pothuvana-rasi-palangal-alp-jothidam.jpg

பொதுவான ராசி பலன்கள் அனைவருக்கும் பொருந்துமா? – அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட முறையில் ஓர் விளக்கம்.

அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிடம் – தினசரி ராசிபலன்- நம் ஜாதகம் நமக்கு சொல்லும் பலன் என்ன ? – கோச்சாரம் பார்த்தால் போதுமா? – பொதுவான பலனால் ஏற்படும் நிகழ்வுகள் – அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிடம் கூறும் பொதுபலன் ரகசியங்கள் – பலன்களில் ஜோதிடர்கள் கூறும் தகவல்கள்.

akshaya-lagna-paddhati-alp-astrology.jpg

1. அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிடம்:

அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிடம் என்பது வளரும் லக்னத்தை அடிப்படையாக கொண்டு பலன் எடுக்கும் எளிய ஜோதிட முறை.

2. தினசரி ராசிபலன்:

காலையில் எழுந்ததும் ஆறு மணிக்கு தொலைக்காட்சியில் (TV) இன்றைக்கு நம் ராசிக்கு, உதாரணமாக ,

  • மேஷ ராசிக்கு ஏதாவது சொல்லிட மாட்டாங்களா, ரிஷப ராசிக்கு ஏதாவது சொல்லிட மாட்டாங்களா என நாம் ஏதோ ஒரு விஷயத்தை நோக்கி பயணிப்போம்.
  • அதே போல் உதாரணமாக, கடன் தீரணும் அதற்கு ஏதாவது பரிகாரம் கிடைக்காதா?

இது போன்ற கேள்விகள் நம்மில் பெரும்பான்மையோருக்கு இருக்கின்றது.

3. தனிப்பட்ட ஜாதகத்தில் பார்க்க வேண்டியவை:

ஒரு வண்டி வேகமாக போகிறது, மெதுவாக போகிறது என்று சொல்கிறோமே தவிர வண்டிக்குள்,

  • எவ்வளவு உதிரி பாகங்கள் (spare parts) இருக்கு?
  • எவ்வளவு இயக்கங்கள் இருக்கு?
  • எவ்வளவு எரிபொருள் இருக்கு?
  • எவ்வளவு வேகம் இருக்கு?
  • அது செயல்படக்கூடிய Engine, (CC திறன்) Engine திறனை குறிக்கும் அளவீடு எவ்வளவு இருக்கு?

இதைப் போல் ஒருவருடைய ஜாதகத்திலும், நிறைய விஷயங்களை பார்க்க வேண்டி உள்ளது.

4. நம் ஜாதகம் நமக்கு சொல்லும் பலன் என்ன ?

  • இப்படி ஆயிரம் விஷயங்கள் இதற்குள் இருக்கு. ஆனால், நாம் என்ன செய்கிறோம். ஒரே ஒரு கோச்சார கிரகத்தின் உடைய நிகழ்வுகளை வைத்து நன்றாக இருக்கு, நன்றாக இல்லை என்று சொல்கிறோம்.
  • இந்த ராசி பலன்கள் பொதுவான தன்மையை தான் குறிக்கின்றன.

5. கோச்சாரம் பலன் பார்த்தால் போதுமா?

  • கோச்சார கிரகங்கள் வைத்து பார்க்கும் ராசி பலன்கள் ஒருநாள் நடக்கும். ஒரு மாதத்தில் 20 நாள், 25 நாள் நடக்கவில்லை என்றால் ஜோதிடத்தின் மேலோ, ஜோதிடர் மேலோ ஒரு நம்பிக்கை குறைபாடு ஏற்படும்.
  • நம் ஜாதகத்தில் தற்போது நம்மை இயக்குபவர் யார் என தெரிந்து பலன் பார்ப்பது நமக்கு பொருத்தமாக இருக்கும்.

6. பொதுவான பலனால் ஏற்படும் நிகழ்வுகள்:

  • கடினமான நாளாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும் சோர்ந்து விடக்கூடாது.
  • அதி அற்புதமான நாள் என்று சொல்லி இருப்பார். அது பொதுவான பலன். அன்றைக்கு உங்கள் கையிலோ காலிலோ அடிப்பட்டு இருக்கும். அது உங்களுக்கான தனிப்பலன். அதனை தினசரி ராசிபலன் உங்களுக்கு சொல்லாது.
  • பொதுவான பலனை நம்பி நீங்கள் ஒரு முடிவு எடுக்க முடியாது.
  • ஒருவரை நான் சந்திக்க போகிறேன். மிதுன ராசி சூப்பரா இருக்கும் என்று நான் சந்திக்க போகிறேன் என்றால், சென்ற இடத்தில் அவர் அங்கு இருக்க மாட்டார். வெளியூரில் இருப்பார்.

7. அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிடம் கூறும் பொதுபலன் ரகசியங்கள்:

  • உங்களுக்கு என்று அட்சய லக்னம் உள்ளது.
  • இந்த அட்சய லக்னம் வளர்ந்து, நகரும். அதனால், கிரகங்களின் தன்மைகள், பாவகங்களின் தன்மைகள், ஆதிபத்திய தன்மைகள் மாறும்.
  • இன்றைக்கு கிரக நிலைகள் எப்படி உள்ளது என்று பார்த்து முடிவு எடுக்க வேண்டும்
  • பொதுவான பலன்களை பார்த்து முடிவு எடுத்து சந்தோஷமாக இருப்பதும், முடிவெடுத்த பின் கஷ்டப்படுவதும், அவரவர் தலையெழுத்து.
  • இதை மாற்றிக் கொள்ள வேண்டிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.

வீடியோ லிங்க் :

இக்கட்டுரை, டாக்டர். சி. பொதுவுடைமூர்த்தி, அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட கண்டுபிடிப்பாளர் அவர்களின் வீடியோவில் இருந்து தொகுக்கப்பட்டது.

Image 2

pothuvana-rasi-palangal-alp-jothidam.jpg
pothuvana-rasi-palangal-alp-jothidam.jpg

Conclusion :

யூ டியூபில் உள்ள வீடியோக்களில், நிறைய நல்லதும் உள்ளது. நிறைய கெட்டதும் உள்ளது. அதைப் புரிந்து கொள்ள வேண்டிய, உணர வேண்டிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ஜோதிடம் படிங்க உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். வாழ்த்துகள். நன்றி.

FAQ

தினசரி ராசிபலன் சொல்வது தனிப்பட்டவருக்கா? பொதுவான பலனா?

கோச்சார பலன்கள் எவ்வாறு நமக்கு பலன் அளிக்கும்?

லக்னம் வளர வளர பலன்கள் மாறுமா?

அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிடத்தின் மூலம் எவ்வாறு பலன் பார்ப்பது?

அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட வகுப்பு, புத்தகங்கள், கன்சல்டேஷனுக்கு, மொபைல்: +91 9426645656 -ஐ தொடர்பு கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *