லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

கட்டுரை சுருக்கம்: அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட முறை – திருமணப்பொருத்தம் – பல பொருத்தங்களில் எது முக்கியமான பொருத்தம்? – கிரகங்களின் அமைப்பும் திருமண வாழ்க்கையும் – திருமண வாழ்வில் முடிவு எடுக்க முடியாத நிலைக்கு காரணம் என்ன? – ALP ஜோதிட முறையும், சரியான தீர்வும் – திருமண பொருத்தம் வயதோட்டத்தின் படிதான் பார்க்கப்பட வேண்டும் – கர்ம வினைக்கும் திருமணப்பொருத்தத்திற்கும் உள்ள தொடர்பு – இரண்டாம் தார திருமணமும், பிரசன்னமும் – ஜோதிடம் படியுங்கள் – திருமண வயது.

அறிமுகம்

எல்லோருக்கும் ஜாதகத்தை பற்றிய தேடல் அல்லது ஜோதிடத்தை பற்றிய விழிப்பு நிலை எங்கே வருகிறது என்றால் திருமணத்தில் தான்.

அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட முறையில் திருமணப்பொருத்தம் பற்றிய ஜோதிட உண்மைகளை, அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய டாக்டர். சி. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் ஒரு காணொளியில் கூறிய விளக்கத்தை இக்கட்டுரையில் காண்போம்.

அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட முறை

அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட முறை என்பது வளரும் லக்னத்தை அடிப்படையாக கொண்டு பலன் எடுக்கும் ஓர் எளிய ஜோதிட முறை.

திருமணப்பொருத்தம்

  • ஜாதகத்தை பற்றிய தேடல் அல்லது விழிப்பு நிலை எங்கே வருகிறது என்றால் திருமணத்தில் தான்.
  • எல்லோருக்கும் மிக முக்கியமாக ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்று இல்லை.
  • ALP ஜோதிட முறையில், திருமணத்திற்கு மற்ற பொருத்தங்களோடு ALP லக்ன பொருத்தமும் ARP அட்சய ராசி பொருத்தமும் பார்க்க வேண்டும்.

பல பொருத்தங்களில் எது முக்கியமான பொருத்தம்?

  • பத்து பொருத்தம் பார்த்து செய்கிறோம். உதாரணமாக, மனப்பொருத்தம், பெயர் பொருத்தம், ராசி பொருத்தம் பார்த்து செய்கிறோம்.
  • தசா பொருத்தம் என்று ஒன்று உள்ளது. அதனை பெரும்பாலோர் பார்ப்பதில்லை.
  • மிக முக்கியமாக, பெண்ணின் ALP லக்னத்திற்கு, ஆணின் ALP லக்னம், 10 வருடத்திற்கு ஒருமுறை மாறும்போது பலன் எப்படி இருக்கும் என்று ALPக்கு (அட்சய லக்னப்பொருத்தம்) பொருத்தம் பார்க்க வேண்டும்.
  • பெண்ணின் ARP க்கு , ஆணின் ARP அட்சய ராசி பொருத்தம் பார்க்க வேண்டும்.

கிரகங்களின் அமைப்பும் திருமண வாழ்க்கையும்

  • நாம் என்ன செய்கிறோம்? அவசர கதியில் இந்த திருமண பொருத்தத்தை பார்த்துவிட்டு ஒரு பேருந்தில் ஏறுவது போல் ஏறுகிறோம்.
  • உதாரணமாக, இரண்டாம் தாரமாக நடக்கக்கூடிய திருமண வாழ்க்கை. மனப்பொருத்தம் மட்டும் பார்த்து செய்யும் போது, 24 வயதில் பையனுக்கும் பெண்ணிற்கும் கல்யாணம் நடந்து 25 வயதில் அது விவாகரத்தாகிறது.
  • கணவன் மனைவிக்கு பொருத்தம் இருந்தால் மட்டும்தான் அவர்கள் சேரவே முடியும். கிரகங்களின் அமைப்பு இருந்தால்தான் அவர்கள் சேருவார்கள்.

திருமண வாழ்வில் முடிவு எடுக்க முடியாத நிலைக்கு காரணம் என்ன?

  • திருமண வாழ்க்கையில் ஒரு பெண்ணோட வாழ்க்கையும் ஒரு ஆணோட வாழ்க்கையும்,
  • எதை வைத்து நாம் முடிவு செய்கிறோம்?
  • எதை வைத்து முடிவு செய்ய வேண்டும்?
  • அதை எப்படி முடிவு செய்ய வேண்டும்?
  • அது ஏன் முடிவாகிறது?
  • இப்படி நிறைய கேள்விகளை நாம் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தோம் என்றால், ஒரு முடிவே இருக்காது.

ALP ஜோதிடமுறையும், சரியான முடிவும்

  • திருமண வாழ்க்கையை பொறுத்த வரை, ஒரே ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன். திருமண வாழ்க்கை என்று வரும்போது, இந்த திருமண வாழ்க்கையில் வயதுக்கேற்ற ALP லக்னத்திற்கு ALP லக்னம் கண்டிப்பாக நீங்கள் பொருத்தம் பார்க்க வேண்டும்.
  • ஆனால், நாம் ஜென்ம லக்னத்துக்கு ஜென்ம லக்னம் பொருத்தம் பார்க்கிறோம். ஜென்ம ராசிக்கு ஜென்ம ராசி பொருத்தம் பார்க்கிறோம்.
  • தசாபுத்தி ஒரு நட்சத்திரத்தை நடத்தும். சுக்கிர தசை, சூரிய தசை, சந்திர தசை நடக்கிறது. இந்த தசை நடத்தக் கூடியது அட்சய ராசி, அட்சய நட்சத்திரம் என்று சொல்லுவோம். அந்த ARP அட்சய நட்சத்திரத்திற்கு பொருத்தம் பார்க்க வேண்டும். இந்த கால அளவு நீங்கள் பார்த்தால் கூட போதும்.

திருமண பொருத்தம் வயதோட்டத்தின் படிதான் பார்க்கப்பட வேண்டும்

  • உதாரணமாக, விவாகரத்து ஒரு பொண்ணுக்கோ ஒரு பையனுக்கோ நடந்துவிட்டால் காரண கர்த்தா யார்? இந்த ஜோதிடர்கள் தான்.
  • எனவே, பொருத்தம் பார்க்கும்போது சரியாக சேர்க்க வேண்டும்.
  • பொருத்தம் பார்க்கும்போது அதில் இருக்கின்ற நிறை குறைகளை சொல்ல வேண்டும்.
  • உதாரணமாக, லக்னம் இன்றைக்கு துலாம். லக்னாதிபதி சுக்கிரன் நன்றாக உள்ளார். செவ்வாய் எட்டில் அல்லது ஆறில் இருக்கிறார். இந்த ஜாதகருக்கு 23 வயதாகிறது. இங்கு திருமண பொருத்தம் திருமணத்திற்கு முன்பு வேறு, திருமணத்திற்கு பின்பு வேறு. இவை இரண்டையும் நாம் தனித்தனியாக பேச வேண்டும்.
  • எட்டில் செவ்வாய் இருந்தால், திருமணத்திற்கு பின்னர், ’திருமணத்திற்கு உங்களுடைய வீட்டில் என்ன செய்தார்கள்’ என விளையாட்டுக்காக பேசுவார். அதை கேட்கின்ற அவருடைய மனைவிக்கு கோபம் வரும். இப்படி பேச தொடங்கி, நான்கு நாட்களில் சண்டையாக மாறும். செவ்வாய் கிரகம் கோபமாக பேசும். விளையாட்டாகவும் பேசும். அது வினையாக முடியும்.
  • திருமணம் ஆகவில்லை என்றால், எதிர்பார்ப்புகள் இருக்கும். படித்த பெண்தான் வேண்டும். நான் BE மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன். எனக்கு மனைவியாக வரும் பெண்ணும் அதே கோர்ஸ் படித்திருக்க வேண்டுமென்று ஜாதகர் சொல்வார்.அப்போது என்ன நடக்கும்? அந்த 10 வருடகாலம் திருமணம் நடக்காமல் போராட்டமாக இருக்கும்.
  • பத்து பத்து வருடமாக நீங்கள் வாழ்க்கையை பிரித்து பார்த்தீர்கள் என்றாலே உங்கள் வாழ்க்கை அழகாக தெரியும். ஒரு 10 வருடம் பின்னால் சென்று பாருங்கள். உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது உங்களுக்கு புரியும்.
  • இந்த திருமண பொருத்தம் வயதோட்டத்தின் படிதான் பார்க்கப்பட வேண்டும்.
  • பொருந்தாத விஷயத்தில் பொருத்தம் எப்படி பார்ப்பது சொல்லுங்கள். உதாரணமாக, ஒரு பேனா வைத்திருக்கிறோம். அந்த பேனாவின் மூடியால் இன்னொரு பேனாவை மூட முடியுமா? அந்த இன்னொரு பேனாவுக்கென்று ஒரு பேனா மூடி உள்ளது. அதனை பொருத்தம் பார்த்து சேர்க்க வேண்டும்.
  • ஒரு ஜாதகம் பார்த்ததில் தனுசு லக்னம். இந்த பையனை திருமணம் செய்தால் அடுத்த நான்கு வருடம் இந்த பெண் கஷ்டப்படும். உதாரணமாக 2026-ல் இருந்து 2030 வரைக்கும் நன்றாக இருக்கும். 2030-ல் இருந்து 2034 வரைக்கும் நன்றாக இருக்காது. திருமணத்திற்கு தயாரா என்றால், தயார் என்று சொல்வார்கள்.
  • ஒரு ஜாதகத்தில் ஒரு ஏழு வருஷம் நன்றாக இருக்கிறது சார். 2026-ல் இருந்து 2033 வரைக்கும் நன்றாக இருக்கிறது. இந்த ஜாதகம் சரி. இது ஒரு ஏழு வருஷம். அடிப்படையாக, கணவன் மனைவிக்கு திருமணத்திற்கு பிறகு உடனே குழந்தை பிறக்கும் போது ஒரு ஏழு, எட்டு வருஷம் நன்றாக இருக்கும்.
  • இன்னொரு ஜாதகம் பார்த்தீர்கள் என்றால் முதல் மூன்று வருஷம் நன்றாகவே இல்லை. ஆனால், அடுத்த 17 வருஷம் நன்றாக இருக்கிறது.
  • இந்த மூன்று பாதைகளில் அந்த பெண் முடிவெடுக்க வேண்டும். முதல் 4 வருடம் நன்றாக இருக்க வேண்டுமா? அல்லது, முதல் 7 வருஷம் நல்லா இருக்க வேண்டுமா? அல்லது, முதல் 3 வருஷம் கஷ்டப்பட வேண்டுமா?
  • எல்லாருடைய வாழ்க்கையும் இப்படிதான் உள்ளது. பாதை எப்படி உள்ளதோ, வளைவு நெளிவு எப்படி உள்ளதோ அதன்படிதான் செல்ல வேண்டும்.

கர்ம வினைக்கும் திருமணப்பொருத்தத்திற்கும் உள்ள தொடர்பு

  • முதல் உதாரணத்தில், 4 வருடங்கள் சென்ற பின், அடுத்த 4 வருடம் கஷ்டம் வருகிறது. உடனே எனக்கு இந்த கல்யாண வாழ்க்கை இப்படி அமைந்துவிட்டது என்று பேசினால் எப்படி இருக்கும்?
  • இரண்டாவது உதாரணத்தில், அந்த பையனை திருமணம் செய்திருந்தால், முதல் ஏழு வருடங்கள் நன்றாக இருந்திருக்கும். எட்டாவது வருடம், கஷ்டம் வரும் போது, எனக்கு இப்போது திருமண வாழ்க்கையில் கஷ்டம் வந்துவிட்டது என்கிறோம்.
  • மூன்றாவது உதாரணத்தில் உள்ள, பையனை திருமணம் செய்திருந்தால், முதல் மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டிருப்பார்கள். கல்யாண வாழ்க்கையே வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு செல்வார்கள். மூன்று வருடங்களில் ஒரு புரிதலே வராது. மூன்று வருடங்கள் முடிந்த பின்னர், நான்காவது வருடத்தில் அடுத்ததடுத்து வீடு, வண்டி, வாகனம், வேலை, சொத்து, தொழில் அனைத்தும் பிரம்மாண்டமாக 17 வருடம் வாழ்க்கை செல்லும். இப்போது இந்த ஜாதகத்திற்கு பொருத்தமான அமைப்பாக இருக்கும்.
  • எல்லோருடைய வாழ்க்கையிலும் நல்லது கெட்டது இருக்கும். காலசக்கரம் சுழன்றுகொண்டே தான் இருக்கும். கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள். மேலே உள்ளவர்கள் கீழே வருவார்கள். நன்றாக இருப்பவர்கள் நன்றாக இல்லாமல் இருப்பார்கள். நன்றாக இல்லாதவர்கள் நன்றாக இருப்பார்கள். அது அவரவர் வினைப்படி வரும்.அவரவர் கர்ம வினைப்படி தான் இங்கே நடக்கும்.
  • திருமண பொருத்தம் என்பது, இந்த பாதையில் எப்படி செல்ல வேண்டும் என்பதாகும். இந்த அமைப்பை முடிந்த அளவுக்கு எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • இதில் இருக்கக்கூடிய கணவனுடைய ஜாதகத்தில் மனைவி எப்படி இருக்கிறார்? மனைவியுடைய ஜாதகத்தில் கணவன் எப்படி இருக்கிறார்? இதற்கு இது பொருந்துமா, பொருந்தாதா என்று பார்த்தால் தான் இந்த அமைப்பு இருப்பது தெரிய வரும்.
  • திருமணம் பொருத்தமே பார்க்காமல் செய்வது அவரவர் விருப்பம்.

இரண்டாம் தார திருமணமும் பிரசன்னமும்

  • இரண்டாம் தார திருமணத்தை பற்றி நாம் நிறைய விஷயம் பேசுகிறோம். உதாரணமாக, ரிஷப லக்னம். இப்போது ALP லக்னமாக ரிஷப லக்னம் / சிம்ம லக்னம் / விருச்சிக லக்னம் / கும்பம் லக்னம் – இவற்றில் ஒன்று லக்னமாக சென்றால், அது திடீர் திருமணம் நடக்கக் கூடிய லக்னமாகத்தான் நடக்கும்.
  • இப்போது இரண்டாவது திருமணம் நடக்க வேண்டும் என்று ஒருவர் வந்து கேட்கிறார். அப்போது ஒரு பிரசன்ன லக்னம் போடுகிறோம். ALP லக்னம் ரிஷபம் வந்ததென்றால், நீங்கள் கவலையே படாதீர்கள் உங்களுக்கு திடீர் கல்யாணம் நடக்கும். எதிர்பாராத கல்யாணம் நடக்கும்.எதிர்பாராத தொடர்பு இருக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் வரும். அந்த தொடர்புகளினால் உங்களுக்கு திருமணம் நடக்கும்.
  • உங்களுக்கு விருச்சிக லக்னம் வந்ததென்றால், இரண்டாவது திருமணம் நன்றாகவே இருக்கும்.
  • உங்களுக்கு சிம்ம லக்னம் இரண்டாவது திருமணம் மிகவும் நன்றாக இருக்கும்.
  • உங்களுக்கு கும்ப லக்னம் வந்ததென்றால் இருதார யோக அமைப்பு உண்டு. நீங்கள் எதிர்பார்க்கிற படி மிகவும் நன்றாகவே இருக்கும். கண்டிப்பாக திருமணம் செய்யுங்கள். கும்ப லக்னத்தில் இரண்டாம் திருமணம் வேண்டாம் என்று சொன்னால் என்ன நடக்கும்? இப்போது உங்களுக்கு கும்ப லக்னம்.ஒரு பெண் ஜாதகம் வருகிறது. இரண்டாம் தாரம் திருமணம் செய்யமாட்டேன், நான் தனியாவே வாழ்கிறேன் என்று சொல்லி ஒரு 4 வருடத்தில் கும்ப லக்னம் முடிந்துவிடும்.
  • இப்போது அடுத்தது மீன லக்னம். கிரக நிலை நன்றாக இல்லை என்றால் இரண்டாவது திருமணம் செய்யவேண்டும் என்று வந்தால், முதல் தாரம் திருமணமும் பிரச்சனையாகி, இரண்டாம் தாரம் திருமணத்திற்கு வாய்ப்புகள் இல்லாமல் 4 வருடங்கள் தள்ளி போட்டுகொண்டே செல்வார்கள். இந்த பையன் நன்றாக இல்லை. இந்த பெண் நன்றாக இல்லை என்று சொல்லி ஒரு முடிவு எடுக்க முடியாத சூழல் ஜாதகத்தில் இருக்கும்.
  • பொருத்தம் பார்க்கவில்லை என்றால் பூக்கட்டி போட்டு பொருத்தம் பாருங்கள்.
  • கும்ப லக்னம் போகும்போது இரண்டாவது தாரத்துக்கு நீங்கள் பொருத்தம் பார்க்காதீர்கள். ALP முறையில் பாருங்கள். இல்லையென்றால், மனப்பொருத்தமாக பூ கட்டி போட்டு, சாமியிடம் கேட்டு திருமணத்தை செய்யுங்கள்.
  • உதாரணமாக, மேஷ லக்னமாக இருந்தால், சனி பகவான் எங்கே உள்ளார்? ரிஷப லக்னமாக இருந்தால் குரு பகவான் எங்கே உள்ளார்? மிதுன லக்னமாக இருந்தால் செவ்வாய் எங்கே உள்ளார்? என்று பார்த்துவிட்டு ஜாதகத்தில் இருதார யோகத்தை பற்றி பேசவேண்டும்.
  • ஆனால், முதல் தார திருமணம் எப்படி அமைகிறதோ அதுபோல்தான் இரண்டாம் தாரமும் வரும். முதல் தாரத்தில் முடிவெடுக்கும்போது அவசரப்படாமல் பொறுமையாக முடிவு எடுங்கள்.

ஜோதிடம் படியுங்கள்

  • இரண்டாம் திருமணம் சார்ந்த முடிவுகள் பொறுமையாக எடுங்கள்.
  • ஒரு வருடம் போகட்டும். சில பேர் ஏழு-எட்டு- பத்து – இருபது வருடம் கழித்து முடிவெடுக்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு வருடம் கூட பொறுமையாக இருப்பதில்லை.. 1-2 வருஷம் கூட பொறுமையாக இருப்பதில்லை.
  • ஜோதிடத்தை தெரிந்துகொள்ளுங்கள், ஜாதகத்தை படித்துவிட்டு உங்களுக்கான கால அமைப்பு எப்போது வருகிறதோ அதற்கு தகுந்த வண்ணம் முடிவெடுங்கள். அவசரப்பட்டு முடிவெடுத்தீர்கள் என்றால், இரண்டாவது திருமணமும், முதல் திருமணத்தை போல் அமைந்து அதைவிட மோசமாக ஆகும்.

திருமண வயது

  • இந்த ஜாதக பொருத்தம், திருமண பொருத்தம் என்று வரும்போது, 21 வயதில் இருந்து 30 வயதிற்குள் திருமணத்தை செய்ய வேண்டிய காலம். இந்த காலகட்டத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

வீடியோ

– டாக்டர். சி. பொதுவுடைமூர்த்தி, அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட முறையை உருவாக்கியவர்.

முடிவுரை

ALP ஜோதிடமுறையில் திருமணப்பொருத்தம் பற்றிய தகவல்களை பார்த்தோம். எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நல்ல வாழ்க்கை எல்லாருக்கும் அமைய வேண்டும். திருமணம் நடக்காதவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும். நன்றி. வணக்கம். அட்சயம் வளரட்டும். ஜோதிடம் படியுங்கள், உங்கள் வாழ்க்கை மாறும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

  1. திருமணப்பொருத்தம் எப்படி பார்ப்பது?
  2. நட்சத்திரப்பொருத்தம் மட்டும் பார்த்தால் போதுமா?
  3. ALP லக்னப்பொருத்தம், ARP ராசி பொருத்தம் பார்க்கவேண்டுமா?
  4. லக்னம் மாறும்போது திருமணப்பொருத்தம் மாறுமா?
  5. பத்து பொருத்தம் மட்டும் பார்த்தால் போதுமா?
  6. தசாபுத்தி பொருத்தம் பார்க்க வேண்டுமா?
  7. திருமணப்பொருத்தத்தில், பொதுவாக எல்லோரும் செய்யும் தவறுகள் என்ன?
  8. திருமணங்கள் தாமதமாவதற்கான காரணங்கள் என்ன?
  9. நிறைய பேருக்கு திருமணம் நடக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?
  10. பொருத்தம் பார்த்து செய்யும் திருமணங்களும் தோல்வியை முடிவது ஏன்?
  11. முதல் திருமணம் தோல்வியில் முடிவடைந்தது. இரண்டாவது திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருக்குமா?
  12. இரண்டாவது திருமணம் தோல்வியை முடிவது எதனால்?

லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? – சுருக்கம்

லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? குறித்த சரியான வழிகாட்டுதலை ALP Astrology வழங்குகிறது.

மேலும் அறிய: Hindu astrology

சுருக்கமாக, லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? என்பதை அறிந்து சரியான முடிவு எடுக்க லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? உதவுகிறது.

சுருக்கமாக, லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? என்பதை அறிந்து சரியான முடிவு எடுக்க லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? உதவுகிறது.

சுருக்கமாக, லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? என்பதை அறிந்து சரியான முடிவு எடுக்க லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? உதவுகிறது.

சுருக்கமாக, லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? என்பதை அறிந்து சரியான முடிவு எடுக்க லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? உதவுகிறது.

சுருக்கமாக, லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? என்பதை அறிந்து சரியான முடிவு எடுக்க லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? உதவுகிறது.

சுருக்கமாக, லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? என்பதை அறிந்து சரியான முடிவு எடுக்க லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *