காட்டிக் கொடுக்கும். மகரம் 6ம்வீட்டைகாட்டிக்கொடுக்கும்.அதனால் ஜாதகருடையஅண்ணனுக்கும் அதேபிரச்சனை.மகரத்திற்கு மூத்த சகோதரன் விருச்சிகம்.விருச்சிகத்திற்கு மிதுனம் அட்டமாதிபதி வீடு.அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஜெயிலுக்கு போய் இருக்காங்க.

அவர்கிட்ட சொன்னதும் ஆமா அப்டினு சொன்னார். மகரத்தின் 9ம் அதிபதி புதன்,புதனுடன் 6ம் வீடாய் மிதுனம் வருது.ஒன்பதாம் வீட்டுக்கு அது பத்தாம் வீடு,9 10 சம்பந்தப்படும்போது அவருடைய அப்பாவோட கர்மமும் அங்க இணையிது.அப்ப மூணுபேரும் ஜெயிலுக்கு போயிருக்காங்க.

உங்களுடைய ஜாதகத்தில் அவிட்டம் நட்சத்திரம் 3-வது பாதத்தில் உங்களுக்கு திருமணம் நடைபெறும். 11ம் அதிபதி 4ம் அதிபதி சம்பந்தப்படுவதால்அவிட்டம் நட்சத்திரம். 3, 10 சம்பந்தப் படும்போது எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் கொடுத்தே தீரும்.

ஏன்னா கும்ப லக்னத்திற்கு 4ல இருந்து 7ம் வீட்டயும் 11-ம் வீட்டயும் பார்பாரு. 10ம் வீட்டையும் 11 ம் வீட்டையும் பார்பாரு.

அதனால் திடீர்யோகத்தைக் கொடுக்கும்,

திருமணம் நடக்கும்.இந்த ஜாதகர் பாம்பாட்டி சித்தர் கோவிலில் சரணாகதி அடைந்தால்இந்த ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.

அறம், பொருள், இன்பம்
இருக்கக்கூடிய சந்தோஷத்தையும் இருக்கக்கூடிய பொருட்களை வைத்துக்கொண்டு சந்தோஷமாக குடும்பத்தோடு வாழ்வது தான் மூன்று காலங்களும் நமக்கு உணர்த்தும் ,

அதாவது அறம் ,பொருள் ,இன்பம்.பத்தாம் அதிபதி வலுவடைந்தால் 4-ம் அதிபதி வலுவிலக்கும்.ஒவ்வொரு ஜாதகமும் ஒவ்வொரு லக்கனமும் ஒன்றுக்கு மேற்பட்ட யோகத்தை கொடுக்குமானா? கொடுக்காது.அதுவே 3ம் வீடு வலுவா இல்லனா 9ம் வீடு பலமாக இருக்கும்.தன்னுடைய முயற்சி இருந்தால் 3ம்பாகம் வலுவாக இருக்கும் 9ம் பாகம் வலுவிலக்கும். 2ம் வீடு பலமாக இருந்துச்சுன்னா திடீர்னு 8ம் வீடு அதாவது வம்பு ,வழக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள் உருவாகும்.

அதாவது ஒவ்வொரு பாகத்திற்கும் எதிர் பாவகம் வேலை செய்யும்.

மீண்டும் ஓர் இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்

நன்றி வணக்கம்.

01.02.2017இந்த நாள் இனிய நாள்.

 

 

இந்த நாள் இனிய நாள்.
01.02.2017
புதன் கிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – குடும்ப உறுப்பினர்களின் விவாதம் வேண்டாம்.
பரணி – பணவரவு, வாகனம், வீடு சார்ந்த பேச்சுவார்த்தை அமையும், மகிழ்ச்சி, கோவில் வழிபாடு, குலதெய்வ வழிபாடு.
கார்த்திகை – வீண் வார்த்தையால் விபரிதம், கணவன் மனைவி இருவரும் பொறுமையாக இருத்தல், விரயம் , கவனம் தேவை.
ரோகிணி – லாபம்.
மிருகசீரிடம் – தொழில் முன்னேற்றம் உண்டு, லாபமும் உண்டு.
திருவாதிரை – கணவன் மனைவி வீண் விவாதம் வேண்டாம்.
புனர்பூசம் – பொறுமை மிகவும் அவசியம், அவசரபட வேண்டாம்.
பூசம் – திடிர் அதிர்ஷ்மான செய்தி உண்டு.
ஆயில்யம் – கடன், உடல்நிலை கவனம், விரயம்.
மகம் – மகிழ்ச்சி.
பூரம் – புதிய வாய்ப்பு பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்துதல்.
உத்திரம் – மறக்க முடியாத நாள், கவனம் .
அஸ்தம் – சொந்த தொழில் மேன்மை உண்டு, கடன் வாங்குதல், விரயமான காலம் கவனம் .
சித்திரை – மகிழ்ச்சி, லாபம்.
சுவாதி – பதவி, புகழ், வெற்றி மகிழ்ச்சி.
விசாகம் – ஆன்மிக பயணம், மக்கள் தொடர்பு விஷயங்களிள் பங்களிப்பு.
அனுசம் – தன வரவு .
கேட்டை – வாகனத்தில் கவனம் .
மூலம் – பயணம், முன்னோர்கள் வழிபாடு, அரசு தொடர்பான நபரை சந்தித்தல், லாபம்.
பூராடம் – மன உளைச்சல்.
உத்திராடம் – பணம் சார்ந்த பிரச்சினை தலையிட வேண்டாம், அருகில் உள்ள ஐயனார் கோவில் வழிபடவும்.
திருவோணம் – எதோ பயம் வாட்டி வதைக்கும்.
அவிட்டம் – வாகனத்தில் கவனம், அலைச்சல், குழம்ப்பமான மனநிலை ஒரு முடிவும் எடுக்க முடியாது.
சதயம் – வெற்றி.
பூராட்டாதி – அரசு வகையில் லாபம், மன உளைச்சல்
உத்திரட்டாதி – தொழில் மேம்படும்.
ரேவதி – குலத்தொழில், சொந்த தொழில் மேம்பாடு ,பயணம், புதிய நபரை சந்தித்தல் .
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

ஔவையார்.

 

images (1)

பிறரை பழித்துப் பேசாதீர்

உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்களோ, அதே அளவிற்கு பிறர் மீதும்
நேசம் காட்டுங்கள். அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள்
அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும், பிறரை இழிவாக
பேசுதலும், வீண்பழி சுமத்துதலும் கூடாது. இத்தகைய செயல்களால் வீண் பகை
வளருமே தவிர, பெயருக்குக் கூட நன்மை உண்டாகாது. மேலும் இத்தகைய
குணமுடையவர்களிடம் பாசம், பரிதாபம், இரக்கம், கருணை என எத்தகைய
நற்பண்புகளும் இருக்காது.

மனிதர்களுக்கு ஏற்படும் துன்பமானது, வெளியில் எங்கிருந்தோ வருவதில்லை.
அவரவர் நடந்து கொள்ளும் விதத்திற்கேற்ப அவர்களுக்கு திரும்பக்கிடைக்கிறது.
பிறரை பழிப்பதாலும் நமக்கு துன்பம் வரும். ஆகவே, பழிச்சொல்லை விட்டு,
அனைவரிடமும் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அத்தகையவர்களே இறைவனால்
விரும்பப்படுவர்.

சிலர் மற்றவர்களை பற்றி குற்றம் சொல்லுவதையே வழக்கமாக கொண்டிருப்பர்.
பிறர் செய்யும் நல்ல செயல்களைக்கூட மாற்றி திரித்து பேசுவர். இப்படி
செய்யவே கூடாது. அடுத்தவர்களை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம்
யாரும் நெருங்க மாட்டார்கள். ஒருகட்டத்தில் அவர் தன் சுற்றத்தார்
அனைவரையும் இழந்து தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலைதான் வரும்.
இறுதிவரையில் அவருடன் சொந்தம், உறவு என யாரும் இல்லாமலேயே போய்விடுவர்.
ஆகவே, ஒருவர் எத்தகைய செயல் செய்தாலும், அதை விமர்சனம் செய்து பேசாதீர்கள்.

ஔவையார்.