சித்திரை நட்சத்திரம் 1ம் பாதம்:

சித்திரை நட்சத்திரம் 1ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையில் இந்த காலம் அதிர்ஷடமான நேரம் என்பதை பார்க்கிறோம்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம் 1ம் பாதம்.

3, 8 ஆதிபத்தியம் பெறக்கூடிய செவ்வாய் உடைய நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம்.

கண்டிப்பாக பெரும் புகழையும், யோகத்தையும் கொடுக்கும்.
ஆனால் பாதகத்தையும் கொடுக்கும்.

3 என்றால் முயற்சி, வெற்றி, சந்தோஷம், லாபம் எதிர்பார்ப்பு எல்லாமே கொடுக்கும்.

யோகமான நட்சத்திரம் என்றால் 3ம் வீடு சம்மந்தப்படனும்.
3, 11 சம்மந்தப்பட்டால் வாழ்க்கையில் யோகம் உண்டு.

சித்திரை நட்சத்திரம் 1ம் பாதம் வரும்பொழுது யோகம் உண்டு.

சித்திரை நட்சத்திர அதிபதி செவ்வாய் 6, 8, 10, 12 ல் இருக்கக்கூடாது.
இருந்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்
முயற்சிகள் எல்லாம் கடனாகும்.
முயற்சிகள் எல்லாம் விரயத்தை கொடுக்கும்.
முயற்சிகள் எல்லாம் நோயை கொடுக்கும்.

6, 8, 10, 12ல் செவ்வாய் இல்லை என்றால் கண்டிப்பாக ஜாதகருக்கு அத்தனை முயற்சிகளும் யோகத்தை கொடுக்கும்.

3,8 சம்மந்தப்பட்டால் தீடீர் யோகத்தை கொடுக்கும்.
அதாவது தென்னைமரம் இவ்வுளவு நாள் வளர்ந்து காய் கொடுத்திருக்காது.
ஆனால் இப்பொழுது மழை பெய்திருந்தால் திடீர் யோகத்தை கொடுக்கும்.
எதிர்பாராத நடப்புகள் மூலமாக பெரும் யோகத்தை பெறலாம்.
ஒரே நாளில் அந்த சந்தோஷம் மறையக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

90% ஜாதகருக்கு யோகத்தை கொடுக்கும். 10% ஜாதகருக்கு யோகத்தை கொடுக்காது.

அதனால் ஜாதகர் சித்திரை நட்சத்திரம் வரும்பொழுது மிக கவனமாக
போராடக் கூடிய அமைப்பு உள்ளது.

ஒரு சந்தோஷமான யோகத்தை கொடுக்கக்கூடிய அமைப்பும் உள்ளது.

சித்திரை உடைய நட்சத்திரம் செவ்வாய் பலப்பட வேண்டும்.

ஜாதகருக்கு செவ்வாய் பலப்பட்டால் ஒரு வலிமையான அமைப்பை கொடுக்கும்.

செவ்வாய் பலப்பட்டால் தான் ஜாதகருக்கு வலிமையான தோற்றம், வலிமையான எண்ணம்,
முயற்சி ஜாதகருக்கு அவ்வுளவு சந்தோஷத்தை கொடுக்கும்.

நாம் எந்த அளவிற்கு போராடுகிறமோ அந்த அளவிற்கு முயற்சி கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரம் 1ம் பாதம் ஜாதகருக்கு கண்டிப்பாக ஒரு பெரிய மாற்றம் உண்டு.

மீண்டும் ஒரு இனிய தொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://youtu.be/026Yf4qz-sU

சித்திரை நட்சத்திரம் 2ம் பாதம் :

சித்திரை நட்சத்திரம் 2ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடை மூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம் 2ம் பாதம்.

செவ்வாய் உடைய நட்சத்திரம் 3,8 ஆதிபத்தியம் இருக்கும்.
இந்த 1 வருடம், 1 மாதம், 10 நாள் விரயத்தை கொடுக்கும்.
அதேபோல் இந்த 1 வருடம், 1 மாதம்,
10 நாள் லக்னத்தை இயக்கும்.

அதனால் ஜாதகரே பிரச்சனைகளுக்கு அடிக்களம் அமைப்பார்.
மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
செவ்வாய் 6, 8, 10,12 ல் இருக்கக்கூடாது.

ஜதாகருடைய அமைப்பில் 1,2,4, 7, 8, 12ல் செவ்வாய் இருக்கக்கூடாது.
அதனால் கன்னி லக்னத்திலோ, 2ம், 4ம், 7ம், 8ம், 12ம் வீட்டிலோ, செவ்வாய்
இருந்தால் செவ்வாய் தோஷம்.

அதனால் செவ்வாய் நிற்கக்கூடிய நட்சத்திரத்தில் 1 வருடம், 1 மாதம், 10 நாள் செல்லக்கூடிய காலகட்டத்தில் கண்டிப்பாக ஜாதகருக்கு பிரச்சனைகளை கொடுக்கும்.

வாழ்க்கை என்பது நம்முடைய பாதைகளை சாலையில் எப்படி வளைந்து நெலிந்து,
புரிதல் வந்து நேராக உள்ள சாலையில் எப்படி செல்கிறமோ ,
மேடு, பள்ளம் இல்லாத இடத்தில் சந்தோஷமாக பயணிக்கிறோம்.
நடந்து செல்லக்கூடிய பகுதி கரடு முரடாக இருந்தால் மெதுவாக செல்ல வேண்டும் என்பதுதான் அட்சய லக்ன பத்ததி.

சித்திரை நட்சத்திரம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
ஜாதகருக்கு உடல் ரீதியாக, மனரீதியாகபாதிக்கும்.

சொத்து சம்மந்தப்பட்ட விஷயங்கள்,
உடல் சம்மந்தப்பட்ட, இடம் சம்மந்தப்பட்ட, உறவுகள் சம்மந்தப்பட்ட, விஷயங்கள்
ஜாதகரை வாட்டும்.

சித்திரை நட்சத்திரம் யோகத்தை கொடுக்கும்.
அதேநேரம் அவயோகமும் ஏற்படும்.
கவனமாக இருக்க வேண்டும்.

மீண்டும் ஒரு இனிய தொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்

https://youtu.be/CCn4xMv3Od4

சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம் :

சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடை மூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம்.

ஜாதகர் வந்தால்
வருமானம் சம்மந்தப்பட்ட,
குடும்பம் சம்மந்தப்பட்ட,
திடீர் திருமணங்கள் சம்மந்தப்பட்ட,
என் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கு என்ற கேள்விகளை கேட்க வந்திருப்பார்.

என் வாழ்க்கையில் உடல்ரீதியான பிரச்சனை,
மனத்திற்கு ஒப்பான காயங்கள் இருக்கு, விபத்துகள் நடந்துள்ளது,
வண்டி வாகனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளது,
இப்படி நிறைய கேள்விகளை கேட்பார்.

ஏன்னா? துலாம் லக்னத்திற்கு 2,7க்கு உடைய மராகாதிபதி செவ்வாய் வரக்கூடிய காலகட்டத்தில் ஜாதகர் மிக மிக கவனமாக ஜாதகத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

ஜென்ம லக்னத்திலிருந் ALP லக்னம் துலாம் லக்னம்.
ஜாதகருக்கு சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம் மிகப்பெரிய யோகத்தையும் கொடுக்கும்.
அதே போல் பெரிய பாதிப்புகளையும் தரும்.

அவருடைய வாழ்க்கையில் இவ்வுளவு நாள் திருமணம் நடக்கவில்லை என்றால் திருமணம் உண்டு.
குழந்தைபேறு உண்டு.
எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு.

சித்திரை 3, 4 ம் பாதம் துலாம் லக்னம் சென்றால் வைத்தீஸ்வரர் கோவில்க்கு சென்று முத்துகுமார சுவாமி தரிசனம் செய்வது மிகச் சிறப்பு.

ஒவ்வொரு லக்னமும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் போது அவர்களுக்கு யோகம் உண்டு.

சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம் செல்லக்கூடியவர்கள் வைத்தீஸ்வரர் கோவில்க்கு ஒரு நாள் இரவு அங்கு தங்கிட்டு வந்தால் அவருடைய
நோய் நொடி, பிணி எல்லாம் நீங்கும்.

கடன் அடையவில்லை என்பவர்கள் கண்டிப்பாக வைத்தீஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

தையல்நாயகி தரிசனம் செய்வது கண்டிப்பாக யோகத்தை கொடுக்கும்.

வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படுத்துவார் முருகப்பெருமான்.

27 நட்சத்திரக்காரர்களும் முருகப்பெருமானை வணங்குவது சிறப்பு.

சித்திரை நட்சத்திரம் விரும்பக்கூடிய இடம் வைத்தீஸ்வரர் கோவில்,
பழனி மலை முருகன் கோவில்.

சித்திரை நட்சத்திரம் 3ம் பாதம் இடம் வாங்க கூடிய யோகம் உண்டு.
ஆனால் பிரச்சனைகளும் இருக்கும்.

உங்களுடைய தனிப்பட்ட ஜாதகத்தை ஆய்வு செய்ய இந்த வீடியோவின் பின்னோட்ட பதிவில் பதிவு செய்யுங்கள்.

மீண்டும் ஒரு இனிய தொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்

https://youtu.be/Z2WEq_PUxDs

சித்திரை நட்சத்திரம் 4ம் பாதம்:

சித்திரை நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

அட்சய லக்ன பத்ததி என்பது உங்களுடைய ஒவ்வொரு 10 வயதிற்கும் லக்னம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதுதான்.

ஏன் உருவாக்கினேன் என்றால் ஜென்ம லக்னம் கடகம் சுக்ர தசையில் ராகு புத்தி ஒருவருக்கு திருமணம் நடந்தது. ஒருவருக்கு திருமணம் நடக்கவில்லை. அப்பொழுதுதான் இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்தது. ஒருவருக்கு 23, மற்றொருவருக்கு 33,அதனால் தான் ஒவ்வொரு 10 வயதிற்கும் 3′ நகர்த்தி பார்த்து ஒருவருக்கு துலாம் லக்னம் மற்றொருவருக்கு விருச்சிக லக்னமாக இருந்தது.

லக்னம் மாறும்பொழுது தசா சுக்ர திசை ராகு புத்தி அப்பொழுதுதான் ஒருவருக்கு திருமணம் நடந்தது,
ஒருவருக்கு நடக்கவில்லை.
அப்பொழுதுதான் எளிமையாக எனக்கு புரிந்தது.
வயதிற்கேற்ப லக்னம் மாறும் என்பது.
அதன் பின்தான் ஆராய்ச்சி.

லக்னமும், ராசியும் வளர்வது தான் அட்சய லக்னம், அட்சய ராசி.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் துலாம் லக்னம்,சித்திரை நட்சத்திரம் 4ம் பாதம்.

சித்திரை நட்சத்திரம் 4ம் பாதம் ஒரு ஜாதகர்
வருமானம் சம்மந்தப்பட்டது,
திருமணம் சம்மந்தப்பட்டது,
வரவுகள் சம்மந்தப்பட்டது,
தீடீர் யோகங்கள் சம்மந்தப்பட்டது,
முயற்சிகள் சம்மந்தப்பட்டது,
வெளிநாடு சம்மந்தப்பட்டது,
கணவன் மனைவி உறவுகள் சம்மந்தப்பட்டது,
இப்படி நிறைய கேள்விகளை கேட்டு வந்திருப்பார்.

எல்லாம் துலாம் லக்னத்திற்கு 2,7 க்கு உடைய செவ்வாய்.

நவாம்ச லக்னம் சித்திரை 4 என்பது விருச்சகத்தில் இருக்கும்.
கொஞ்சம் கவனமாக கடந்து செல்லக்கூடிய காலம்.

வாய், கண், காது சம்மந்தப்பட்டது,
உடல் உபாதைகளை கொடுக்கக்கூடிய
அமைப்பு ஏற்படுத்தப்படும்.

ஒரு நட்சத்திர பாதம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் கடந்து போகும்.

1 வருடம், 1 மாதம், 10 நாள் பிரச்சனையாக இருக்குமா? இல்லை.
அதை 405 நாள் 45 நாள் ஆக பிரிக்கலாம்.
45 நாள் 5 நாள்.
5 நாள் 13 மணி நேரம்.
13 மணி நேரம் 1 மணி 30 நிமிடம்,
1 மணி 30 நிமிடம் 10 நிமிடம் ஆக பிரிக்கலாம்.

ஒரு நிமிடத்தை 9 வகையான கிரகங்கள் இயக்கும் என்பதுதான் உண்மை.

எல்லா ஜோதிடர்களும் ஒரே மாதிரியான பலன் வர வேண்டும் என்பதற்காகதான் அட்சய லக்ன பத்ததி கொண்டு வந்தேன்.

சித்திரை நட்சத்திரம் 4ம் பாதம் போகக்கூடிய காலகட்டத்தில் திருமணம் சம்மந்தபபட்ட கேள்விகள் அதிகமாக இருக்கும்.
இடம், குடும்ப உறுப்பினர், வருமானம் சம்மந்தப்பட்ட கேள்விகள் அதிகமாக இருக்கும்.

செவ்வாய் எங்கு இருக்கிறதோ அது சம்மந்தப்பட்ட கேள்விகள் அதிகமாக இருக்கும்.

நன்றி, வணக்கம்.

https://youtu.be/VmGK-brGyUc

அஸ்தம் நட்சத்திரம் 1ம் பாதம்:

அஸ்தம் நட்சத்திரம் 1ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் அஸ்தம் நட்சத்திரம் 1ம் பாதம்.

இன்றைக்கு ஒரு ஜாதகருக்கு கன்னி லக்னம் போகும் பொழுது அஸ்தம் நட்சத்திரம் 1ம் பாதம் போகக் கூடிய காலகட்டத்தில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

google Playstore ல் ALP Astrology சாப்ட்வேர் உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து அதில் நீங்கள் பிறந்த ஊர், பிறந்த இடம், பிறந்த தேதி, கொடுத்தால் உங்களுடைய ஜென்ம லக்னம் வரும்.
அடுத்தாதாக ALP லக்னம் வரும்.

அதில் அஸ்தம் நட்சத்திரம் வந்தால் கிரகங்கள் உடைய பாதாசாரங்கள் வரும் அதில் ALP அஸ்தம் 1 வரும் பொழுது கன்னி லக்னம் வரும் பொழுது லாபாதிபதி நட்சத்திரமான அஸ்தம் நட்சத்திரம் இருக்கக்கூடிய 1 வருடம், 1 மாதம், 10 நாள் நவாம்சம் D9. அது செல்லக்கூடிய அஸ்தம் அட்டமாதிபதியான மேஷத்தில் செல்லக்கூடிய ஒரு பகுதி, 1 வருடம், 1 மாதம், 10 நாள்.

அப்பொழுது 8, 11 லக்னம் இயங்கினால் தீடீர் யோகத்தையும் , திடீர் பாதகத்தையும் பண்ணக்கூடிய அமைப்பு உள்ளது.

அஸ்தம் நட்சத்திரம் 1ம் பாதம் கவனமாக இருக்க வேண்டும்.

வெளிநாடு சம்மந்தப்பட்டது,
வெளியூர் சம்மந்தப்பட்டது,
இதுநாள் வரைக்கும் எதுவும் நடக்கவில்லை என்று சொல்லக்கூடிய ஜாதகம் அஸ்தம் 1ம் பாதம் தீடீர் யோகத்தை கொடுக்கும்.

உதாரணமாக ஒரு அரசியல்வாதி எல்லா பொருட்களையும் இழந்துவிடுவார்.
வீடு சம்மந்தப்பட்டது.
இடம் சம்மந்தப்பட்டது.
எல்லாம் இழந்த பிறகு அஸ்தம் நட்சத்திரம் 1ம் பாதம் அவருடைய வாழ்க்கையில் சரியாக வந்து,
சந்திரன் பலமாக அமைதிருந்தால்
கண்டிப்பாக அவருடைய அரசியல் வாழ்க்கை MP ,MLA , Minister, இல்லை CM கூட ஆகலாம்.

லக்னத்தில் உள்ள ஆதிபத்தியங்கள் உங்களுக்கு பலமாக இயக்கும்.

நவகோள்களும், 12 ராசிகளும், 108 நட்சத்திர பாதங்களும் , நீங்கள் நல்லது செய்யும் வரை நல்லது செய்யும்.
கெட்டது செய்யும் வரை கெட்டது செய்யும்.
அதனுடைய பிரதிபலன்கள் அப்படியே கொடுக்கும்.

யாருக்கும் தெரியாமல் நல்லது செய்தால் அதனுடைய பிரதிபலன்கள் இரு மடங்காக வரும்.
அதுவே கெட்டது செய்தால் அதனுடைய பிரதிபலன் இரண்டு மடங்காக வரும்.

பஞ்சம பாதங்கள் ஜாதகரை நோக்கி பயணிக்கும் என்பது தான் உண்மை.
யார் வழியாக , எந்த கிரகங்கள் இயக்கும் என்பதை நவகோள்கள் தான் முடிவு செய்யும்.

குழந்தைகள் மூலமாக, நண்பர்கள் மூலமாக, மனைவி மூலமாக, தொழில் மூலமாக, பணத்தின் மூலமாக,
எப்படி வேண்டுமானலும் நல்லது கெட்டதுகளை கொடுக்கும்.

மீண்டும் ஒரு இனிய தொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்

https://youtu.be/jqLauUpNbg4